இந்த பூமியில் மனிதனாகப் பிறந்த யார் வேண்டும் என்றாலும் முருகனை பக்தியோடு நம்பிக்கையோடு வழிபாடு செய்யலாம்.உள்ளம் உருக நம்பிக்கையோடு முருகா முருகா முருகா என்று நீங்கள் கூப்பிட்டால், கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து அருள் புரியும் சக்தி கலியுகத்து கடவுள் முருகப்பெருமானுக்கு இருக்கிறது.
இருந்தாலும் ஜோதிட ரீதியாக ஒரு சில ராசிகளுக்கு பிறக்கும்போதே முருகனின் அருள் கூடுதலாக இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. அந்த குறிப்பிட்ட 7 ராசிகள் என்னென்ன. நீங்கள் பங்குனி உத்திரத்திற்கு எப்படி விரதத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவலை தான் இன்றைய பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
இந்த வழிபாட்டை, இந்த குறிப்பிட்ட ஏழு ராசிகள் மட்டும்தான் செய்ய வேண்டுமா. மற்ற முருக பக்தர்கள் செய்யக்கூடாதா? என்று கேட்டால், அதெல்லாம் எதுவுமே கிடையாது. எல்லோரும் இந்த வழிபாட்டை செய்யலாம். இருந்தாலும் தவறாமல் கட்டாயம் செய்ய வேண்டிய ஏழு ராசிகள் இருக்கிறார்கள். அவர்கள் செய்தால், அவர்களுடைய வாழ்க்கையில் இருக்கும் தீராத துன்பங்கள் உடனடியாக விலகும்.
வாழ்க்கையில் அவர்கள் மேலும் மேலும் முன்னேறி செல்ல, முருகன் அவனுடைய கரங்களை கொடுத்து அதிவிரைவாக மேலே தூக்கி விடுவான். சரி, முருகனின் அம்சத்தில் பிறந்த அந்த 7 ராசிகள் யார் யார். இன்று தொடங்கி பங்குனி உத்திரம் விரதத்திற்கு இந்த குறிப்பிட்ட 7 ராசிகள் எப்படி விரதம் இருப்பது ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
முருகனுக்கு பிடித்த ராசிகள்
விசாகம், கிருத்திகை, பூரம், உத்திராடம். இந்த நான்கு நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தால் நீங்கதாங்க ரொம்ப ரொம்ப அதிர்ஷ்டசாலி. மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சகம் இந்த ராசியில் நீங்கள் பிறந்திருந்தால் நீங்களும் மிக மிக அதிர்ஷ்டசாலி.
மேலே சொன்ன நட்சத்திரத்தை நீங்கள் கொண்டிருந்தாலும் சரி, மேலே சொன்ன ராசியை நீங்கள் கொண்டிருந்தாலும் சரி, நீங்கள் மாதம் தோறும் வரக்கூடிய சஷ்டி, விசாகம், கிருத்திகை இந்த நாட்களில் தொடர்ந்து முருகரை வழிபாடு செய்து வந்தால், உங்களுடைய வாழ்க்கையில் அபரிமிதமான வெற்றி இருக்கும். சரி இப்போது பங்குனி உத்திரம் வரப்போகிறது இந்த பண்டிகை வழிபாட்டை எப்படி மேற்கொள்வது.
இன்று முதல் அசைவம் சாப்பிடாமல், மனதில் அடுத்தவர்களுக்கு தீங்கு நினைக்காமல், மனது முழுவதும் அந்த முறுமுகனை நிலைநிறுத்தி, தினமும் அதிகாலை வேளையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி “ஓம் சரவணபவ” என்ற முருகனின் மந்திரத்தை 6 முறை சொல்லி, முருகரை வணங்கி, உங்களுடைய கோரிக்கையை வையுங்கள்.
இன்றைய தினம் 8-4-2025 செவ்வாய்க்கிழமை இரவு தூங்க செல்வதற்கு முன்பு முருகனை நினைத்து, ஒரு மஞ்சள் துணியில் ஒரு ரூபாய் நாணயத்தை முடிந்து, முருகன் பாதத்தில் வைத்து விடுங்கள். உங்கள் மனதில் இருக்கும் கோரிக்கையை முருகனிடம் சொல்லிவிடுங்கள். வரும் மூன்று நாட்களும் முருகனை நினைத்து மிக மிக எளிமையாக விரதத்தை மேற்கொண்டு பங்குனி உத்திரத்தன்று இந்த காணிக்கையை கொண்டு போய் வீட்டு பக்கத்தில் இருக்கும் முருகன் கோவில் உண்டியலில் செலுத்தி விட்டால், உங்களுடைய துன்பங்கள் அந்த நாளோடு தொலைந்து போகும்.
இதையும் படிக்கலாமே: அதிசக்தி வாய்ந்த முருகனின் ஒரு வரி மந்திரம்
சக்தி வாய்ந்த வழிபாடு தான் மிக மிக எளிமையான வழிபாடு. அனைவரும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். எதை நினைத்து 1 ரூபாயை முடிந்து வைக்கிறீர்களோ அந்த வேண்டுதல் நிச்சயம் மூன்று நாட்களில் நிறைவேறும் அதிசயம் நடக்கும். மேலே சொன்ன நட்சத்திரக்காரர்களும், மேலே சொன்ன ராசிகளைக் கொண்டவர்களும் கட்டாயம் இந்த வழிபாட்டை மேற்கொள்வது உங்கள் வாழ்க்கைக்கு ரொம்ப ரொம்ப நல்லது. முருகனை வணங்குவோம். வாழ்க்கையில் எந்த ஒரு பயமும் இல்லாமல் பயணிப்போம் என்ற இந்த ஒரு தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.