- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalராஜயோகம் தரும் சங்கடஹர சதுர்த்தி தீபம்

ராஜயோகம் தரும் சங்கடஹர சதுர்த்தி தீபம்

- Advertisement -

எங்கும் நீக்கமற நிறைந்திருக்க கூடிய தெய்வமாக திகழக்கூடியவர்தான் விநாயகப் பெருமான். எந்த தெருவிற்கு சென்றாலும் அந்த தெருவில் ஏதாவது ஒரு இடத்தில் விநாயகர் பெருமான் இருப்பார். அந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்த தெய்வமாக திகழக்கூடியவர் தான் விநாயகப் பெருமான். அப்படிப்பட்ட விநாயகர் பெருமானை நாம் வழிபாடு செய்வதற்கு உகந்த நாளாக திகழ்வதுதான் சங்கடஹர சதுர்த்தி. சங்கடஹர சதுர்த்தி நாளன்று நாம் விநாயகப் பெருமானை வழிபாடு செய்யும்பொழுது நீங்கள் நாட்களாக நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்களும் படிப்படியாக விலக ஆரம்பிக்கும். அப்படிப்பட்ட நாளில் ராஜ யோகம் பெறுவதற்கு ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

சங்கடஹர சதுர்த்தி தீபம்

தெருவெல்லாம் வீற்றிருக்கக் கூடிய தெய்வமாக திகழ்ந்தாலும் எவ்வளவு கோவில்கள் இருந்தாலும் அரச மரத்தடியில் இருக்கக்கூடிய விநாயகப் பெருமானுக்கு சக்திகள் அதிகம் என்று கூறப்படுகிறது. அரச மரத்தடியில் இருக்கக்கூடிய விநாயகர் பெருமானை தொடர்ச்சியாக வழிபட்டு வலம் வருபவர்களுக்கு அவர்கள் வேண்டியது கிடைக்கும் என்று கூறியும் கேள்விப்பட்டிருக்கிறோம். அதிலும் குறிப்பாக குழந்தை பாக்கியம் வேண்டி வலம் வருவது திருமணம் நடக்க வேண்டும் என்று வலம் வருவது போன்ற விஷயங்களுக்கு அரச மரத்தடி பிள்ளையார் மிகவும் சிறப்பு வாய்ந்தவராக திகழ்கிறார். அப்படிப்பட்ட பிள்ளையாரை நாம் எந்த முறையில் தீபம் ஏற்றி வழிபட்டால் ராஜயோகம் உண்டாகும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த தீபத்தை ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி மாலை நேரத்தில் ஏற்ற வேண்டும். அன்றைய தினம் சங்கடஹர சதுர்த்தி என்பது காலை 11:57 க்கு ஆரம்பித்து மறுநாள் மதியம் 1:24க்கு நிறைவடைகிறது. அதனால் மாலை நேர வழிபாடாக திகழக்கூடிய சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டை ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி புதன்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். வீட்டிலும் வழிபாடு செய்யலாம் ஆலயத்திற்கு சென்றும் வழிபாடு செய்யலாம். எட்டு கொழுக்கட்டைகளை செய்து அதை விநாயகப் பெருமானுக்கு நெய்வேத்தியமாக வைப்பது என்பது மிகவும் சிறப்பு. இதை ஆலயத்திற்கு வரக்கூடிய சிறு குழந்தைகளுக்கு தருவதன் மூலம் நம் வீட்டில் இருக்கக்கூடிய குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக அமையும்.

இதோடு சேர்த்து நம்முடைய வீட்டில் நாம் ஒரே ஒரு தீபத்தை ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை ஏற்றுவதற்கு நமக்கு ஒரு இலை வேண்டும். அந்த இலை தான் மரங்களுக்கெல்லாம் அரசனாக திகழக்கூடிய அரச மர இலை. ஒரே ஒரு அரசமர இலையைப் பறித்து வந்து அதை சுத்தம் செய்து அதன் நுனிப்பகுதியில் சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். அதன் காம்பு பகுதி இருக்கும் அல்லவா? அதற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்து நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு விநாயகப் பெருமானை மனதார நினைத்துக் கொண்டு தீபம் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

பிறகு விநாயகர் அகவல், விநாயகரின் 108 போற்றி போன்றவற்றை பாராயணம் செய்ய வேண்டும். சங்கடஹர சதுர்த்தி நாளன்று இந்த தீபத்தை ஏற்றி வைத்து விநாயகப் பெருமானை நாம் வழிபாடு செய்யும்பொழுது விநாயகப் பெருமானின் அருளால் நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி ராஜ யோகம் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:மைத்ரேய முகூர்த்தத்துடன் சேர்ந்து வரும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு
நம்முடைய வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கு எதுவெல்லாம் தடைகளாக இருக்கிறதோ அவை அனைத்தையும் தகர்த்தெறிந்து ராஜ யோகமான வாழ்க்கை வாழ்வதற்கு முழு மனதோடு விநாயகப் பெருமானுக்கு இந்த ஒரு தீபத்தை ஏற்றினால் போதும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்