- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதிங்கட்கிழமை அமாவாசை காலை சொல்ல வேண்டிய மந்திரம்

திங்கட்கிழமை அமாவாசை காலை சொல்ல வேண்டிய மந்திரம்

- Advertisement -

எவ்வளவு சக்தி வாய்ந்த நாளாக இருந்தாலும், அந்த நாளில் மேற்கொள்ளக்கூடிய வழிபாட்டு முறைகளை, ஒரு சிலரால் மட்டுமே செய்ய முடியும். ஒரு சிலருக்கு வேலை காரணமாக வழிபாடு தவறும். சில பேருக்கு வீட்டில் பெண்கள் மாதவிடாய் நாட்களில் இருந்தால், அந்த குறிப்பிட்ட வழிபாட்டை செய்ய முடியாது. சிலபேர் வெளியூரில் இருப்பார்கள்.

சில பேருக்கு உடல் உபாதைகள் இருக்கும். இதுபோல ஏதோ ஒரு சூழ்நிலை காரணமாக சக்தி வாய்ந்த சில வழிபாடுகளை நாம் தவற விட்டு விடுவோம். வழிபாட்டை தவிர விட்டாலும், அந்த நாளில், அந்தக் குறிப்பிட்ட நாளுக்கு உரிய சக்தி வாய்ந்த மந்திரத்தை உச்சரிக்கும் போது, வழிபாட்டை நிறைவு செய்த பலனும் புண்ணியமும் நமக்கு வந்து சேரும்.

- Advertisement -

நாளைய தினம் அமாவாசை திதி இருக்கிறது. முருகனுக்கு உரிய வைகாசி மாதத்தில் வந்திருக்கும், கிருத்திகை நட்சத்திரம் இருக்கிறது. இந்த இரண்டு நல்ல விஷயங்களும் திங்கட்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கிறது. திங்கட்கிழமை என்பது சோமவார நாள். சிவபெருமானுக்கு உரிய நாள்.

ஆக இந்த நாளில் சிவனின் ஆசீர்வாதம் நமக்கு கிடைக்க வேண்டும், முருகப்பெருமானின் ஆசிர்வாதம் நமக்கு கிடைக்க வேண்டும், முன்னோர்களது ஆசீர்வாதமும் குலதெய்வத்தின் ஆசிர்வாதமும் நமக்கு கிடைக்க வேண்டும், இதற்கு நாளைய தினம் காலையிலேயே நாம் செய்ய வேண்டிய சிறப்பு வாய்ந்த ஒரு மந்திர உற்சாகத்தை பற்றி தான் தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

நாளைய தினம் நீங்கள் வழிபாட்டை மேற்கொண்டாலும் சரி, வழிபாட்டை செய்ய முடியவில்லை என்றாலும் சரி, இந்த மந்திரத்தை காலையிலேயே சொல்லிவிடுங்கள். உங்களுக்கு அனைத்து தெய்வங்களின் ஆசீர்வாதமும் பரிபூரணமாக கிடைத்துவிடும். இந்த மந்திரத்தை சொல்பவர்கள் வாழ்க்கையில் இருக்கும் பாவங்கள் குறையும். வாழ்க்கையில் நீங்கள் அடுத்தடுத்து மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் எல்லாம் வெற்றி கொடுப்பதற்கு, இந்த மந்திரம் ஒரு கருவியாக செயல்படும்.

நாளை காலை சூரிய உதயத்திற்கு முன்பாகவே நீங்கள் கண்விழித்து விட வேண்டும். சூரிய உதயத்திற்கு முன்பாகவே குளித்து விட வேண்டும். நீங்கள் சுடுதண்ணீரில் குளித்தாலும் சரி, பச்சைத் தண்ணீரில் குளித்தாலும் சரி, அதில் ஒரு கைப்பிடி அளவு கல்லுப்பை போட்டுவிட்டு, இந்த தண்ணீர் கங்கா தீர்த்தமாக மாறட்டும். இந்த நாள் எனக்கு இனிய நாளாக அமைய வேண்டும்.

- Advertisement -

இந்த நாளில் இறைவழிபாட்டில் எனக்கு எந்த தடையும் வரக்கூடாது, என்று சொல்லிவிட்டு, அந்த தண்ணீரில் குளித்து விடுங்கள். அதன் பிறகு, குலதெய்வத்தையும், ஈசனையும் முருகனையும் மனதார பிரார்த்தனை செய்து கொண்டு, இந்த இரண்டு வரி மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

மந்திரம்

ஓம் சோமாய நமஹ !
ஓம் கந்தாய நமஹ !

இதையும் படிக்கலாமே: தொழிலில் சிறக்க அம்மன் பரிகாரம்

இவ்வளவுதான். இந்த இரண்டு வரி மந்திரத்தை உச்சரித்து முடித்துவிட்டு, உங்களுடைய அன்றாட வேலைகளை நீங்கள் செய்து கொள்ளுங்கள். வழிபாட்டில் தடைகளும் வராது. வழிபாடு செய்யாதவர்களுக்கு எந்த ஒரு பாவமும் வந்து சேராது. முன்னோர்களின் கோபமும் உங்களை எதுவும் செய்யாது. அதி சக்தி வாய்ந்த இந்த மந்திரம் அனைவருக்கும் பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்