- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகுரு சுக்ர பஞ்சமி வழிபாடு

குரு சுக்ர பஞ்சமி வழிபாடு

- Advertisement -

ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய பஞ்சமி திதி என்பது வாராகி அம்மனுக்கு விசேஷமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த உலகத்தின் கண்கண்ட தெய்வமாக திகழக்கூடியவளாக தான் வாராகி அம்மன் திகழ்கிறார். அப்படிப்பட்ட வாராகி அம்மனை நாம் முழுமனதோடு வழிபாடு செய்யும்பொழுது நம் வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தையும் தாயாக இருந்து நமக்கு தீர்த்து வைப்பாள் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட வாராஹி அம்மனுக்குரிய பஞ்சமி திதி என்பது ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி வியாழக்கிழமை அன்று தொடங்கி ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நிறைவடைகிறது. அந்த நாளில் நாம் செய்ய வேண்டிய வாராகி வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

குரு சுக்ர பஞ்சமி வழிபாடு

விசுவாவசு வருடம் பிறந்து வரும் முதல் பஞ்சமி திதியாக இந்த திதி திகழ்கிறது. மேலும் இந்த நாளில் நாம் வாராகி அம்மனை சில சூட்சமமான முறையில் வழிபாடு செய்யும்பொழுது வாராகி அம்மனின் அருள் அன்றைக்கு மட்டுமல்ல இந்த வருடம் முழுவதுமே நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். அப்படி வாராகி அம்மனின் அருள் பரிபூரணமாக கிடைத்து சிறப்பான வாழ்க்கையை வாழ்வதற்கு செய்ய வேண்டிய வழிப்பாட்டு முறையை பற்றி தான் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

பஞ்சமி திதி என்பது ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி மதியம் 1:24 மணிக்கு ஆரம்பித்து ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் 2:26 மணி வரை இருக்கிறது. அதனால் இந்த பஞ்சமியை குரு சுக்கிர பஞ்சமி என்று கூறுவது உண்டு. இந்த நாளில் நாம் வாராஹி அம்மனை வழிபாடு செய்வதற்கு உகந்த நேரமாக வியாழக்கிழமை மாலை 3 மணியிலிருந்து 4 மணி அல்லது 5:40 மணியிலிருந்து 9 மணிக்குள் செய்யலாம். வெள்ளிக்கிழமை செய்பவர்களாக இருக்கும் பட்சத்தில் விடியற்காலையில் 3:50 மணியிலிருந்து 7 மணி வரை செய்யலாம்.

இந்த குரு சுக்கிர பஞ்சமி நாளன்று வாராகி அம்மனுக்கு நாம் எப்பொழுதும் வழிபாடு செய்யும்பொழுது தீபம் ஏற்றுவோம் அல்லவா? அந்த தீபத்தை ஏற்றும்பொழுது ஒரு சூட்சுமமான முறையை பின்பற்ற வேண்டும். நாம் தீபம் ஏற்றும் பொழுது தரையில் வைத்து ஏற்ற மாட்டோம். கண்டிப்பாக முறையில் ஒரு தாம்பாளத்தை வைப்போம். அந்த தாம்பாளத்தில் கொண்டைக்கடலையையும் வெள்ளை மொச்சையும் சரிசமமாக வைத்து அதற்கு மேல் நாம் தீபம் ஏற்றும் பொழுது வாராகி அம்மனின் அருளோடு குரு மற்றும் சுக்கிர அருளையும் பெற முடியும்.

- Advertisement -

மேலும் அன்றைய தினத்தில் வாராகி அம்மனுக்கு நாம் செம்பருத்தி பூவால் மாலை தொடுத்து போடுவதன் மூலம் நாம் விரும்பிய வரம் நமக்கு கிடைக்கும். மாலையாக போட இயலவில்லை என்றால் கூட பரவாயில்லை ஒரே ஒரு பூவை மட்டுமாவது வாராகி அம்மனின் பாதத்தில் சமர்ப்பணம் செய்ய வேண்டும். மேலும் அன்றைய தினம் வாராகி அம்மனுக்கு நெய்வேத்தியமாக மாதுளம் பழம் முத்துக்களில் தேனை கலந்து வைக்க வேண்டும். அதேபோல் கருப்பு உளுந்தில் சுண்டல் செய்து வைப்பதன் மூலமும் நமக்கு நல்ல பலன் கிடைக்கும். இப்படி செய்து முடித்த பிறகு வாராகி அம்மனின் மூல மந்திரத்தை 27 முறை உச்சரித்து கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே:குபேர பஞ்சமி தீபம் ஏற்றும் முறை

வாராகி அம்மனுக்குரிய பஞ்சமி திதி வியாழக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் சேர்ந்து வருவதால் இந்த அற்புதமான நாளை நாம் பயன்படுத்தி வழிபாடு செய்யும்பொழுது வாராகி அம்மன் மற்றும் குரு, சுக்கிர அருளையும் பரிபூரணமாக பெற முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்