பிரபஞ்சம் என்பது மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றாக திகழ்கிறது. சக்தி வாய்ந்த இந்த பிரபஞ்சத்திடம் நாம் முழுமனதோடு எந்த ஒரு விஷயத்தை கேட்டாலும் எந்த ஒரு விருப்பத்தை கூறினாலும் அந்த விருப்பம் விரைவிலேயே நிறைவேறும் என்று கூறப்படுகிறது. அப்படி நிறைவேறுவதற்கு பிரபஞ்சத்தின் அருளை பெறுவதற்கு சில குறிப்பிட்ட நாட்கள் இருக்கின்றன. அந்த நாட்களில் பிரபஞ்சத்தின் ஆற்றல் என்பது மிகவும் அதிசக்தி வாய்ந்ததாக திகழ்கிறது. அந்த நாளை பயன்படுத்திக் கொண்டோம் என்றால் நாம் விரும்பியது விரும்பிய படியே நம்மை வந்து சேரும். அப்படிப்பட்ட ஆற்றல் மிகுந்த நாளை எந்த முறையில் எப்படி பயன்படுத்தினால் நம்முடைய விருப்பம் நிறைவேறும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
என் கணிதத்தின்படி ஒவ்வொரு எண்ணுக்கும் ஒவ்வொரு விதமான சக்தி இருக்கிறது. ஒன்றிலிருந்து 9 வரை இருக்கக்கூடிய ஒவ்வொரு எண்ணின் ஆற்றலும் ஒவ்வொரு விதமாக இருக்கும். அந்த எண்களில் சில எண்கள் ஒன்றாக சேரும் பொழுது அபரிவிதமான சக்தி என்பது உண்டாகும். அப்படிப்பட்ட அபரிவிதமான சக்தி மிகுந்த எண்களாக திகழ்வதுதான் 3 6 9. இந்த 369 என்ற எண் நாளைய தினம் சேர்ந்து வருகிறது. மூன்றாம் தேதி ஆறாம் மாதம் வருடம் 2025 கூட்டினால் 9 என்று வரும் இந்த அற்புதமான நாளை தான் நாம் மேஜிக் டே என்று கூறுகிறோம்.
இந்த நாளில் நாம் ஏதாவது ஒரு விருப்பத்தை பிரபஞ்சத்திடம் கூறினோம் என்றால் அந்த விருப்பம் விரைவிலேயே நிறைவேறும் என்று கூறப்படுகிறது. அந்த விருப்பத்தை எப்படி பிரபஞ்சத்திடம் கூற வேண்டும் என்பதுதான் சூட்சமமான ஒரு முறை. இதற்கு இந்த நாள் ஆரம்பிக்கக்கூடிய நேரத்தில் இருந்து இந்த நாள் முடியக்கூடிய நேரத்திற்குள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த வழிமுறையை பின்பற்றலாம். அதாவது ஜூன் மாதம் மூன்றாம் தேதி இரவு 12 மணிக்கு தொடங்கும். அதிலிருந்து அந்த நாள் முடியக்கூடிய இரவு 11:59 வரை இருக்கக்கூடிய நேரத்தில் எந்த நேரத்தை வேண்டுமானாலும் நாம் பயன்படுத்தலாம்.
இந்த வழிமுறையை வீட்டில் இருந்து கொண்டு தான் செய்ய வேண்டும் என்று கிடையாது. சுத்தமாக இருப்பவர்கள் தான் செய்ய வேண்டும் என்று கிடையாது. யார் வேண்டுமானாலும் செய்யலாம். எந்த இடத்தில் இருந்து கொண்டு வேண்டுமானாலும் செய்யலாம். அசைவம் சாப்பிட்டு இருந்தாலும் செய்யலாம். குளிக்கவில்லை என்றாலும் கூட செய்யலாம். இதற்கு நமக்கு ஒரு வெள்ளை நிற பேப்பர் வேண்டும். இதில் பச்சை அல்லது மஞ்சள் நிற பேனாவை பயன்படுத்தி நம்முடைய விருப்பம் என்னவோ அந்த விருப்பத்தை எழுத வேண்டும்.
வேலை கிடைக்க வேண்டும் என்றால் நல்ல வேலை கிடைத்துவிட்டது என்று எழுத வேண்டும். திருமணம் நடைபெற வேண்டும் என்றால் மனதிற்கு பிடித்த திருமண வாழ்க்கை அமைந்து விட்டது என்று எழுத வேண்டும். கடனை அடைக்க வேண்டும் என்றால் எவ்வளவு கடன் இருக்கிறதோ அதை எழுதி பணம் கிடைத்துவிட்டது என்று எழுத வேண்டும். வீடு கட்ட வேண்டும் என்றால் வீடு கட்டி குடியேறி விட்டோம் என்று எழுத வேண்டும். இப்படி நம்முடைய விருப்பத்தை எழுதுவதற்கு முன்பாக மேஜிக் எண்ணான 369 என்பதை எழுத வேண்டும். உதாரணமாக 369 மனதிற்கு பிடித்த வேலை கிடைத்துவிட்டது என்று ஒன்பது முறை எழுத வேண்டும். எழுதிய பிறகு இந்த பேப்பரை மடித்து சுத்தமான ஒரு இடத்தில் வைத்து விடுங்கள். உங்களுடைய விருப்பம் எப்பொழுது நிறைவேறுகிறதோ அப்பொழுது அந்த பேப்பரை எடுத்து எரித்துவிட்டு அதன் சாம்பலை ஊதிவிட வேண்டும்.
இதையும் படிக்கலாமே:வேண்டுதலை நிறைவேற்றும் வைகாசி செவ்வாய்
இப்படிப்பட்ட அற்புதமான எண்களின் சேர்க்கை வருவது என்பது மிகவும் அரிது. அப்படி அரிதான ஒரு சேர்க்கை கொண்ட நாளில் நாம் பிரபஞ்சத்திடம் விரும்பியதை கேட்க அது விரைவிலேயே நமக்கு அருள் புரியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.