வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய பங்குனி உத்திரம் என்பது பலவிதமான வேண்டுதல்களை நிறைவேற்றக்கூடிய ஒன்றாகவே திகழ்கிறது. முருகப்பெருமானை வழிபாடு செய்தாலும், சிவபெருமானை வழிபாடு செய்தாலும், பெருமாளை வழிபாடு செய்தாலும், மகாலட்சுமியை வழிபாடு செய்தாலும் நமக்கு அளவில்லாத பலன்கள் கிடைக்கும் என்று கூறலாம். அந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்த பங்குனி உத்திர நாள் அன்று பணவசியம் ஏற்படுவதற்கு செய்ய வேண்டிய ஒரு தாந்திரீகத்தைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
நமக்கு எது வேண்டுமோ அது நம்மிடம் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்றால் அதை நாம் வசியம் செய்ய வேண்டும். அப்படி நம்மிடம் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று பலரும் நினைக்கக் கூடிய ஒன்றுதான் பணம். பணத்தை வசியம் செய்வதற்கு பலவிதமான வழிபாடுகளும் பரிகாரங்களும் இருக்கின்றன. அதிலும் தாந்திரீக பரிகாரத்தை செய்வதன் மூலம் அதன் பலன் அதிக அளவில் நமக்கு கிடைக்கும்.
அந்த வகையில் பங்குனி உத்திர நாளன்று நாம் தீபம் ஏற்றி வழிபாடு செய்யும்பொழுது இந்த ஒரு தாந்திரீகத்தை சேர்த்து செய்தோம் என்றால் நமக்கு பண வசியம் என்பது உண்டாகும். நம்மிடம் இருக்கக்கூடிய பண பற்றாக்குறை அனைத்தும் நீங்கி தாராளமான பண வரவு ஏற்படும். இதற்கு நாம் பங்குனி உத்திர நாள் அன்று எந்த நேரத்தில் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றுகிறோமோ அப்பொழுது செய்ய வேண்டும். இதற்காக நமக்கு பண வசியத்தை ஏற்படுத்தக்கூடிய கிராம்பு, ஏலக்காய் மற்றும் பச்சை கற்பூரம் இவை மூன்றும் வேண்டும்.
வீட்டு பூஜை அறையில் கண்டிப்பான முறையில் காமாட்சியம்மன் விளக்கு அல்லது அஷ்டலட்சுமி விளக்கு என்று இருக்கும். இந்த விளக்கை வெறும் தரையில் வைத்து நாம் ஏற்ற மாட்டோம். அதற்காக ஒரு தாம்பாள தட்டை வைத்து அதற்கு மேல்தான் விளக்கை வைத்து ஏற்றுவோம். அப்படி விளக்கை வைத்து ஏற்றும் பொழுது அந்த விளக்கிற்கு அடியில் ஆறு ஏலக்காய், 6 கிராம்பு மற்றும் ஒரு துண்டு பச்சை கற்பூரத்தை வைத்து அதற்கு மேல் விளக்கை வைத்து தீபம் ஏற்ற வேண்டும்.
இந்த தீபம் குறைந்தது அரை மணி நேரமாவது எரிய வேண்டும். பிறகு குளிர வைத்து விடுங்கள். குளிர வைத்தபிறகு விளக்கிற்கு அடியில் இருக்கக்கூடிய இந்த மூன்று பொருட்களையும் எடுத்து வெள்ளை, மஞ்சள், பச்சை, சிவப்பு இந்த நான்கு நிறத்தில் ஏதாவது ஒரு நிற துணியை எடுத்து அதில் வைத்து மூட்டையாக கட்டி நாம் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். ஒரு முறை மட்டும் இந்த தாந்திரீகத்தை நாம் பின்பற்றினால் போதும் நம்மிடம் இருக்கக்கூடிய பண பற்றாக்குறைகள் அனைத்தும் நீங்கும், பணவரவில் இருக்கக்கூடிய தடைகள் விலகும், பணவரவு அதிகரிப்பதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும்.
இதையும் படிக்கலாமே:வருமானம் அதிகரிக்க பங்குனி உத்திர முருகன் வழிபாடு
இந்த தாந்திரீக பரிகாரத்தை வெள்ளிக்கிழமை அன்று செய்வது என்பது சிறப்பு. அதிலும் பங்குனி உத்திரம் சேர்ந்து வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று நாம் செய்யும் பொழுது அதன் பலன் 10 மடங்கு அதிகமாக கிடைக்கும். முழுமனதோடு இந்த தாந்திரீகத்தை செய்து பண வசியத்தை ஏற்படுத்துவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.