- Advertisement -

அதிகம் சம்பாதிக்க வழி

- Advertisement -

ஒரு மனிதன் அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்தால், செய்ய வேண்டிய முதல் விஷயம் அவன் குடும்பத்தின் மீதான அன்பும் மற்றும் அக்கறையிலும் தான் இருக்கிறது. குடும்ப பற்று இல்லாதவனால் அதிகம் சம்பாதிக்க முடியாது என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. நீங்கள் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால், காலையில் வேலைக்கு கிளம்பும் முன்பு, என்ன செய்ய வேண்டும்? என்பதை இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு மனிதன் தம் தேவைக்கு அதிகமாக சம்பாதிப்பது அவருடைய குடும்பத்திற்காக தான் இருக்கிறது. பெருமளவு குடும்பத்திற்காக சம்பாதிக்க கூடிய நீங்கள், அந்த குடும்பத்தில் இருப்பவர்களை கவனிக்க மறந்து விடுகிறீர்கள். யாருக்காக சம்பாதிக்கிறோமோ, அவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்களா? மகிழ்ச்சியும், நிம்மதியும் அவர்களிடம் எப்போதும் நம்மால் கொடுக்க முடிகிறதா? என்பதை கவனிக்க தவறுகிறோம்.

- Advertisement -

நீங்கள் சம்பாதிக்கக்கூடிய செல்வங்களையும், பணத்தையும் கொடுப்பது மகாலட்சுமி. அந்த மகாலட்சுமி வேறு யாரும் இல்லை, உங்கள் குடும்பத்தில் இருக்கக்கூடிய பெண்கள். குறிப்பாக உங்கள் நலனில் அக்கறை அதிகம் உள்ள உங்களுடைய மனைவி தான், மகாலட்சுமி என்று வேத சாஸ்திரங்கள் கூறுகிறது. கணவன் மனைவியை மகாலட்சுமி ஆக கருதி மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

நீங்கள் அதிர்ஷ்டசாலி ஆவதும், துரதிர்ஷ்டசாலி ஆவதும் மனைவியை நடத்தும் முறையில் தான் இருக்கிறது. ஒரு பெண் வீட்டில் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் சிரித்த முகத்துடன் இருந்தால் தான் ஒரு ஆணால் அந்த வீட்டில் அதிகமாக சம்பாதித்து கொடுக்க முடியும். காலையில் வேலைக்கு கிளம்பும் பொழுது, ஒரு பத்து ரூபாயை மனைவியின் கையால் வாங்க வேண்டும். “இது பன்மடங்கு பெருக வேண்டும்” என்று அவள் சொல்லி உங்களிடம் கொடுக்க வேண்டும்.

- Advertisement -

அந்த பணத்தை எடுத்துக் கொண்டு நீங்கள் வேலைக்கு கிளம்பி உங்கள் வேலையில் விடா முயற்சிகளோடு உழைக்க வேண்டும். இப்படி தொடர்ந்து தினமும் மனைவியின் கையால் பணத்தை வாங்கிக் கொண்டு, அது பெருக வேண்டும் என்று மனதார சொல்லி, உங்களை அவள் வழி அனுப்பும் பொழுது இந்த பிரபஞ்சம் உங்களுக்கு அதிகமான பணத்தை சம்பாதிக்க கூடிய வழிகளை கற்றுக் கொடுக்கும். மனைவியின் மீது மரியாதையும், அக்கறையும் உங்களுக்கு அதிகரிக்கும்.

குடும்ப செலவுகளை சமாளிக்க இருவரும் திட்டம் போட்டு செயல்பட வேண்டும். சிலருடைய வீடுகளில் கணவன் எவ்வளவு சம்பாதிக்கிறான்? என்று கூட மனைவிக்கு தெரிவதில்லை. இது போன்ற இல்லங்களில் பணம் இருக்கும், மகிழ்ச்சி இருக்காது அல்லது இரண்டுமே இருக்காது. மனைவி மகாலட்சுமியாகவும், கணவன் மகாவிஷ்ணுவாகவும் ஒருசேர ஒற்றுமையுடன் இருப்பது தான், ஒரு மனிதன் அதிகம் சம்பாதிப்பதற்கு ஆசைகளையும், தூண்டுதலையும் உண்டாக்கும். இல்லையென்றால் சம்பாதிக்கக்கூடிய திறமை உங்களுக்கு இருந்தும், அதன் பாதைகள் உங்கள் கண்முன்னே இருந்தாலும், அது உங்களுக்கு தெரியாமல் இறைவன் மறைத்து விடுகிறார்.

இதையும் படிக்கலாமே:
கஷ்டம் தீர்க்கும் உப்பு

உங்களுடைய திறமையை அங்கீகரித்து, சீக்கிரமே நீங்கள் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்தால், நாளையிலிருந்து உங்கள் மனைவியிடம் மரியாதையுடனும், அன்போடும் பழகுங்கள். மேலும் தினமும் காலையில் 10 ரூபாய் வாங்கிக் கொண்டு, அது பன்மடங்கு பெருக வேண்டும் என்று சொல்லி, வழி அனுப்ப சொல்லுங்கள். உடலில் தெம்பு இருக்கும் வரை தான் ஆணவமும், அகங்காரமும் உங்களுடன் இருக்கும். அது போய்விட்டால் மனைவியைத் தவிர உங்களை வேறு யாரும் மதிக்க மாட்டார்கள். மனைவியை நேசியுங்கள், அதிகம் சம்பாதிப்பீர்கள்.

சற்று முன்