- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதூங்கும் போது சொல்ல வேண்டிய பெருமாள் மந்திரம்

தூங்கும் போது சொல்ல வேண்டிய பெருமாள் மந்திரம்

- Advertisement -

எம்பெருமானே சரணாகதி என்று சனிக்கிழமை அன்று பெருமாள் வழிபாடு செய்பவர்களுக்கு, நிச்சயமாக பெருமாள் ஏமாற்றத்தை கொடுக்க மாட்டார். இன்றைய தினம் சனிக்கிழமை. இன்று இரவு தூங்க செல்வதற்கு முன்பு பெருமாளை மனதில் நிறுத்தி கையில் ஒரு துளசி இலையை வைத்து இந்த மந்திரத்தை 11 முறை சொன்னாலே போதும். பண கஷ்டங்கள் எல்லாம் பறந்து போகும்.

உங்கள் கஷ்டத்தை தீர்க்க வந்திருக்கும் அந்த ஒரு வரி பெருமாள் மந்திரம் என்ன. அதை எப்படி உச்சரிப்பது ஆன்மீகம் சார்ந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா. இன்று சனிக்கிழமை. பெருமாளுக்கு உகந்த நாள். முடிந்தால் இரண்டு துளசி இலைகளை கையில் எடுத்துக் கொள்ளுங்கள். துளசி இலையில் பெருமாள் நிரந்தரமாக வாசம் செய்வதாக ஐதீகம்.

- Advertisement -

இரவு தூங்க செல்வதற்கு முன்பு கை கால் முகம் மட்டும் கழுவிக் கொண்டு, வடக்கு திசை நோக்கி அமர்ந்து கொள்ளுங்கள். உள்ளங்கைகளில் துளசி இலைகளை வைத்து, மூடிக்கொள்ளுங்கள். பெருமாளை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். உங்கள் கையில் இருக்கும் துளசி இலையில் பெருமாள் இருக்கிறார் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். பிறகு இந்த மந்திரத்தை 27 முறை சொல்லுங்கள்.

பெருமாள் மந்திரம்

ஓம் ஸ்ரீ ஹரி விஷ்ணு, ஹரி ஓம் !
ஓம் கோவிந்தாய நமஹ !

- Advertisement -

இரண்டு வரிகளையும் ஒன்றாக சேர்த்து ஒரு முறை படிக்கும் போது, 1 முறை கணக்கு வைத்துக் கொள்ளவும். மொத்தமாக 27 முறை இந்த மந்திரத்தை சொல்லி முடித்துவிட்டு கையில் இருக்கும் துளசி இலையை தலையணைக்கு அடியில் வைத்து தூங்க வேண்டும். என்னுடைய கடன் பாரம் எல்லாம் குறைய வேண்டும். வருமானம் அதிகரிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டு இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

மறுநாள் காலை எழுந்தவுடன் அந்த துளசி இலைகளை எடுத்து குளிக்கின்ற தண்ணீரில் போட்டு, பிறகு “கோவிந்தா கோவிந்தா” என்ற நாமத்தைச் சொல்லிஅந்த தண்ணீரில் நீங்கள் குளித்து விட வேண்டும் இவ்வளவுதான் பரிகாரம். சனிக்கிழமை பெருமாள் கோவிலில் இருந்து எடுத்துவரப்பட்ட துளசியை வைத்து இந்த பரிகாரத்தை செய்வது அதீத சிறப்பு. அல்லது உங்கள் வீட்டில் இருக்கும் துளசி இலைகளை வைத்து இந்த பரிகாரத்தை செய்யலாம்.

- Advertisement -

பூஜை அறையில் பெருமாளுக்கு போட்டிருப்பீர்கள் அல்லவா அந்த துளசி இலைகளை எடுத்து இந்த பரிகாரத்தை செய்யலாம். எங்கள் வீட்டில் துளசி இலைகள் இல்லை என்றால் என்ன செய்வது. துளசி இலைகளுக்கு பதில் 5 ரூபாய் நாணயத்தை உள்ளங்கைகளில் வைத்து இந்த பரிகாரத்தை செய்யலாம். மறுநாள் காலை அந்த நாணயத்தை எடுத்து குளிக்கின்ற தண்ணீரில் சிறிது நேரம் போட்டு எடுத்து விடுங்கள். பிறகு அந்த நாணயத்தை சுப செலவுகளுக்காக நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த எளிமையான பரிகாரம் உங்கள் பண கஷ்டத்தை ஏதாவது ஒரு வகையில் குறைக்கும்.

இந்த சனிக்கிழமை இந்த பரிகாரத்தை செய்து அடுத்த ஒரு வாரத்தில், உங்களுடைய பண கஷ்டங்கள் குறைய இறைவன் ஏதாவது ஒரு வழியை காட்டினால், அடுத்த வாரம் வரும் சனிக்கிழமையில் பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி இலைகளை வாங்கிக் கொடுத்து, வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: பணம் சேர குபேரவசிய பரிகாரம்

பெருமாள் கோவிலில் தரும் பிரசாதத்தை, துளசி இலைகளை வாங்கி எடுத்து வந்து அடுத்த வார சனிக்கிழமை தலையணை அடியில் வைத்து தூங்கி பாருங்கள். மேலும் மேலும் நன்மைகள் நடந்து கொண்டே இருக்கும். குடும்பத்தில் நிம்மதி பல மடங்கு பெருகும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்