- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஅதிசக்தி வாய்ந்த முருகனின் ஒரு வரி மந்திரம்

அதிசக்தி வாய்ந்த முருகனின் ஒரு வரி மந்திரம்

- Advertisement -

இந்த கலியுகத்தில் கடவுளை நேரில் பார்க்க முடியுமா. நிச்சயமாக முடியாது. ஆனால் கடவுளை நிச்சயமாக நம்மால் உணர முடியும். நம்முடைய துன்பங்களை தீர்த்து வைக்க கலியுகத்தில் கடவுள் நேரடியாக வரமாட்டார். எதாவது ஒரு மனித ரூபத்தில் தான் நமக்கு உதவி செய்வார். அந்த வகையில் உங்களுடைய கஷ்டங்கள் தீருவதற்கு முருகப்பெருமானின் அருள் கிடைக்க வேண்டும்.

அந்த முருகனை நீங்கள் உணர வேண்டும் என்றால், ஏதாவது ஒரு ரூபத்தில் முருகன் உங்களுக்கு காட்சி அளிக்க வேண்டும் என்றால், அந்த தரிசனத்தை நீங்கள் பெற வேண்டும் என்றால், என்ன செய்ய வேண்டும். அதி சக்தி வாய்ந்த இந்த ஒரு வரி மந்திரத்தை மூன்று நாட்கள் தொடர்ந்து படிக்க வேண்டும். இன்று செவ்வாய்க்கிழமை முருகனை நினைத்து இந்த மந்திரத்தை பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து சொல்ல துவங்கி பாருங்கள். அடுத்த மூன்று நாட்களில் உங்களுக்கு வாழ்வில் நம்ப முடியாத அதிசயங்கள் பல நடக்கும்.

- Advertisement -

அது என்ன மூன்று நாள் கணக்கு. 8-4-2025 இன்று செவ்வாய்க்கிழமை. அடுத்த மூன்று நாட்கள் கழித்து, 11-3-2025 வெள்ளிக்கிழமை பங்குனி உத்திரம் வரவிருக்கிறது. முருகப்பெருமானுக்கு மிக விசேஷமான திருவிழா கொண்டாட்டங்கள், கோலாலமாக நடக்கும். சக்தி வாய்ந்த நாள் இது. இந்த நாளில் நீங்கள் முருகனை உணர வேண்டும் என்றால், இந்த மூன்று நாட்களும் செய்ய வேண்டிய எளிமையான ஒரு முருகர் வழிபாட்டையும், முருக மந்திரத்தையும் தான் இன்று நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த மந்திரத்தை நீங்கள் இதற்கு முன்பு உச்சரித்திருக்க மாட்டீர்கள்.

இந்த வரிகள் உங்களுக்கு தெரியும் என்றால் சந்தோஷம். தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள். இன்றிலிருந்து பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு முருகன் பாதங்கள் சரணடைவோம் என்று, நம்பிக்கையோடு, சரணாகதியோடு இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும். பல சக்தி வாய்ந்த தேவர்கள் முனிவர்கள் சித்தர்கள் எல்லாம் இந்த மந்திரத்தை உச்சரித்து முருக தரிசனத்தை பெற்றுள்ளார்கள், என்பது குறிப்பிடத்தக்கது. சரி சரி அந்த முருகன் மந்திரம் தான் என்ன இன்னும் சொல்லவில்லையே. அந்த முருக மந்திரத்தை இப்போது உடனே பார்த்து விடுவோம்.

- Advertisement -

அதிசக்தி வாய்ந்த முருக மந்திரம்

சரவணபவ, குக சண்முகா, சரணம் சரணம்

செவ்வாய், புதன், வியாழன், மூன்று நாட்களும் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். ஏதாவது ஒரு மணி நேரம் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது, இந்த மந்திரத்தை முருகனின் முன்பு அமர்ந்து மனமுருகி சொல்ல வேண்டும். கணக்கு கூட வைக்க வேண்டாம். 5 நிமிடம், 10 நிமிடம் இந்த மந்திரத்தை சொன்னால் போதும்.

- Advertisement -

அந்த சரவணபவ சண்முக குகன் அப்பன் முருகன் உங்களை நெருங்க துவங்கி விடுவான். பிறகு அவனை உணரக்கூடிய பாக்கியம் உங்களுக்கு கிடைக்கும். முருகன் என்னை நெருங்கி விட்டான் என்று நான் எப்படி தெரிந்து கொள்வது.

பூஜை செய்யும் போதே உடம்பு சிலிர்க்கும். கண்களில் இருந்து தண்ணீர் வரும். உங்களை சுற்றி யாருமே இருக்க மாட்டார்கள். ஆனால் மன தைரியம் அதிகமாக இருக்கும். யாரோ உங்களுடைய தோலை தொட்டு உங்களுக்கு ஆறுதல் சொல்வது போல ஒரு உணர்வு ஏற்படும். சந்தன வாசம், பன்னீர் வாசம், விபூதி வாசம் அப்படி வீசும்.

இதையும் படிக்கலாமே: ஏகாதசி அன்று செய்ய வேண்டிய சக்தி வாய்ந்த அம்மன் வழிபாடு

அந்த ஒரு நொடி முருகன் உங்களை வந்து அடைந்து விட்டதாக தான் அர்த்தம். உங்களுக்கு முருக நம்பிக்கை இருக்கா. அடுத்த மூன்று நாட்கள் இதை முயற்சி செய்து பாருங்கள். மூன்று லோகத்தில் எவரும் அறியாத ஒரு மகிழ்ச்சி உங்களை வந்து சேரும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்