தலைமுடி கொத்து கொத்தாக உதிர்ந்து கொண்டே வந்தால், நாளடைவில் முடி மெலிந்து போய்விடும். இப்படி அதிகம் உதிரும் தலைமுடியை நிறுத்தி, மீண்டும் நன்கு வளர செய்வதற்கு வெந்தயம் நல்ல மருந்தாக இருக்கும். வெந்தயத்தை பயன்படுத்தி எப்படி தலைமுடியை உதிரவிடாமல் செய்வது? என்னும் அழகு குறிப்பு சார்ந்த தகவல்களை தொடர்ந்து இந்த பதிவின் மூலம் அறிவோம் வாருங்கள்.
தலைமுடி உதிர்வதை தடுத்து நிறுத்துவதற்கு முதலில் 50g வெந்தயத்தை அடி கனமான வாணலியில் சேர்த்து மிதமான தீயில் லேசாக ஒரு நிமிடம் மட்டும் வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஆறியதும் ஒரு மிக்சர் ஜாரில் சேர்த்து நைசாக பவுடர் போல அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். கடைகளில் வாங்கும் வெந்தயத்தூள் தரமாக இருக்குமா? என்பது தெரியாது எனவே இப்படி நீங்களே தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அது தான் நல்ல ரிசல்ட் கொடுக்கும்.
வெந்தயத்தூள் ஹேர் பேக் போடுவதற்கு தேவையான பொருட்கள் :
வெந்தயத்தூள்0 – ஒரு டீஸ்பூன்
பாதாம் எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்
தயிர் – தேவையான அளவு
இரண்டு டீஸ்பூன் அளவிற்கு பாதாம் எண்ணெயை ஒரு பவுலில் எடுத்துக் கொள்ளுங்கள். பாதம் எண்ணெய்க்கு பதிலாக ஆலிவ் எண்ணெய், டீ ட்ரீ ஆயில், கருஞ்சீரக எண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் இதில் ஏதாவது ஒன்றையும் நீங்கள் பயன்படுத்தலாம். எனினும் இவற்றை காட்டிலும் பாதாம் எண்ணெயை பயன்படுத்துவது நல்ல பலன் தரும். எண்ணெயுடன் தயார் செய்து வைத்துள்ள வெந்தயத்தூள் ஒரு டீஸ்பூன் அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இந்த கலவையை பேஸ்ட் போல செய்வதற்கு எவ்வளவு தேவையோ, அவ்வளவு தயிர் சேர்த்துக் கொள்ளுங்கள்.
தயிர் சேர்க்க விரும்பாதவர்கள் அல்லது ஆஸ்துமா, சைனஸ் போன்ற தொந்தரவுகள் இருப்பவர்கள், தயிருக்கு பதிலாக வெறும் தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள், பரவாயில்லை. இப்பொழுது நன்கு கலந்து வைத்து இந்த பேஸ்டை தலை முழுவதும் ஸ்கால்ப் பகுதியில் இருந்து நுனி வரை எல்லா இடங்களிலும் தடவ வேண்டும். ஒரு ஐந்து நிமிடம் நன்கு மசாஜ் செய்து தடவி தலையை கொண்டை போல கட்டிக் கொள்ளுங்கள். 30 நிமிடம் நன்கு ஊற விட வேண்டும். வெந்தயம் நல்ல குளிர்ச்சி பொருந்திய ஒரு பொருள். உச்சந்தலையில் இருக்கும் சூட்டை தணித்து, குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வெந்தயம் சேர்க்கிறோம். மேலும் பாதாம் எண்ணெயுடன், வெந்தயம் சேரும் பொழுது தலைமுடியின் வலுவிழந்த வேர்க்கால்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்கும். இதனால் உதிர்வது விரைவிலேயே கட்டுப்படும்.
இதையும் படிக்கலாமே:
பணம் சேர குபேரவசிய பரிகாரம்
தயிர் சேர்ப்பது பொடுகு தொல்லை இருந்தால், அவற்றை எளிதாக நீக்கும் மேலும் தலைமுடியை மென்மையாக வைத்துக் கொள்ளவும் இது உதவும். தயிரில் லாக்டிக் அமிலம் இருப்பதால் முடிக்கு நல்ல ஊட்டச்சத்து கிடைத்து, மிருதுவாகவும் மாறும். 30 நிமிடம் நன்கு ஊறியதும், அதன் பிறகு நீங்கள் குளிர்ந்த தண்ணீரில் தலையை அலசி நன்கு காய விடுங்கள். இப்படி தொடர்ந்து வாரம் ஒரு முறை செய்து வர ஓரிரு மாதங்களில் தலைமுடி உதிர்வது கட்டுப்பட்டு முற்றிலும் நின்றுவிடும். அதன் பிறகு நீங்கள் தொடர்ந்து உங்களுடைய தலைமுடியை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள, இரண்டு வாரத்திற்கு ஒருமுறை இதனை பயன்படுத்தினால் இனி முடி உதிராமல், நன்கு வளர துவங்கும்.