தங்கம் பிடிக்காத நபர்களே இருக்க மாட்டார்கள். ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் தங்களுக்கு பிடித்தமான வகையில் தங்க நகைகளை அணிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அப்படி ஆசைப்பட்டாலும் தங்கத்தை வாங்கும் யோகம் இருந்தால்தான் அவர்களால் தங்கத்தை வாங்க முடியும். அந்த யோகத்தை ஏற்படுத்துவதற்கு அட்சய திருதியை நாளன்று செய்ய வேண்டிய ஒரு எளிமையான வழிபாட்டு முறையைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
தங்கம் வாங்கும் யோகம் உண்டாக
அட்சய திருதியை நாளன்று நாம் செய்யக்கூடிய எந்த ஒரு செயலும் நமக்கு பல மடங்கு அதிகரிக்கும் என்று கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த வகையில் தங்க நகை சேர வேண்டும் என்பதற்காக நாம் செய்யக்கூடிய இந்த வழிபாட்டை அட்சய திருதியை நாளன்று நாம் செய்யும் பொழுது இந்த வருடம் நிறைவடைவதற்குள் தங்கம் வாங்கும் யோகத்தை பெற்று விடுவோம். ஒரு குண்டுமணி தங்கமாவது வாங்கி விடுவோம். பலருக்கும் ஸ்வர்ண தோஷம் இருக்கும். அந்த ஸ்வர்ண தோஷம் இருந்தாலும் அவர்களிடம் தங்கம் தங்கவே தங்காது. அப்படிப்பட்டவர்களும் இந்த வழிபாட்டை செய்யும் பொழுது சுவர்ண தோஷம் முற்றிலும் நீங்கும்.
இந்த வழிபாட்டை செய்வதற்கு நமக்கு ஒரே ஒரு கிழியாத நல்ல பிரியாணி இலை வேண்டும். அடுத்ததாக ஒரு ரூபாய் நாணயம் வேண்டும். அடுத்ததாக பச்சை நிற மை கொண்ட பேனா வேண்டும். இவை மூன்றும் இருந்தாலே போதும். அட்சய திருதியை நாளான இன்று இந்த வழிபாட்டை நாம் செய்வதன் மூலம் விரைவிலேயே தங்கம் வாங்குவதற்குரிய யோகம் நமக்கு உண்டாகும்.
பிரியாணி இலையை சுத்தம் செய்து அதற்கு சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அதில் தங்கத்தை வசியம் செய்வதற்கு பயன்படுத்தக்கூடிய மந்திரம் ஒன்று இருக்கிறது. அந்த மந்திரத்தை பச்சை நிற பேனா மையால் பிரியாணி இலையில் எழுத வேண்டும். பிறகு இந்த இலையை மகாலட்சுமி தாயாருக்கு முன்பாக வைத்து அதற்கு மேல் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து விடுங்கள்.
மந்திரம்
“ஓம் நமோ ஹேரம்ப மதமோதித அஸ்திமுகாய சொர்ண பிராப்த்தையே மமா குரு குரு ஸ்வாஹா”
சொர்ண லட்சுமியையும் மகாலட்சுமியையும் மனதார நினைத்துக் கொண்டு தங்கம் சேர்வதற்குரிய யோகம் உண்டாக வேண்டும், சுவர்ண தோஷம் நீங்க வேண்டும் என்று வழிபாடு செய்து கொள்ளுங்கள். வழிப்பாட்டை நிறைவு செய்த பிறகு ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து பணம் வைக்கும் இடத்தில் பத்திரமாக செலவு செய்யாமல் வைத்துக் கொள்ளுங்கள். பிரியாணி இலையை மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு பின்பாக வைத்து விடுங்கள்.
இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வளர்பிறை திருதியை திதி வரக்கூடிய நாளில் புதிதாக பிரியாணி இலையில் இதே மந்திரத்தை எழுதி திரும்பவும் மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு பின்பாக வைத்து விட வேண்டும். பழைய பிரியாணி இலையை ஓடுகின்ற நீரில் விட்டு விட வேண்டும்.
இதையும் படிக்கலாமே:நோய் நொடி தீர அட்சய திருதியை மந்திரம்
தங்கத்தை வாங்குவதற்கும் அதை அணிந்து அழகு பார்ப்பதற்கும் இறைவனின் அருள் என்பது கண்டிப்பான முறையில் வேண்டும். இதில் எது நடக்காவிட்டாலும் முழு மனதோடு இந்த வழிபாட்டை செய்வதன் மூலம் அவர்களுக்கு இருந்த சுவர்ண தோஷம் முற்றிலும் நீங்கி தங்கம் வாங்குவதற்குரிய யோகம் ஏற்படும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.