நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்க்கையில் அன்றாடம் ஓடிக்கொண்டே இருப்பதற்கு முக்கியமான காரணம் பணத்தை சம்பாதிப்பது தான். ஒருமுறை பணத்தை சம்பாதித்து விட்டால் மறுமுறை அதைவிட அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுவோம். இப்படி நாட்கள் செல்ல செல்ல அதிக அளவில் பணத்தை சம்பாதித்தால் தான் நம்மால் நம்முடைய வாழ்க்கையை நாம் நினைத்தது போல் வாழ முடியும். அந்த வகையில் நமக்கு வரக்கூடிய பணவரவில் ஏதேனும் தடைகள் இருந்தாலோ அல்லது பணவரவு அதிகரிப்பதற்கோ செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி நான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பண வரவை அதிகரிக்கும் பரிகாரம்
பணவரவிற்கு முக்கியமான காரணமாக திகழக்கூடியவள் மகாலட்சுமி தாயார் என்று நம் அனைவருக்குமே தெரியும். அதனால் நாம் அனைவரும் கண்டிப்பாக முறையில் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக அமாவாசை தினத்தன்று நாம் செய்யக்கூடிய வழிபாடும் பரிகாரமும் நல்ல பலனை தரும் என்றே கூறலாம். அந்த வகையில் அமாவாசை தினமான இன்று ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மகாலட்சுமி தாயாருக்குரிய பொருட்களை வைத்து நாம் பரிகாரம் செய்வதன் மூலம் நாம் நினைத்த மாதிரி பணவரவு நமக்கு அதிகரிக்கும்.
இந்த பரிகாரத்தை அமாவாசை நாளான இன்று தான் செய்ய வேண்டும். அதுவும் அமாவாசை நாளில் வரக்கூடிய சுக்கிர ஹோரையில் செய்வது என்பது மிகவும் சிறப்பு. சுக்கிர ஹோரை என்பது இன்று இரவு 9 மணியிலிருந்து 10 மணிக்குள் வருகிறது. அந்த நேரத்தில் நாம் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் நாம் எதிர்பார்த்த பணவரவை நம்மால் பெற முடியும்.
இந்த பரிகாரத்தை செய்வதற்கு மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய கல் உப்பு மற்றும் பச்சரிசி இவை இரண்டும் தான் வேண்டும். இவை இரண்டும் சிறிதளவு மட்டும் இருந்தால் போதும். அடுத்ததாக வெள்ளை நிற பேப்பர் வேண்டும். அது மடிப்புகள் விழுந்த பேப்பராக இருக்கக்கூடாது. அழுக்கான பேப்பராக இருக்கக் கூடாது. சுத்தமான நல்ல பேப்பராக இருக்க வேண்டும். இந்த பேப்பரை மூன்றாக கிழித்து வைத்துக் கொள்ளுங்கள்.
நம்முடைய வீட்டில் யார் பணத்தை சம்பாதிக்கிறார்களோ அவர்களின் பெயரை முதலில் எழுத வேண்டும். ஒரு வேளை வீட்டில் இரண்டு பேர் சம்பாதிக்கிறார்கள் என்றால் இரண்டு பெயர்களின் பெயரையும் எழுதலாம். அதற்கு கீழே நமக்கு எவ்வளவு பணவரவு வந்தால் நாம் நினைத்ததை நம்மால் செய்து முடிக்க முடியும் என்று தோன்றுகிறதோ அந்த தொகையை எழுத வேண்டும். உதாரணமாக வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது வீடு கட்டுவதற்கு குறைந்தது 15 லட்சத்தில் இருந்து 20 லட்சம் வரை தேவைப்படும் என்னும் பட்சத்தில் 20 லட்சம் என்னிடம் வந்து கொண்டே இருக்கிறது என்று எழுத வேண்டும். இவ்வளவு தொகை தான் என்று தெரியவில்லை என்பவர்கள் பொதுவாக பணம் என்னிடம் வந்து கொண்டே இருக்கிறது என்று கூட எழுதலாம்.
இப்படி மூன்று முறை எழுத வேண்டும். இதே முறையில் மற்ற இரண்டு பேப்பர்களிலும் மேலே பணத்தை சம்பாதிப்பவர் பெயரை எழுதிவிட்டு அதற்கு கீழே மூன்று முறை பணம் என்னிடம் வந்து கொண்டே இருக்கிறது என்று எழுத வேண்டும். இப்பொழுது அந்த பேப்பரை பூஜை அறையில் வைத்து தீபமேற்றிவிட்டு அந்த மூன்று பேப்பருக்கும் சந்தனமும் வைத்துவிட்டு அதில் சிறிதளவு கல் உப்பு மற்றும் சிறிதளவு பச்சரிசியை வைக்க வேண்டும்.
பிறகு முழு மனதோடு மகாலட்சுமி மற்றும் குலதெய்வத்தை மனதார நினைத்துக் கொண்டு எதிர்பார்த்த பணவரவு வரவேண்டும் என்று வேண்டிக் கொண்டே இந்த மூன்று பேப்பரையும் தனித்தனியாக மடிக்க வேண்டும். மடித்த இந்த பேப்பரில் ஒரு பேப்பரை வீட்டில் எந்த இடத்தில் நாம் பணத்தை வைத்திருக்கிறோமோ அந்த இடத்தில் வைத்து விட வேண்டும். மற்றொன்றை நம்முடைய பரிசில் வைத்துக் கொள்ள வேண்டும். மூன்றாவது பேப்பரை வீட்டு சமையலறையில் தென்மேற்கு மூலையில் வைத்து விட வேண்டும். இந்த முறையில் நாம் அமாவாசை நாளில் வரக்கூடிய சுக்கிர ஹோரை நேரத்தில் பரிகாரம் செய்வதன் மூலம் அடுத்த அமாவாசைக்குள் நாம் நினைத்தது போல் பண வரவு படிப்படியாக உயர ஆரம்பிக்கும்.
இதையும் படிக்கலாமே:நினைத்தது நடக்க அமாவாசை கல் உப்பு பரிகாரம்
சூட்சுமமான பரிகாரமாக திகழக்கூடிய இந்த பரிகாரத்தை முழுமனதோடு தொடர்ச்சியாக ஒவ்வொரு அமாவாசை தினத்திலும் செய்பவர்களுக்கு கண்டிப்பான முறையில் அவர்கள் நினைத்த பணவரவு வந்து சேரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.