- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசொந்த வீடு யோகம் தரும் வாஸ்து தீபம்

சொந்த வீடு யோகம் தரும் வாஸ்து தீபம்

- Advertisement -

நாம் இருக்கக்கூடிய இடத்திற்கு தெய்வமாக திகழக்கூடியவர்தான் வாஸ்து பகவான். வாஸ்து பகவான் எப்பொழுதும் நித்திரையில் இருப்பார் என்றும் ஒரு வருடத்தில் எட்டு முறை மட்டும்தான் கண் விழிப்பார் என்றும் அதுவும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும்தான் கண் விழிப்பார் என்றும் கூறப்படுகிறது. அந்த நேரத்தை தான் நாம் வாஸ்து நேரம் என்று கூறுகிறோம். வாஸ்து பகவான் கண்விழித்து இருக்க கூடிய நேரத்தில் நாம் எந்த ஒரு செயலை செய்தாலும் வாஸ்து பகவானின் அருளால் அது நன்மையாகவே சென்றடையும் என்று கூறப்படுகிறது. அதனால் தான் அந்த நேரத்தில் பலரும் வீடு கட்டுவதற்கு பூஜை போடுவது, நிலைவாசல் வைப்பது, ஆலய திருப்பணிகளை தொடங்குவது போன்ற பூமி தொடர்பான வேலைகளை செய்வார்கள். சொந்த வீடு அமைய வேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு அந்த கனவை நினைவாக்கும் வகையில் வாஸ்து நேரத்தில் ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

வாஸ்து நாள் என்பது ஜூன் மாதம் நான்காம் தேதி புதன்கிழமை அன்று வருகிறது. அன்றைய தினம் நவமி திதியும் சேர்ந்து வருவது கூடுதல் சிறப்பை தரும். மேலும் வாஸ்து நாளில் வாஸ்து நேரம் என்பது காலை 9: 58 மணிக்கு தொடங்கி 10: 34 நிமிடம் வரை இருக்கிறது. இந்த நேரத்தில் நாம் வீட்டில் தீபமேற்றி வழிபாடு செய்ய வேண்டும். அப்படி செய்வதன் மூலம் வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு சொந்த வீட்டில் குடியேறும் யோகம் உண்டாகும். சொந்த வீட்டில் இருப்பவர்களுக்கு வாஸ்து ரீதியாக எந்த பிரச்சனை இருந்தாலும் அவை தீரும்.

- Advertisement -

வாஸ்து நேரம் தொடங்கக்கூடிய நேரத்தில் வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய சிவபெருமானின் படத்திற்கு முன்பு அல்லது சிவலிங்கத்திற்கு முன்பு பன்னீரை வைத்து சுத்தம் செய்து பச்சரிசி மாவினால் ஏதாவது ