அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களில் குலதெய்வ வழிபாட்டை செய்வது என்பது மிகவும் விசேஷமான ஒன்று என்று நம் அனைவருக்கும் தெரியும். அதிலும் குறிப்பாக பௌர்ணமி தினத்தில் பெண் தெய்வங்களையும், அமாவாசை தினத்தில் ஆண் தெய்வங்களையும் வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். குலதெய்வமாக இருக்கும் பட்சத்தில் அமாவாசை தினத்திலும் பௌர்ணமி தினத்திலும் நாம் எந்த வித வேறுபாடும் பார்க்காமல் வழிபாடு செய்ய வேண்டும். இயன்ற அளவு அன்றைய தினம் குலதெய்வ ஆலயத்திற்கு சென்ற வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு. குலதெய்வம் வீட்டிற்கு வருவதற்கு என்றும் வழிபாட்டு முறைகள் இருக்கின்றன. அந்த வகையில் சித்திரை அமாவாசை நாளன்று செய்ய வேண்டிய குலதெய்வ வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
அமாவாசை குலதெய்வ வழிபாடு
அமாவாசை என்றதும் நம் அனைவரும் முன்னோர்களை வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் நினைப்போம். முன்னோர்களை எந்த அளவிற்கு நாம் வழிபாடு செய்கிறோமோ அதைவிட சற்று கூடுதலாகவே குலதெய்வத்தையும் நாம் வழிபாடு செய்ய வேண்டும். தினமும் குலதெய்வ வழிபாட்டை செய்வது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதிலும் பிரபஞ்ச பேராற்றல் மிகுந்த அமாவாசை தினத்தில் குலதெய்வ வழிபாட்டை நாம் மேற்கொள்ளும் பொழுது குலதெய்வத்தின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும் என்றே கூறலாம். அந்த வகையில் குலதெய்வம் வீட்டில் எழுந்தருளுவதற்கு செய்ய வேண்டிய ஒரு எளிமையான வழிபாட்டு முறையைப் பற்றி இப்பொழுது பார்ப்போம்.
அமாவாசை தினத்தன்று காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் குலதெய்வத்தை மனதார நினைத்துக் கொண்டு வழிபாடு செய்ய வேண்டும். அவ்வாறு வழிபாடு செய்யும்பொழுது “ஓம் ஸ்ரீம் குலதெய்வத்தின் பெயர் நமஹ” அதாவது குலதெய்வத்தின் பெயர் முருகன் என்றால் “ஓம் ஸ்ரீம் முருகன் நமஹ” என்று 108 முறை கூற வேண்டும். இப்படி கூறி முடித்த பிறகு குலதெய்வம் என் வீட்டிற்கு எழுந்தருள வேண்டும் என்று மனதார வழிபாடு செய்து கொள்ள வேண்டும். அன்று நண்பகல் 12 மணியிலிருந்து 1 மணிக்குள் சைவ உணவுகளை தயார் செய்து கொள்ள வேண்டும்.
ஒரு வாழை இலையை விரித்து அதில் சைவ உணவுகளை படையலாக போட்டு அந்த வாழை இலைக்கும் முன்பாக ஒரு சிறிய கண்ணாடியை வைக்க வேண்டும். அந்த கண்ணாடிக்கு சந்தனம் குங்குமம் வைத்து அதை குலதெய்வமாகவும் நம்முடைய முன்னோர்களாகவும் பாவித்து வழிபாடு செய்ய வேண்டும். பிறகு தேங்காய் உடைத்து பழம் வைத்து கற்பூர தீப தூப ஆராதனை காட்டி அந்த கண்ணாடியை பார்த்தவாறு குலதெய்வத்திடம் பேசுவது போல் பேசி வீட்டிற்கு எழுந்தருள வேண்டும் என்று பேச வேண்டும்.
பிறகு இந்த படையலில் இருந்து சாதத்தை சிறிதளவு எடுத்து காக்கைக்கு உணவாக வைத்துவிட்டு வழிபாட்டை பூர்த்தி செய்ய வேண்டும். இந்த முறையில் அமாவாசை தினத்தன்று குலதெய்வத்தை நினைத்தும் முன்னோர்களை நினைத்தும் சைவப்படையல் இட்டு வழிபாடு செய்பவர்களுக்கு குலதெய்வத்தின் அருளும் முன்னோர்களின் ஆசிர்வாதமும் பரிபூரணமாக கிடைக்கும். அதன் மூலம் நம் வாழ்க்கையில் சிறந்து விளங்கும்.
இதையும் படிக்கலாமே:கடன் பிரச்சினை தீர்க்கும் ஞாயிறு அமாவாசை பரிகாரம்
மிகவும் எளிமையான இந்த குலதெய்வ வழிபாட்டை முழு மனதோடு யார் ஒருவர் அமாவாசை தினத்தன்று செய்கிறார்களோ அவர்களுக்கு குலதெய்வத்தின் அருளும் ஆசியும் பரிபூரணமாக கிடைக்கும் என்று தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.