ஆமாங்க, இன்றைய சூழ்நிலையில் நம்முடைய இந்திய மதிப்பில், ரூபாய் கணக்கில் பணத்தை சம்பாதித்தால், நிச்சயமாக ஒரு சந்தோஷமான வாழ்க்கை வாழ முடியாது என்ற சூழ்நிலைதான் இருக்கிறது. அந்த அளவுக்கு விலைவாசிகள் எல்லாம் உயர்ந்து விட்டது. எவ்வளவுதான் ஓடி ஓடி உழைத்தாலும், வரக்கூடிய சம்பாத்தியம் போதவில்லை. இன்னும் வரும் காலத்தில் நாமும் செல்வந்தர்களாக மாற வேண்டும் என்றால் டாலர் டாலராகத்தான் பணத்தை சம்பாதிக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும் போல.
இன்றைய பொருளாதார நிலை அப்படி தான் சென்று கொண்டிருக்கிறது. இருப்பினும் நமக்கு பெருசாக பேராசை வேண்டாமே. வரக்கூடிய வருமானம் நிரந்தரமாக இருக்க வேண்டும். அதில் கொஞ்சம் சேமிப்பு வேண்டும். கொஞ்சம் ஆரோக்கியம் வேண்டும். மன நிம்மதி வேண்டும். குடும்பத்தில் சந்தோஷம் வேண்டும். இவையெல்லும் ஒரு சேர கிடைக்க வேண்டும் என்றால் நாங்கள் என்ன செய்வது?
உங்க ராசிப்படி உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய தெய்வத்தை சின்ன டாலராக வாங்கி கழுத்தில் அணிந்து கொள்ளுங்கள். தங்கத்தில் வாங்கணும், வெள்ளியில் வாங்கணும், என்றெல்லாம் அவசியம் கிடையாது. பத்து ரூபாய்க்கு கோவில் வாசலில் சுவாமி டாலர் கிடைக்கும். அதை வாங்குங்க. அதை வாங்கி நேரா கோவிலுக்கு உள்ள போங்க.
வெற்றிலை பாக்கு பூ பழத்தோடு இந்த டாலரையும் வைத்து அர்ச்சனை செய்து அந்த கோவிலிலேயே அமர்ந்து அந்த சுவாமி டாலரை, நல்லது நடக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு கழுத்தில் கட்டிக் கொண்டால் போதும். நிச்சயமாக உங்களுடைய வாழ்க்கையில் நல்லது நடக்கும். உங்கள் ராசி படி உங்களுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய அந்த தெய்வம் என்ன தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
இப்படி சுவாமி டாலரை பெண்கள் அணியலாமா. மாதவிடாய் நாட்களில் இது கழுத்தில் இருக்கலாமா. கணவன் மனைவியாக ஒன்றாக இருக்கும்போது இந்த டாலர் கழுத்தில் இருக்கலாமா, என்ற சந்தேகம் சில பேருக்கு இருக்கும். அன்றாட வாழ்க்கையில் நாம் மேற்கொள்ள கூடிய விஷயங்கள் எதுவுமே நம்முடைய இறை வழிபாட்டிற்கு எதிரானவை கிடையாது.
மனசாட்சிக்கு விரோதமாக ஏதேனும் நீங்கள் தவறு செய்வதாக இருந்தால் மட்டும் தான் இறைவனைப் பார்த்து பயப்பட வேண்டும். மற்றபடி மனிதனுடைய வாழ்க்கையில் நடக்கும் பிறப்பு தீட்டு, இறப்பு தீட்டு தாம்பத்திய தீட்டு எதற்குமே கடவுள் கோவித்துக் கொள்ள மாட்டார் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
மேஷம்
மேஷ ராசி அன்பர்களே மகாலட்சுமியினுடைய சின்ன டாலரை வாங்கி உங்களுடைய கழுத்தில் அணிந்து கொள்ளுங்கள். தினமும் ஏதேனும் ஒரு மகாலட்சுமி மந்திரத்தை சொல்லி கடவுளை வழிபாடு செய்ய உங்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு முருகன் வழிபாடு சிறப்பான பலனை தரும். முருகனை சின்ன டாலராக வாங்கி கழுத்தில் அணிந்து கொள்ளுங்கள். தினமும் ஏதேனும் ஒரு முருகன் மந்திரத்தை சொல்லி முருகனை வழிபட உங்களுக்கு அதிர்ஷ்ட அடிக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் ராமர் சீதை ஒன்றாக இருக்கும் படி ஒரு டாலரை வாங்கி உங்களுடைய கழுத்தில் அணிந்து கொண்டால், உங்களுக்கான அதிர்ஷ்டம் கிடைக்கும். ராமா ராமா என்ற மந்திரத்தை உச்சரிக்க உங்களுக்கான நன்மை நடக்கும்.
