நாளைய தினம் 11-4-2025 வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் பங்குனி உத்திரத்திம். உங்களுடைய வீட்டில் வருமானம் சம்பந்தப்பட்ட, பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏதாவது இருந்தால், நாளைய தினம் இந்த குறிப்பிட்ட நேரத்தில் முருகனை வழிபாடு செய்து பாருங்கள். வருமானத்தில் இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் விலகும்.
கொஞ்சம் கொஞ்சமாக வருமானம் உயரத் தொடங்கி விடும். அடுத்த வருட பங்குனி உத்திரத்திற்குள், நீங்களும் இந்த சமுதாயத்தில் நிதி நிலைமையில் ஒரு உயர்ந்த அந்தஸ்தை பெறுவீர்கள். வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உரிய தினம். சுக்கிரனுக்கு உரிய தினம். இந்த வெள்ளிக்கிழமையோடு பங்குனி உத்திரம், நாளைய தினம் சேர்ந்து வரப் போகிறது. வெள்ளிக்கிழமையில் வந்திருக்கும் பங்குனி உத்திர நாளில் முருகனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
வழக்கம்போலதான் 6 நெய் தீபங்கள் ஏற்ற வேண்டும். 6 வெற்றிலைக்கு மேல், நெய் தீபம் ஏற்றி சுக்கிரனை, மகாலட்சுமியை, முருகரை வழிபாடு செய்ய வருமானத்தில் இருக்கும் தடை விலகும் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த விளக்கை ஏற்றும் போது முருகனுக்கு நெய்வேதியமாக டைமண்ட் கற்கண்டுகளை வைக்க வேண்டும்.
முருகனுக்கு ஆறு விளக்கு ஏற்றி வைத்துடைமண்ட் கற்கண்டுகளை பிரசாதமாக வைத்து தீப தூப ஆராதனைகளை காண்பித்து, முருகப்பெருமானின் பாதத்தை தொட்டு வணங்கிக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கும் முருகப்பெருமானின் திருவுருவப்படத்தில், முருகர் பாதத்தை தொட்டு வணங்கும்போதே, உங்களுடைய துன்பங்கள் உடனடியாக தீரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே: கடன் தீர்க்கும் பங்குனி உத்திர தீப வழிபாடு
சரிங்க, இந்த விளக்கை எந்த நேரத்தில் ஏற்ற வேண்டும். வெள்ளிக்கிழமை வரக்கூடிய சுக்கிர ஹோரையில் ஏற்ற வேண்டும். காலை 6 டு 7, மதியம் 1 டு 2, இரவு 8 டு 9, இந்த 3 மணி நேரத்தில் உங்களுக்கு எது சௌகரியமான நேரமோ, அந்த நேரத்தில் நாளைய தினம் முருகர் வழிபாட்டை மேற்கொண்டால், வருமானம், பணம், கடன் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு கிடைக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.