நம்மில் பலருக்கும் பலவிதத்தில் கடன் என்ற ஒன்று இருக்கும். அந்த கடனை தீர்ப்பதற்குரிய வழிமுறையை மேற்கொண்டாலும் ஒரு சிலர் நீண்ட நாட்களாக கடன் பிரச்சனையில் இருந்து வெளியே வர முடியாத ஒரு நிலையில் இருப்பார்கள். கடனுக்குரிய வட்டியை மட்டுமே கட்டிக்கொண்டு அசலை கட்ட முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பார்கள். ஒரு சில நேரத்தில் அந்த வட்டியை கட்டுவதற்கு கூட வழி இல்லாமல் கடன் வாங்கி வட்டி கட்டும் சூழ்நிலை கூட ஏற்பட்டு இருக்கும். இப்படி நீண்ட நாட்களாக வட்டியை மட்டுமே கட்டிக் கொண்டு இருக்கிறோம், கடன் தீரவில்லை என்பவர்கள் செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வரும் வளர்பிறை அஷ்டமியில் பைரவரை எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பொதுவாகவே கடன் பிரச்சினை தீர வேண்டும் என்றால் செவ்வாய்க்கிழமை நாம் வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். அதேபோல் அஷ்டமி தினத்தில் கால பைரவரையும் வழிபாடு செய்தோம் என்றால் கடன் பிரச்சினை தீரும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த வகையில் செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வரும் அஷ்டமி தினத்தில் நாம் வழிபாடு செய்தோம் என்றால் நமக்கு இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்றே கூறலாம். அந்த வகையில் ஜூன் மாதம் மூன்றாம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று வளர்பிறை அஷ்டமி வருகிறது. அன்றைய நாளில் இந்த எளிமையான வழிபாட்டை செய்பவர்களுக்கு தீராத கடனும் தீரும்.
கால பைரவரை வழிபாடு செய்வதற்கு உகந்த நேரமாக திகழ்வது ராகு காலம் என்று நமக்கு தெரியும். இந்த ராகு காலம் என்பது செவ்வாய்க்கிழமை மாலை 3 மணியிலிருந்து 4:30 மணிக்குள் வரும். இந்த நேரத்தில் நாம் வாங்கிய கடனிலிருந்து அசல் தொகையையோ அல்லது அந்த அசலுக்குரிய வட்டியையோ கட்ட வேண்டும். அவ்வாறு கட்டி முடித்த பிறகு காலபைரவரின் இந்த ஒரு மந்திரத்தை 27 முறை சொல்லிக்கொண்டே ஒரு வெள்ளை நிற பேப்பரில் எழுத வேண்டும்.
எழுதி முடித்த பிறகு அதை சிவபெருமானின் பலத்திற்கு முன்பாக வைத்துவிட்டு அருகில் இருக்கக்கூடிய கால பைரவரின் வாகனமான நாய்க்கு நம்மால் இயன்ற உணவுப் பொருட்களை வாங்கி தர வேண்டும். இப்படி ராகு காலத்தில் நாம் கடன் தீருவதற்குரிய வழிமுறையை பின்பற்றினோம் என்றால் காலபைரவரின் அருளால் விரைவிலேயே அந்த கடன் பிரச்சினை தீருவதற்குரிய பண வரவு என்பது உண்டாகும். இயன்றவர்கள் அன்றைய தினம் அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்தில் இருக்கும் பைரவரின் சன்னதியில் நடக்கக்கூடிய அபிஷேகத்தில் கலந்து கொண்டு புனுகு, ஜவ்வாது, பன்னீர் போன்ற வாசனை திரவியங்களை வாங்கி தருவது இன்னும் கூடுதல் பலனை தரும்.
மந்திரம்
“ஓம் பம் பைரவாய நம”
இதையும் படிக்கலாமே:கேட்டதை தரும் மேஜிக் டே
செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வரும் அஷ்டமி தினத்தில் முழு மனதுடன் கால பைரவரை இந்த முறையில் வழிபாடு செய்பவர்களுக்கு கடன் என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் காணாமல் போய்விடும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.