- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalமனதில் நினைத்த 5 நல்ல விஷயங்கள் உடனடியாக நடக்க பரிகாரம்.

மனதில் நினைத்த 5 நல்ல விஷயங்கள் உடனடியாக நடக்க பரிகாரம்.

- Advertisement -

நம்மில் எல்லோருக்குமே, இந்த வருடத்தில் சாதிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்று சல இருக்கும். இந்த வருடம் முடிவதற்குள் குடும்பத்திற்கு இந்த நல்ல விஷயங்களை செய்து விட வேண்டும் என்று ஒரு குறிக்கோளை வைத்திருப்போம். குழந்தைகளுக்கு திருமணம் நடக்க வேண்டும். பிள்ளைக்கு நல்ல இடத்தில் வேலை வாங்கிக் கொடுக்க வேண்டும். பிள்ளைகளுடைய எதிர்காலத்திற்கு பணம் சேர்க்க வேண்டும் என்ற கடமை பெற்றவர்களுக்கு நிச்சயம் இருக்கும்.

இதே போல உங்கள் குடும்பத்திற்காக, நீங்களே சாதித்துக் கொள்ள சில உறுதிமொழிகளை எடுத்து வைத்திருப்பீர்கள். நல்ல வேலை கிடைக்க வேண்டும் வீடு கட்ட வேண்டும் வெளிநாடு செல்ல வேண்டும் இதுபோல ஏதாவது ஆசைகள் உங்களுக்குள் இருக்கும். இதையெல்லாம் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்றால் என்ன செய்வது. உங்கள் குலதெய்வமே நேரில் வந்து இந்த பரிகாரத்தை சொன்னதாக நினைத்துக் கொள்ளுங்கள். 11 நாளில் நீங்கள் நினைத்த நல்ல விஷயங்கள் ஒவ்வொன்றாக நடக்க தொடங்கும். இந்த எளிமையான ஆன்மீகம் சொல்லும் பரிகாரத்தை செய்தால்.

- Advertisement -

குறிக்கோள் நிறைவேற பரிகாரம்

ஒரு கண்ணாடி பவுல் எடுத்துக் கொள்ளுங்கள். அது நிரம்ப பச்சரிசி அதன் மேலே கொஞ்சம் வெல்லம் வைத்துக் கொள்ளவும். தயார் செய்த இந்த பவுலை அப்படியே வீட்டில் வடக்கிழக்கு மூலையில் வைத்து விடுங்கள். ஒரு சின்ன வெள்ளை காகிதத்தில் உங்கள் மனதில் இருக்கும் நிறைவேறாத 5 ஆசைகள் என்னென்ன. அதெல்லாம் நடந்து விட்டதாக எழுதுங்கள். நல்ல வேலை கிடைத்து விட்டது.

வீடு கட்டி விட்டேன். திருமணம் நடந்து விட்டது. பிள்ளைகள் சந்தோஷமாக வாழ்கிறார்கள். குடும்பத்தில் எல்லோருக்கும் ஆரோக்கியம் இருக்கிறது. உதாரணத்திற்கு சொல்லப்பட்டவை இவை. உங்களுக்கு என்ன இது போல தேவைகள் இருக்கிறதோ, அந்த தேவைகள் எல்லாம் நிறைவேறி விட்டதாக அந்த பேப்பரில் எழுதி அந்த அரிசி பவுலுக்கு மேலே வைத்து விடுங்கள்.

- Advertisement -

இப்போதுதான் பரிகாரம் செய்ய துவங்கப் போகிறோம். இதுவரை பரிகாரத்திற்கு தேவையான விஷயங்களை தயார் செய்து வைத்திருக்கின்றோம். இனிமேல் பரிகாரத்தை எப்படி செய்வது என்று பார்க்கப் போகின்றோம். ஒரு கண்ணாடி டம்ளர் நிரம்ப தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். உங்கள் குறிக்கோள் எழுதிய பேப்பரை கீழே வைத்து விட்டு, அதன் மேலே இந்த கண்ணாடி டம்ளரில் இருக்கும் தண்ணீரை வையுங்கள்.

உங்களுடைய வலது கையை பௌலில் இருக்கும் அரிசி வெல்லத்திற்கு மேலே வைத்து விடுங்கள். நீங்கள் அந்த பேப்பரில் எழுதிய ஆசை எல்லாம் நிறைவேறி விட்டதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். இரண்டு நிமிடம் குலதெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்துவிட்டு, அந்த கண்ணாடி டம்பளியில் இருக்கும் தண்ணீரை குடித்து விடவும். இவ்வளவுதான் பரிகாரம். 11 நாள் இதே போல இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.

- Advertisement -

டம்ளர் தண்ணீரை குடித்துவிட்டு, குறிக்கோளை எழுதி வைத்திருக்கும் பேப்பரை எடுத்து, அந்த பவுலுக்கு மேலே வைத்துவிட்டு, உங்கள் அன்றாட வேலையை பார்க்க செல்ல வேண்டும். 11 வது நாள் இந்த பரிகாரத்தை முடித்துவிட்டு அந்த பவுலில் இருக்கும் பச்சரிசியையும் வெல்லத்தையும் தண்ணீரில் போட்டு ஊற வைத்து பசுமாட்டிற்கு உங்கள் கையால் கொடுத்துவிட்டால், நிச்சயம் நீங்கள் அந்த பேப்பரில் எழுதிய நல்ல விஷயங்கள் எல்லாம் அடுத்தடுத்த நாட்களில் நல்லபடியாக நடக்க துவங்கிவிடும்.

இதையும் படிக்கலாமே: காசு மழை கொட்ட அபிஜித் நட்சத்திர நேரத்தில் சொல்ல வேண்டிய மந்திரம்

குறிக்கோள் எழுதிய பேப்பரை பத்திரமாக மடித்து அலமரியில் வைத்துக் கொள்ளுங்கள். குறிக்கோள் நிறைவடைந்தவுடன், அந்த பேப்பரை கிழித்து கால் படாத இடத்தில் போட்டு விடலாம். இதை உங்கள் குலதெய்வம் நின்று பார்த்துக் கொள்ளும். குலதெய்வமே வந்து நேரில் சொன்ன பரிகாரம் என்று நினைத்துக் கொண்டு இதை செய்து பாருங்கள். நம்பிக்கையோடு செய்து பாருங்கள் நிச்சயமாக நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் இந்த ஆன்மீகம் சார்ந்த படிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்