- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடன் தீர்க்கும் கரிநாள்

கடன் தீர்க்கும் கரிநாள்

- Advertisement -

பணம்தான் அனைத்திற்கும் மூல காரணமாக திகழ்கிறது. பணம் அதிகளவில் இருந்து விட்டால் அந்த பணத்தை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். ஒரு வேளை பணம் இல்லை என்றாலோ தங்களுடைய தேவைக்கு பணம் இல்லாமல் போய்விட்டாலோ பிறரிடம் இருந்து கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். கடன் என்ற ஒன்று நம் வாழ்வில் வந்து விட்டால் நாம் இழக்கக்கூடாத அனைத்தையும் இழந்து விடுவோம். முக்கியமாக சந்தோஷம் என்பதே முற்றிலுமாக இருக்காது. அப்படிப்பட்ட கடனை தீர்ப்பதற்கு பல வழிமுறைகள் இருந்தாலும் என்ன செய்தாலும் கடன் பிரச்சனை ஒழியவே இல்லை என்பவர்கள் வளர்பிறை வெள்ளிக்கிழமை சதுர்த்தி திதியோடு வரக்கூடிய கரி நாளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அன்றைய நாளில் செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

கடன் தீர்க்கும் கரிநாள்

காலண்டரில் அடிக்கடி கரிநாள் என்ற ஒன்றை பார்ப்போம். இந்த கரிநாளில் பலரும் நல்ல காரியங்கள் எதையும் செய்யக்கூடாது என்று கூறியும் கேள்வி பட்டிருப்போம். அப்படிப்பட்ட கரிநாளில் நாம் செய்யக்கூடிய சில காரியங்களும் இருக்கிறது. அதில் முக்கியமான காரியம் தான் கடனை திருப்பித் தருவது. எப்படி மைத்ரேய முகூர்த்த நேரத்திலும் செவ்வாய்க்கிழமையிலும் கடனை திருப்பி செலுத்துனால் விரைவிலேயே கடன் பிரச்சினை தீருமோ அதேபோல்தான் கரிநாளையும் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதிலும் இந்த முறை வளர்பிறை வெள்ளிக்கிழமையோடு சதுர்த்தி திதியும் சேர்ந்து வருகிறது. அப்படிப்பட்ட அற்புதமான நாளில் செய்ய வேண்டிய ஒரு எளிமையான வழிபாட்டை இப்பொழுது பார்ப்போம்.

- Advertisement -

மே மாதம் 30ஆம் தேதி வைகாசி மாதத்தின் 15ஆம் நாள் வெள்ளிக்கிழமை வளர்பிறை சதுர்த்தியோடு கரிநாளும் சேர்ந்து வருகிறது. இந்த நாளில் காலை 7:30 மணியிலிருந்து 9:00 மணிக்குள் இருக்கக்கூடிய நேரத்தில் நாம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தினோம் என்றால் மூன்றே மாதத்தில் அந்த கடனை அடைப்பதற்குரிய வழி உண்டாகும் என்று கூறப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் அந்த நேரத்தில் நாம் ஒரு வழிபாட்டையும் செய்ய வேண்டும்.

இந்த வழிபாட்டிற்கு ஏதாவது ஒரு ரூபாய் நோட்டை எடுத்து அந்த ரூபாய் நோட்டின் நான்கு புறங்களிலும் சுத்தமான புனுகை தடவி கையில் வைத்துக்கொண்டு மனதார கடன் தொடர்பான பிரச்சனைகள் தீர வேண்டும் பணம் தொடர்பான பிரச்சனைகள் தீர வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும். பிறகு அந்த ரூபாய் நோட்டை அப்படியே பூஜை அறையில் விநாயகரின் படத்திற்கு முன்பாகவோ அல்லது மகாலட்சுமியின் படத்திற்கு முன்பாகவோ வைத்து விடுங்கள். இப்படி செய்வதன் மூலம் பணம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் தீருவதோடு கடன் பிரச்சனையும் முற்றிலும் தீரும் என்று சித்தர்கள் கூறியிருக்கிறார்கள்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: வைகாசி மூன்றாம் வெள்ளிக்கிழமை வழிபாடு

சித்தர்களின் சூட்சுமமான இந்த வழிபாட்டை முழு மனதோடு மே மாதம் 30 ஆம் தேதி செய்து பணம் தொடர்பான மற்றும் கடன் தொடர்பான பிரச்சனைகள் அனைத்திலும் இருந்து வெளியில் வருவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்