- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilவலுவான தலைமுடியை வளர வைக்கும் பாதாம் பிசின்

வலுவான தலைமுடியை வளர வைக்கும் பாதாம் பிசின்

- Advertisement -

நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வெளிப்புற தோற்றத்திற்கு பலவிதமான வகையில் முக்கியத்துவத்தை தருகிறோம். ஒரு சிலர் தங்களுடைய சருமத்திற்கு அதிக அளவில் முக்கியத்துவம் தருவார்கள். இன்னும் சிலரோ தங்களுடைய தலைமுடிக்கு அதிகளவில் முக்கியம் தருவார்கள். அந்த வகையில் தலைமுடிக்கு முக்கியம் தரக்கூடிய பலரது பிரச்சினையாக திகழ்வதுதான் தலைமுடி உதிர்தல். இந்த தலைமுடி உதிர்தல் என்பது அதிக அளவில் ஏற்படும் பொழுது தலைமுடி வலுவிழந்து இருப்பது தான் முக்கியமான காரணமாக திகழ்கிறது. அந்த வலுவிழந்த தலைமுறையையும் வலிமையாக உறுதியாக மாற்றுவதற்கு போட வேண்டிய ஒரு ஹேர்பேக்கை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

தலைமுடியை வளர வைக்கும் பாதாம் பிசின்

தலை முடி வலுவிழந்து இருந்தாலேயே அதிக அளவில் முடி உதிர்தல் என்பது உண்டாகும். இதற்கு பலவிதமான காரணங்கள் இருக்கின்றன. அவற்றை ஆராய்ந்து சரி செய்து கொள்வதோடு ஆரோக்கியமான உணவுப் பொருட்களை உட்கொள்வதையும், அதிக அளவில் தண்ணீர் குடிப்பதையும், முறையாக உறங்குவதையும் பின்பற்ற வேண்டும். இதோடு வெளிப்பூச்சாக சில ஹேர் பேக்குகளை பயன்படுத்தும் பொழுதும் தலைமுடி உறுதியாக மாறும்.

- Advertisement -

இதற்கு நமக்கு மூன்றே மூன்று பொருட்கள்தான் தேவைப்படும். அதில் மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்வதுதான் பாதாம் பிசின். பாதாம் பருப்பில் என்னென்ன சத்துகள் இருக்கின்றதோ அவை அனைத்துமே பாதாம் பிசினிலும் இருக்கிறது. மேலும் இது குளிர்ச்சியை தரக்கூடியது என்பதால் உடல் உஷ்ணத்தால் ஏற்படக்கூடிய முடி உதிர்வையும் இது தடுத்து நிறுத்தும். 10 துண்டுகள் பாதாம் பிசினை எடுத்து தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நாள் இரவு முழுவதும் அது ஊறட்டும். மறுநாள் காலையில் நம்முடைய தலை முடிக்கு தேவையான அளவு பாதாம் பிசினை எடுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மீதம் இருக்கும் பாதாம் பிசினை பிரிட்ஜில் வைத்து அடுத்த முறை ஹேர் பேக் தயார் செய்யும் பொழுது பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதோடு நடுத்தரமாக இருக்கக்கூடிய நன்றாக பழுத்த வாழைப்பழம் ஒன்றையும் போட வேண்டும். வாழைப்பழத்தில் அதிக அளவில் உயிர் சத்துக்கள் இருக்கின்றன. இந்த உயிர் சத்துக்கள் நம்முடைய தலைமுடியை உறுதியாக மாற்றுவதோடு தலைமுடி வளர்ச்சியையும் அதிகரிக்கும். அடுத்ததாக நாம் நம்முடைய தலைக்கு எந்த எண்ணையை பயன்படுத்துவோமோ அந்த எண்ணெயிலிருந்து இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு ஊற்றிக் கொள்ள வேண்டும். இப்பொழுது இதை நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் ஹேர் பேக் தயாராகிவிட்டது. இதை அப்படியே நம்முடைய தலைமுடியின் வேர்க்கால்களில் படும்படி தடவி 15லிருந்து 20 நிமிடம் அப்படியே வைத்திருக்க வேண்டும். பிறகு எப்பொழுதும் போல் நாம் பயன்படுத்தக்கூடிய ஷாம்புவை பயன்படுத்தி தலைக்கு குளித்து விடலாம்.

- Advertisement -

இந்த ஹேர் பேக்கை நாம் தொடர்ச்சியாக வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்துவதனால் நம்முடைய தலைமுடி உதிர்தல் என்பது படிப்படியாக குறையும். தலைமுடி உறுதியாக இருக்கும். புதிதாக முடி வளர்ச்சியையும் உண்டாக்கும். இதோடு பொடுகு பிரச்சனை இருக்கும் பட்சத்தில் அந்த பொடுகு பிரச்சினையையும் தீர்க்கும். முடியை பட்டு போல மிருதுவாக மாற்றிவிடும்.

இதையும் படிக்கலாமே:மென்மையான பளபளப்பான முகத்தைப் பெற

பலவிதமான சத்துக்கள் நிறைந்த இந்த இரண்டு பொருட்களையும் நம்முடைய தலைமுடிக்கு நாம் பயன்படுத்துவதன் மூலம் தலைக்கு தேவையான அனைத்து விதமான சத்துக்களும் கிடைக்கும். அதன் மூலம் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை பெற முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்