இன்று நிறைந்த வெள்ளிக்கிழமை. இந்த நாளில் பெருமாளுக்கு உரிய வைகாசி மாத ஏகாதசி திதியும் இருக்கிறது. இந்த வெள்ளிக்கிழமையில் பெருமாள் வழிபாட்டையும், மகாலட்சுமி வழிபாட்டையும், சுக்கிர ஹோரையில் செய்வது நம் குடும்பத்திற்கு பெரிய அளவில் நன்மையை கொண்டு வந்து சேர்க்கும்.
யாரெல்லாம் அதீத பணக்கஷ்டத்தில் சிக்கியிருக்கிறீர்களோ இந்த வழிபாட்டை, இன்று இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். நிச்சயமாக உங்களுக்கு இருக்கக்கூடிய பணக்கஷ்டமானது கூடிய விரைவில் தீருவதற்கு மகாலட்சுமி ஒரு வழியை காட்டிக் கொடுப்பாங்க. அதி சக்தி வாய்ந்த அந்த வழிபாட்டைப் பற்றிய தகவலை இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
வெள்ளிக்கிழமை மகாலட்சுமி வழிபாடு
பாற்கடலில் குடிகொண்டு இருக்கும் அந்த மகாலட்சுமி தேவியை, நம் வீட்டிற்குள் குடி வைப்பதற்கான வழிபாடு இது. பாற்கடலில் இருக்கும் உப்புதான் மகாலட்சுமி. நாம் எல்லோருக்கும் இது தெரியும் அல்லவா. பாற்கடல் முழுவதும் அந்த மகாலட்சுமியின் வீடு தான். சரி இன்று மாலை 8 டு 9 பூஜை அறையில் ஒரு மண் அகல் விளக்கில் தாமரைத் தண்டு திரி போட்டு, நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். இரண்டு தீபங்கள் ஏற்றுவது சிறப்பு.
மகாலட்சுமிக்கு வாசம் நிறைந்த பூக்களால் அலங்காரம் செய்து விடுங்கள். உங்களுடைய கைகளில் தாமரை முத்திரை வைத்துக் கொண்டு, கண்களை மூடி கொள்ளுங்கள். கண் முன்னே உங்களுக்கு தெரிய வேண்டியது வெள்ளை யானை. இதை ஐராவதத்தை யானை என்றும் சொல்லலாம். இந்த யானையின் ரூபத்தில் உங்களுடைய வீட்டில் சுக்கிர பகவான் நிச்சயம் வாசம் செய்வார். கையில் தாமரை முத்திரையுடன் கண்களில் வெள்ளை யானையை பார்த்து “ஸ்ரீம்” என்ற மகாலட்சுமி பீஜ மந்திரத்தை சொல்ல வேண்டும்.
ஏற்றி வைத்திருக்கும் விளக்குக்கு முன்பு இந்த வழிபாட்டை செய்தீர்கள் என்றால், நிச்சயமாக உங்களுடைய பண கஷ்டம் தீர்ந்து விடும். தாமரை முதிரை எப்படி பிடிப்பது என்ற புகைப்படம் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த முத்திரை பிடிப்பதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், google செய்து பாருங்கள். நிறைய வீடியோக்கள் அதில் இருக்கும் அந்த முத்திரையை பார்த்து தாமரை முத்திரையை கையில் வைத்துக்கொண்டு, குறைந்தபட்சம் 10 நிமிடம் இந்த மந்திரத்தை சொன்னாலே போதும். உங்கள் வாழ்நாள் துன்பங்கள் விலகிவிடும்.
இதையும் படிக்கலாமே: கடன் கரைந்து போக சுக்கிர ஏகாதசி வழிபாடு
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இதுபோல வழிபாட்டை மேற்கொள்ள உங்களுடைய பண வரவு பல மடங்கு உயர்வதை கண்கூடாக காண்பீர்கள். நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவு நல்ல பலனை தரும் என்ற தகவலுடன் இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.