- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபொருளாதார தேவைகள் பூர்த்தியடைய வழிபாடு

பொருளாதார தேவைகள் பூர்த்தியடைய வழிபாடு

- Advertisement -

இந்த உலகத்தில் ஒவ்வொருவரும் சந்திக்கக்கூடிய மிகவும் முக்கியமான ஒரு பிரச்சனை என்றால் அது பொருளாதார பிரச்சினை தான். பொருளாதாரத்தில் இருக்கக்கூடிய சிக்கல்கள் தீர்ப்பதற்காக தான் ஒவ்வொருவரும் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கிறார்கள். இருப்பினும் பலராலும் அந்த சிக்கல்களில் இருந்து வெளியில் வர முடியாத ஒரு சூழ்நிலை இருக்கிறது. அந்த சூழ்நிலையை நீக்கி பொருளாதார தேவைகள் பூர்த்தியடைவதற்கு மகாலட்சுமி தாயாருக்கு வைக்க வேண்டிய நெய்வேத்தியத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பொருளாதார தேவைகள் பூர்த்தியடைய வழிபாடு

பணம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் தீர வேண்டும் என்றால் அதற்கு மகாலட்சுமி தாயாரின் அருள் என்பது கண்டிப்பான முறையில் வேண்டும். எத்தனை தெய்வங்களை நாம் வழிபட்டாலும் மகாலட்சுமியின் அருள் இருந்தால் தான் நமக்கு பணம் என்பது வரும். மேலும் அது நம்முடைய கையிலும் தங்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றமும் உண்டாகும். அப்படிப்பட்ட மகாலட்சுமி தாயாரை பலவிதமான சூட்சுமமான முறையில் வழிபாடு செய்வதுண்டு. அந்த வகையில் ஒரு வழிமுறையை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்வதற்கு உகந்த கிழமை என்றதும் நம் நினைவிற்கு வருவது வெள்ளிக்கிழமைதான். வெள்ளிக்கிழமையோடு சேர்த்து நாம் செவ்வாய்க்கிழமையும் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்தோம் என்றால் நம்முடைய வாழ்வில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் என்று கூறப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வழிப்பாட்டு முறை என்பது தெரியும். தங்களுக்கு தெரிந்த எந்த வழிப்பாட்டு முறையாக இருந்தாலும் அதை முழு மனதோடு செய்ய வேண்டும் என்பதுதான் முக்கியம்.

அப்படி முழுமனதோடு நாம் தெய்வ வழிபாட்டில் ஈடுபடும் பொழுது கண்டிப்பான முறையில் அந்த தெய்வத்திற்கு என்று ஒரு நெய்வேத்தியத்தை நாம் வைக்க வேண்டும். அந்த நெய்வேத்தியத்தை பொருத்து கூட நம்முடைய வழிபாட்டு பலன் என்பது மாறுபடும். அந்த வகையில் பொருளாதாரத் தேவைகள் பூர்த்தியடைவதற்கு மகாலட்சுமி தாயாருக்கு ஒரு நெய்வேத்தியத்தை நாம் வைக்க வேண்டும். இந்த நெய்வேத்தியத்தை செவ்வாய், வெள்ளிக்கிழமையில் எந்த நேரத்தில் வழிபாடு செய்கிறோமோ அந்த நேரத்தில் மகாலட்சுமி தாயாருக்கு முன்பாக வைத்து வழிபாடு செய்து விட்டு பிறகு வீட்டில் இருக்கக் கூடிய அனைவரும் அதை பிரசாதமாக உண்ண வேண்டும்.

- Advertisement -

அப்படி செய்யக்கூடிய ஒரு நெய்வேத்தியம் தான் பால், தேன், முந்திரி பருப்பு. அதாவது ஒரு சிறிய கிண்ணம் அல்லது கிளாஸில் பாலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அந்த பாலிற்கு ஏற்றவாறு தேனை கலந்து கொள்ளுங்கள். பிறகு மூன்றிலிருந்து ஐந்து எண்ணிக்கையில் முந்திரி பருப்பை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து அந்த பாலுடன் போட்டு கலந்து மகாலட்சுமி தாயாருக்கு நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். இந்த முறையில் நாம் நெய்வேத்தியம் வைத்து மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்தோம் என்றால் விரைவிலேயே நம்முடைய பொருளாதார தேவைகள் அனைத்தும் பூர்த்தி அடையும்.

இதையும் படிக்கலாமே:மூன்று நாளில் வேண்டுதல் நிறைவேற சுவிட்ச் வேர்ட்

எந்த முறையில் வழிபாடு செய்வதாக இருந்தாலும் முழு மனதோடு மன நிறைவோடு மகிழ்ச்சியோடு நாம் வழிபாடு செய்தோம் என்றால் அந்த தெய்வத்தின் அருளால் நாம் என்றென்றைக்கும் மகிழ்ச்சியுடன் திகழ்வோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்