- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகேட்கும் வரம் தரும் சித்திரை சோமவார விரதம்

கேட்கும் வரம் தரும் சித்திரை சோமவார விரதம்

- Advertisement -

ஒவ்வொரு திங்கட்கிழமையை சோமவாரம் என்று கூறுவது உண்டு. ஒவ்வொரு திங்கட்கிழமையும் சிவபெருமானுக்கு உரிய கிழமையாக கருதப்படுகிறது. அதிலும் சோமவார விரதம் என்றதும் நம் நினைவிற்கு வரக்கூடியது கார்த்திகை மாதம் தான். கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய சோமவார நாளன்று விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்பவர்களுக்கு சிவபெருமானின் அருளால் மோட்சம் உண்டாகும் என்றும், கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை நிலவும் என்றும் கூறப்படுகிறது. அதற்கு இணையாக தான் சித்திரை மாதத்தில் வரக்கூடிய சோமவார விரதமும் திகழ்கிறது. நாம் என்ன வரம் கேட்டு இந்த சோமவார விரதத்தை மேற்கொள்கிறோமோ அந்த வரத்தை சிவபெருமான் அருள்வார் என்று கூறப்படுகிறது. அந்த சித்திரை சோம வார விரதத்தை எந்த முறையில் இருக்க வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

சித்திரை சோமவார விரதம்

சிவபெருமானுக்கு உரிய நாளாக கருதக்கூடியது திங்கட்கிழமை என்று நம் அனைவருக்குமே தெரியும். அப்படிப்பட்ட திங்கட்கிழமை அன்று சிவபெருமானை முழுமனதோடு நினைத்து நாம் விரதம் இருந்தோம் என்றால் சிவபெருமானின் அருளால் நாம் கேட்ட வரம் அப்படியே கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் சித்திரை மாதத்தின் முதல் சோமவாரம் என்பது சித்திரை மாதத்தின் முதல் நாளான ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வருகிறது. அன்றைய தினத்தில் சிவபெருமானை நினைத்து விரதம் இருக்கும் முறையைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விரதம் இருக்க வேண்டும். அன்றைய தினம் முழுவதும் வெறும் தண்ணீரை மட்டுமே அருந்தி விரதம் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. வயதில் மூத்தவர்களோ, மருந்து சாப்பிட வேண்டும் என்று நிலையில் இருப்பவர்களோ பழங்களை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் சித்திரை சோமவார விரதம் என்பது தண்ணீரை மட்டும் அருந்தி இருக்க வேண்டிய ஒரு விரதமாக திகழ்கிறது. அந்த வகையில் விரதம் இருந்தால் தான் நாம் கேட்ட வரம் விரைவிலேயே கிடைக்கும்.

மாலை 6:00 மணிக்கு மேல் வீட்டில் இருக்கக்கூடிய ஸ்படிகலிங்கம், பானலிங்கம் போன்ற லிங்கத்திற்கு, நந்தி பகவானுக்கும் பன்னீரால் அபிஷேகம் செய்து கொள்ளுங்கள். பிறகு நெய்வேத்தியமாக பால், சர்க்கரை பொங்கல் போன்றவற்றை வைக்க வேண்டும். பிறகு சிவபெருமானின் படத்திற்கு அல்லது லிங்கத்திற்கு வில்வ இலைகளால் பின்வரும் சிவபெருமானின் இந்த ஒரு மந்திரத்தை கூறி 108 முறை அர்ச்சனை செய்ய வேண்டும்.

- Advertisement -

அர்ச்சனை செய்து முடித்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி உங்களுடைய வரத்தை கேட்டு வழிபாட்டை நிறைவு செய்து கொள்ள வேண்டும். இந்த முறையில் சித்திரை மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு சோமவார நாள் அன்றும் நாம் சிவபெருமானை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்தோம் என்றால் சிவபெருமானின் அருளால் நாம் கேட்ட வரம் கேட்டபடி கிடைக்கும்.

மந்திரம்

“ஓம் சம்போ சிவ சம்போ”

இதையும் படிக்கலாமே:தமிழ் புத்தாண்டு வேல் வழிபாடு.

முழுமனதோடு சிவபெருமானை நினைத்து இந்த ஒரு சிறப்பான விரதத்தை மேற்கொள்பவர்களுக்கு அவர்கள் கேட்ட வரம் கேட்டபடி கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்