கடகம்
கடக ராசி காரர்கள் பெருமாள் மகாலட்சுமி ஒன்றாக சேர்ந்து இருக்கும் டாலரை வாங்கி கழுத்தில் அணிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு பிடித்த பெருமாள் மந்திரத்தை தினம் தோறும் சொல்லி வர நன்மை நடக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் எந்த அம்மன் டாலரை வாங்கி வேண்டும் என்றாலும் கழுத்தில் கட்டிக் கொள்ளலாம். சாந்தமாக இருக்கும் அம்மனை தேர்ந்தெடுத்து ஒரு டாலர் வாங்கி கழுத்துல கட்டிக்கோங்க. ஓம் சக்தி பராசக்தி என்று சொன்னால் கூட உங்களுக்கு அனுதினமும் நன்மை நடக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் விநாயகர் திருவுருவம் போட்ட ஒரு டாலரை வாங்கி கழுத்தில் போட்டுக்கோங்க. விநாயகரது ஏதேனும் ஒரு வரி மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்தால் உங்களுக்கான நன்மைகள் வந்து சேரும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் வள்ளி தெய்வானையோடு இருக்கும் முருகர் டாலர் வாங்கி உங்க கழுத்துல போட்டுக்கோங்க. அதிர்ஷ்டமேல் அதிர்ஷ்டம் வந்து உங்களை ஆனந்தப்படுத்தும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் அஷ்டலட்சுமிகளும் இருக்கக்கூடிய சின்ன டாலர் வாங்கி கழுத்துல போட்டுக்கிட்டீங்கன்னா, உங்களுக்கான நல்லது தானாக தேடி வரும். அஷ்டலட்சுமியின் மந்திரத்தை உச்சரித்து வழிபாடு செய்ய வாழ்வில் பெரிய அளவில் வெற்றி காண்பீர்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் கிருஷ்ணர் ராதை ஒன்றாக சேர்ந்து இருக்கும் டாலரை கழுத்தில் போட்டுக்கோங்க. குடும்பத்தில் சந்தோஷம் வரும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் மதுரை மீனாட்சி அம்மனை டாலரை வாங்கி உங்கள் கழுத்தில் அணிந்து கொண்டால், கோடான கோடி நன்மைகள் நடக்கும். முடியும் போதெல்லாம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனமும் செய்யுங்கள். மீனாட்சி அம்மனின் பெயரை உச்சரித்து தினம் தினம் வீட்டில் பூஜை செய்யுங்கள் நல்லதே நடக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் ஈசனது டாலரை கழுத்தில் போட்டுக் கொள்ளலாம். சில பேருக்கு ஈசன் டாலரை போட்டுக் கொள்ள மனதில் விருப்பம் இருக்காது. அப்படிப்பட்டவர்கள் ருத்ராட்சம் அணிவது சிறப்பு. ஈசனை மனமுருக வேண்டி அந்த டாலரை கழுத்தில் அணிந்து கொள்வதால் எந்த கெடுதலும் ஏற்படாது. இருந்தாலும் உங்க வீட்டில் மறுப்பு தெரிவித்தால் ருத்ராட்சம் அணிந்து கொள்ளுங்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் திருச்செந்தூர் முருகன் டாலரை கழுத்தில் அணிந்து கொண்டால், உங்களுக்கு வெற்றி தேடி வரும். தினமும் திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா சொல்லுங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கும்.