பொதுவாக சங்கடஹர சதுர்த்தி என்பது விநாயகர் பெருமானுக்கு உகந்த நாள் என்று நம் அனைவருக்குமே தெரியும். அப்படிப்பட்ட சங்கடஹர சதுர்த்தி நாளன்று விநாயகர் பெருமானிடம் நம்முடைய சங்கடங்கள் தீரவேண்டும் என்று வழிபாடு செய்வதுண்டு. அன்றைய நாளில் மைத்ரேய முகூர்த்தமும் வருகிறது. மைத்ரேய முகூர்த்தம் என்பது செவ்வாய் பகவானோடு தொடர்புடையதாக திகழக்கூடியது. மைத்ரேய முகூர்த்தத்தில் கடன் தொகையில் சிறிதளவு திருப்பி செலுத்துவதன் மூலம் விரைவிலேயே கடன் பிரச்சினை தீரும் என்று கூறி கேள்விப்பட்டிருக்கிறோம்.
சங்கடங்களை தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தி நாளன்று கடனை தீர்க்கக் கூடிய மைத்ரேய முகூர்த்தமும் சேர்ந்து வருவதால் அன்றைய நாளில் நாம் செய்யக்கூடிய விநாயகர் வழிபாடு நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கடன் தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கும். அந்த வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி புதன்கிழமை அன்று விநாயகப் பெருமானுக்கு உகந்த தேய்பிறை சதுர்த்தி நாளான சங்கடஹர சதுர்த்தி என்பது வருகிறது. மேலும் அன்றைய தினத்தில் இரவு 8 மணி 27 நிமிடத்தில் இருந்து இரவு 10 மணி 41 நிமிடம் வரை மைத்ரேய முகூர்த்தம் என்பது இருக்கிறது. பொதுவாக மைத்ரேய முகூர்த்தத்தில் நாம் வாங்கிய கடனிலிருந்து சிறிய தொகையாவது திருப்பி செலுத்துவதன் மூலம் அந்த கடன் தொகை விரைவில் தீரும் என்று கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். பலருக்கும் அனுபவபூர்வமாகவே நடத்திருக்கிறது. அந்த நேரத்தில் நாம் செய்யக்கூடிய ஒரு எளிமையான விநாயகர் வழிபாடு என்பது நம் வாழ்வில் இருக்கக்கூடிய கடன் பிரச்சினையை முற்றிலும் நீக்கும்.
இந்த வழிபாட்டிற்கு நமக்கு ஒரு ரூபாய் இருந்தால் போதும். மைத்ரேய முகூர்த்த நேரத்தில் வலது உள்ளங்கையில் ஒரு ரூபாயை வைத்துக்கொண்டு கண்களை மூடி விநாயகப் பெருமானிடம் உங்களுடைய கடன் பிரச்சினை முற்றிலும் தீர வேண்டும் என்று முழுமனதோடு வேண்டிக் கொள்ள வேண்டும். பிறகு விநாயகப் பெருமானின் இந்த ஒரு மந்திரத்தை முழு மனதோடு குறைந்தபட்சம் 10 நிமிடத்தில் இருந்து அதிகபட்சம் 20 நிமிடம் வரை நிறுத்தி நிதானத்துடன் கூற வேண்டும்.
இப்படி கூறி முடித்த பிறகு மறுபடியும் உங்களுடைய கடன் பிரச்சினை தீர வேண்டும் என்ற வேண்டுதலை முன்வைத்து அந்த ஒரு ரூபாயை வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய விநாயகருக்கு முன்பாக வைத்து விடுங்கள். உங்களுடைய கடன் பிரச்சினை எப்பொழுது தீர்வுகிறதோ அப்பொழுது அந்த ஒரு ரூபாயை எடுத்துக் கொண்டு போய் அருகில் இருக்கக்கூடிய விநாயகர் ஆலயத்தில் இருக்கும் உண்டியலில் சேர்த்து விட வேண்டும்.
மந்திரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லாம் க்லௌம் கம் தோரண கணபதயே நமஹ
இதையும் படிக்கலாமே:ருணத்தை நீக்கும் சங்கடஹர சதுர்த்தி
மிகவும் அதிசக்தி வாய்ந்த இந்த நாளில் விநாயகப் பெருமானை இந்த முறையில் வழிபாடு செய்பவர்களுக்கு எவ்வளவு பெரிய கடனாக இருந்தாலும் அந்த கடன் படிப்படியாக தீரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.