வெள்ளிக்கிழமை என்றாலே அது மங்களகரமான கிழமை என்று நம் அனைவருக்குமே தெரியும். பலரும் வெள்ளிக்கிழமை மட்டுமாவது வீட்டில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வார்கள். மேலும் பெண் தெய்வ வழிபாட்டிற்கு உகந்த கிழமையாகவும் வெள்ளிக்கிழமை திகழ்கிறது. அப்படிப்பட்ட வெள்ளிக்கிழமை அன்று வளர்பிறை சதுர்த்தி வருகிறது. பொதுவாகவே வெள்ளிக்கிழமை சிறப்பு வாய்ந்தது. அதிலும் வளர்பிறை வெள்ளிக்கிழமைக்கு அதிக பலன் கிடைக்கும். அந்த வெள்ளிக்கிழமையில் சதுர்த்தி திதி வரும் பொழுது அதற்கு கூடுதல் பலன்கள் உண்டாகும் என்றே கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த நாளில் பண பற்றாக்குறை நீங்குவதற்கு செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பண பற்றாக்குறை நீங்க
பணத்தை சம்பாதிப்பதையே கொள்கையாக வைத்திருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். என்னதான் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்தாலும் சம்பாதித்த பணம் கையில் வந்தவுடன் செலவாகி விடுகிறது என்று புலம்புபவர்களும் இருக்கிறார்கள். பணத்தை எவ்வளவு சம்பாதித்தாலும் பற்றவில்லை போதவில்லை என்று புலம்புபவர்களும் இருக்கிறார்கள். ஒரு சிலருக்கு அவர்களுடைய உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்காமல் கூட போயிருக்கும் அல்லது கையில் பணவரவு இல்லாத ஒரு நிலை கூட ஏற்பட்டிருக்கும். இப்படி பணம் தொடர்பான எந்த பிரச்சினையாக இருந்தாலும் அந்த பிரச்சினை தீர்வதற்கு வளர்பிறை வெள்ளிக்கிழமையில் வரக்கூடிய சதுர்த்தி திதி என்று இந்த ஒரு எளிமையான பரிகாரத்தை செய்ய வேண்டும்.
இந்த பரிகாரத்தை நாம் வளர்பிறையில் வரக்கூடிய வெள்ளிக்கிழமையில் வரக்கூடிய வளர்பிறை சதுர்த்தி அன்று செய்யும் பொழுது மகாலட்சுமியின் அருளையும் அதேசமயம் விநாயகப் பெருமானின் அருளையும் பரிபூரணமாக பெற முடியும் என்றே கூறலாம். இதற்கு மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய ஏலக்காய் ஒன்று வேண்டும். அதேபோல் பணம்தான் பணத்தை ஈர்க்கும் என்பதால் ஒரு ரூபாய் நாணயம் வேண்டும். இவை இரண்டும் இருந்தாலே இந்த பரிகாரத்தை நாம் செய்துவிடலாம். இந்த பரிகாரத்திற்காக நாம் எடுத்த ஏலக்காய் விதைகள் வெளியில் தெரியாத நல்ல ஏலக்காயாக இருக்க வேண்டும்.
இந்த பரிகாரத்தை காலையிலும் செய்யலாம் மாலையிலும் செய்யலாம். குறிப்பாக சுக்கிர ஹோரையில் செய்யும் பொழுது அதிக பலன் கிடைக்கும். ஒரு சிவப்பு நிற பேனாவை எடுத்து ஏலக்காயின் ஒரு பகுதியில் ஸ்வஸ்திக் சின்னத்தை வரைய வேண்டும். இந்த ஸ்வஸ்திக் சின்னத்தை வரைவதன் மூலம் நமக்கு அதிக அளவில் பண வரவு ஏற்படும் என்று கூறப்படுகிறது. அடுத்ததாக ஏலக்காயை திருப்பி மற்றொரு பக்கத்தில் மகாலட்சுமியை ஈர்க்கக்கூடிய எண்ணாக இருக்கும் 2918 என்ற எண்ணை எழுத வேண்டும்.
பிறகு வலது கையில் இந்த ஏலக்காயையும் ஒரு ரூபாய் நாணயத்தையும் வைத்துக்கொண்டு விநாயகப் பெருமானுக்கு முன்பாக அரச இலையில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்து விநாயகப் பெருமானின் இந்த ஒரு மந்திரத்தை 27 முறையோ அல்லது 108 முறையோ கூற வேண்டும். இந்த மந்திரம் நிதி கணபதியின் மந்திரமாக கருதப்படுகிறது. இந்த பரிகாரத்தை நாம் செய்யும் பொழுது விநாயகப் பெருமானையும் நாம் வழிபாடு செய்கிறோம். அதேசமயம் மகாலட்சுமி தாயாரையும் வழிபாடு செய்கிறோம் என்பதால் இவர்கள் இருவரின் அருளால் நமக்கு பணவரவு அதிகரிக்கும், பணவரவில் ஏதேனும் தடைகள் இருக்கும் பட்சத்தில் அவையும் விலகும்.
மந்திரம்
“ஓம் வக்ரதுண்டாய ஹும்”
மந்திரத்தை கூறி முடித்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்துவிட்டு ஏலக்காயையும் ஒரு ரூபாய் நாணயத்தையும் ஒரு சிவப்பு நிற துணியில் கட்டி எந்த இடத்தில் பணத்தை வைத்து எடுப்போமோ அந்த இடத்தில் வைத்து விட வேண்டும். அடுத்த மாதம் வரக்கூடிய வளர்பிறை சதுர்த்தி அன்று இந்த ஏலக்காயை கால்படாத இடத்தில் போட்டுவிட்டு புதிதாக செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இதையும் படிக்கலாமே: கடன் தீர்க்கும் கரிநாள்
மகாலட்சுமியை ஆகர்ஷணம் செய்து விநாயகப் பெருமானின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கு உதவக்கூடிய இந்த வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய வளர்பிறை சதுர்த்தியை முழுமையாக பயன்படுத்தி பண பற்றாக்குறை நீக்கி நலமோடு சிறப்பாக வாழ்வோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.