- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval27-05-2025 இன்று சனீஸ்வர ஜெயந்தி

27-05-2025 இன்று சனீஸ்வர ஜெயந்தி

- Advertisement -

இன்றைய தினம் 27-05-2025 செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து சனீஸ்வர ஜெயந்தி ஆனது வந்திருக்கிறது. செவ்வாய் என்பது கடன். உங்கள் வாழ்க்கையில் இருக்கும் கடன் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரவும், இதோடு சேர்த்து தீராத துன்பங்களால் அவதிப்பட்டு கொண்டிருப்பவர்கள், அந்த குறிப்பிட்ட பிரச்சினையிலிருந்து விடுபட வேண்டும் என்றாலும், இன்றைய தினம் செய்ய வேண்டிய வழிபாடு.

சொல்ல வேண்டிய மந்திரத்தை பற்றியும் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். அதிலும் குறிப்பாக நீங்கள் இந்த ஏழு ராசிக்காரர்கள் ஆக இருந்தால் கட்டாயம் இந்த வழிபாட்டை செய்தே ஆக வேண்டும் இவர்கள் எல்லாம் சனியின் பிடியில் இப்போது சிக்கி இருக்கிறார்கள்.

- Advertisement -

சனி ஜெயந்தி 2025

சனி பகவான் அவதரித்த நாளை தான் சனி ஜெயந்தியாக கொண்டாடுகின்றோம். இன்றைய தினம் நீங்கள் கட்டாயம் முருகப் பெருமானையும், பஞ்சபூத கணபதியையும் வழிபாடு செய்ய வேண்டும். இன்று வைகாசி மாதம். வைகாசி விசாகம். வரக்கூடிய மாதம் இது. முருகனுக்கு சொந்தமான மாதம். இன்று திருத்தணி முருகன் கோவிலில் பாலபிஷேகம்.

திருத்தணி முருகா என்னை கடன் சுமையிலிருந்து காப்பாற்று என்று மனதில் ஒரு முறை நினைத்தால் கூட போதும். உங்களுடைய கடன் சுமை இன்றிலிருந்து படிப்படியாக குறைய துவங்கும் இது முதல் விஷயம்.

- Advertisement -

அடுத்ததாக சனி பகவான் என்றால் அந்தப் பிரச்சினையில் இருந்து வெளிவர நாம் வழிபட வேண்டிய தெய்வம் கணபதி. அதிலும் இந்த பஞ்சபூத கணபதியை நினைத்து இன்று வழிபாடு செய்தால் எவ்வளவு பெரிய சனிதோஷமும் விலகும். சனிபகவான் உங்களை எதுவுமே செய்ய மாட்டார். பஞ்சபூத கணபதியை மனதில் நிறுத்துங்கள்.

இந்த பதிவிற்கு மேலே புகைப்படத்தில் பஞ்சபூதகணபதி படம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை நன்றாக உற்று நோக்குங்கள் பிறகு உங்களுடைய துன்பங்கள் எல்லாம் உங்களை விட்டு விலக வேண்டும். “சனி பகவானே என்னால் இந்த பாரத்தை தாங்க முடியவில்லை. என்னுடைய கஷ்டத்தை கொஞ்சம் குறைத்து வையப்பா” என்று மட்டும் மனதில் நினைத்து இந்த மந்திரத்தை 27 முறை சொன்னால் போதும். இப்போது நீங்கள் இருந்த இடத்திலிருந்து இந்த மந்திரத்தை படித்தாலும் உங்களுக்கான பலன் கிடைக்கும்.

- Advertisement -

கணபதி மந்திரம்

ஓம் ஹ்ரீம் கம் ஹ்ரீம் வசமான ஸ்வாஹா !
Om hreem gum hreem vasamana swaha !

இவ்வளவுதான். வேலையில் இருப்பவர்கள், வெளியில் இருப்பவர்கள், கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் எல்லாம் இந்த மந்திரத்தை இருந்த இடத்திலிருந்து ஒரு நிமிடம் சொன்னால் போதும். நிச்சயமாக உங்களுடைய தலையெழுத்து மாறிவிடும். நான் வீட்டில் தான் இருக்கிறேன், என்னால் பூஜை அறையில் விளக்கு ஏற்றி இந்த மந்திரத்தை சொல்ல முடியும் என்றால், பூஜை அறையில் விளக்கு ஏற்றி இந்த மந்திரத்தை சொல்லுங்கள்.

இதையும் படிக்கலாமே: கேட்டதை கொடுக்கும் மகாவிஷ்ணு மந்திரம்

வீட்டு பக்கத்தில் ஏதேனும் முருகன் கோவில், விநாயகர் கோவில் இருந்தால் அங்கு சென்று இந்த மந்திரத்தை சொல்லுங்கள். நிச்சயமாக உங்களுடைய பிரச்சனைகளுக்கு விடிவுகாலம் பிறக்கும். அதிலும் குறிப்பாக சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம், மேஷம், ரிஷபம், இந்த ஏழு ராசிக்காரர்களும் இன்றைய தினம் மேல் சொன்ன வழிபாட்டை செய்தீர்கள் என்றால் உங்களுக்கு வாழ்க்கையில் இருக்கும் இன்னல்கள் சீக்கிரம் விலகும் என்ற தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்