- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalயோகம் தரும் குபேர ஏகாதசி வழிபாடு

யோகம் தரும் குபேர ஏகாதசி வழிபாடு

- Advertisement -

சித்திரை மாதத்தில் பல ஆலயங்களிலும் திருவிழாக்கள் நடைபெறக்கூடிய மாதமாக திகழ்கிறது. வருடத்தின் முதல் மாதமாகவும் இந்த மாதம் திகழ்கிறது. அப்படிப்பட்ட மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை ஏகாதசி என்பது நமக்கு பலவிதமான யோகங்களை வாரி வழங்கக்கூடிய ஒன்றாக திகழ்கிறது. அதிலும் குறிப்பாக இந்த முறை வரக்கூடிய வளர்பிறை ஏகாதசி என்பது வியாழக்கிழமையோடு சேர்ந்து வருவதால் பணம் தொடர்பான அனைத்து யோகங்களும் நம்மை வந்து சேரும். அந்த வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

குபேர ஏகாதசி வழிபாடு

பெருமாளை அனுதினமும் வழிபாடு செய்வது என்பது நல்லது. அதிலும் பெருமாளுக்குரிய திதியான ஏகாதசி திதி அன்று வழிபாடு செய்வது அதீத பலனை தரும். விரதம் இருக்க இயலாதவர்கள் கூட அன்றைய நாளில் பெருமாளை எளிமையான முறையில் வழிபாடு செய்தாலே பலவிதமான நன்மைகளை பெறுவார்கள். அந்த வகையில் சித்திரை மாதத்தின் வளர்பிறை ஏகாதசி என்பது மே மாதம் ஏழாம் தேதி மதியம் தொடங்கி மே மாதம் எட்டாம் தேதி மதியம் மூன்று மணி வரை இருக்கிறது. சூரிய உதயத்தின் பொழுது எந்த திதி இருக்கிறதோ அந்த திதியே அன்றைய நாள் முழுவதும் இருப்பதாக ஐதீகம். அந்த வகையில் மே மாதம் எட்டாம் தேதி வியாழக்கிழமை ஏகாதசி விரதத்தை மேற்கொள்வதும், வழிபாடுகளை செய்வதும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

- Advertisement -

அன்றைய தினத்தில் நாம் விரதம் இருந்து வழிபாடு செய்தாலும் சரி விரதம் இருக்காமல் வழிபாடு செய்தாலும் சரி அருகில் இருக்கக்கூடிய பெருமாளின் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் பொழுது பெருமாளுக்கு உகந்த துளசி மாலையை வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும். துளசி மாலை வாங்கும் அளவிற்கு கூட கையில் பணம் இல்லை என்பவர்கள் பத்து ரூபாய் கொடுத்தாவது துளசியை வாங்கி பெருமாளின் பாதத்தில் வைக்க தர வேண்டும். பிறகு பெருமாளை முழு மனதோடு வழிபாடு செய்துவிட்டு அங்கிருந்து சிறிதளவு மட்டும் துளசி இலையை பிரசாதமாக திரும்ப வாங்கி வரவேண்டும். வாங்கி வந்த இந்த துளசி இலையை நம்முடைய வீட்டில் எங்கு பணம் நகை வைப்போமோ அந்த இடத்தில் பெருமாளை மனதார நினைத்துக் கொண்டு வைத்து விட வேண்டும்.

ஒருவேளை ஆலயத்திற்கு செல்ல இயலாது என்று நினைப்பவர்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய பெருமாளின் படத்திற்கு துளசி இலைகளை சமர்ப்பணம் செய்து ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து “ஓம் நமோ நாராயணாய நமோ நமஹ” என்னும் மந்திரத்தை முழு மனதோடு நிறுத்தி நிதானமாக பெருமாளை நினைத்துக் கொண்டு 11 முறை கூற வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து விடுங்கள். அன்றைய நாள் முழுவதும் துளசி இலை பெருமாளின் பாதத்திலேயே இருக்கட்டும். மறுநாள் அதாவது வெள்ளிக்கிழமை அன்று துளசி இலையை எடுத்து பணம் நகை வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். அடுத்த ஏகாதசி அன்று திரும்பவும் துளசி இலைகளை பெருமாளுக்கு சமர்ப்பணம் செய்து மாற்றி வைத்துக் கொள்ளலாம். பழைய துளசி இலைகளை கால்படாத இடத்தில் போட்டு விடலாம்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:நினைத்ததை நிறைவேற்றும் விரலி மஞ்சள் வழிபாடு

எளிமையான இந்த பெருமாள் வழிபாட்டை முழு மனதோடு யார் ஒருவர் வியாழக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய ஏகாதசி நாள் அன்று செய்கிறார்களோ அவர்களுக்கு பெருமாளின் அருளோடு குபேரரின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும். அதன் மூலம் அனைத்து விதமான யோகங்களையும் பெற முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்