பித்ரு தோஷம், பித்ரு சாபம் இவைகளால் ஒரு குடும்பத்திற்கு தீராத கஷ்டங்கள் வரும் என்பது பலருக்கும் தெரியும். இந்த பித்ரு தோஷம் விளகுவதற்கு ஆன்மீகத்தில் ஜோதிடத்தில் ஏகப்பட்ட பரிகாரங்கள் இருக்கிறது. ஒருவருடைய ஜாதக கட்டத்தில் பித்ரு தோஷம் எந்த அளவுக்கு சக்தி வாய்ந்ததாக இருக்கிறது என்பதை பார்த்து, ஜோதிடர்கள் இதற்கான பரிகாரத்தை சொல்லுவார்கள்.
உங்களுடைய ஜாதக கட்டத்தில் எவ்வளவு சக்தி வாய்ந்த பித்ரு தோஷம், பித்ரு சாபம் இருந்தாலும் சரி, முன்னோர்களுடைய சாபத்திலிருந்து தப்பித்து, அவர்களுடைய ஆசியை பெறுவதற்கு ஒரு எளிமையான பரிகாரம் உள்ளது. ஒரு பொதுப்படையான ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை தான் இன்றைய பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
பித்ரு சாபம் நீங்க
இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான பொருள் நவதானியம். அளவு உங்களுடைய விருப்பம் தான். பசு மாட்டிற்கு உருண்டை பிடித்துக் கொடுக்கும் அளவுக்கு வாங்கிக் கொள்ளுங்கள். எல்லா தானியங்களையும் சேர்த்து கலந்து மளிகை கடைகளிலேயே இந்த நவதானிய பொட்டலம் உங்களுக்கு கிடைக்கும். வாங்கி வந்த நவதானியத்தை கவரில் இருந்து பிரித்து விட்டு ஒரு வெள்ளை துணியில் கொட்டி மூட்டையாக கட்டிக் கொள்ளுங்கள்.
உங்கள் வீட்டில் யார் மூத்தவர்கள் அதாவது உங்களுடைய பாட்டி இருக்காங்களா, அல்லது தாத்தா இருக்காங்களா, அல்லது அம்மா அப்பா தான் உங்க வீட்ல மூத்தவங்களா, யாருன்னு தேர்ந்தெடுத்துக்கோங்க. அவர்களுடைய கையால்தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். மூத்தவர்கள் தூங்கும் போது, முன்னோர்களை நினைத்து இந்த நவதானிய முடிச்சை கையில் வைத்துக்கொண்டு, அறியாமல் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டு, இந்த முடிச்சை தலைமைக்கு அடியில் வைத்து தூங்கி விட வேண்டும்.
எந்த கிழமையில் வேண்டுமென்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். மறுநாள் விடிந்ததும் இந்த முடிச்சை எடுத்து ஒரு அலமாரியில் வைத்து விடுங்கள். நீங்கள் சென்று சுத்தபத்தமாக குளித்து விடுங்கள். பிறகு இந்த முடிச்சுக்குள் இருக்கும் நவதானியத்தை தண்ணீரில் போட்டு இரண்டு மணி நேரம் ஊற வைத்து விட்டு, பிறகு இதில் கொஞ்சமாக வெல்லம் சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
இதை சுலபமாக இப்போது உருண்டை பிடிக்கலாம். பசு மாட்டிற்கு கொடுக்கும் அளவுக்கு சின்ன சின்ன உருண்டைகளாக பிடித்து ஒரு டப்பாவில் போட்டு எடுத்துக் கொண்டு போய் உங்கள் கையாலேயே பசு மாட்டுக்கு வாயில் வைத்துவிட, பித்ரு சாபம் குறையும் என்று சொல்லப்பட்டுள்ளது.
இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் இந்த. உருண்டையை நீங்கள் பசு மாட்டிற்கு கொடுக்கக்கூடிய நேரம் ராகு கால நேரமாக இருக்க வேண்டும். எந்த கிழமையில் பரிகாரத்தை செய்தாலும் தவறு கிடையாது. ஆனால் இந்த உருண்டைகளை அந்த பெரியவர்களின் கையாலேயே பசு மாட்டிற்கு கொடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே: ராம நவமி அன்று வாங்க வேண்டிய பொருள்
குறிப்பு ராகு காலம் மறந்துடாதீங்க. இந்த எளிமையான ஆன்மீகம் சொல்லும் பரிகாரம் நிச்சயமாக உங்களுடைய வாழ்வில் ஏதாவது ஒரு நன்மையை கொண்டு வந்து சேர்க்கும் என்ற இந்த தகவலுடன், இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.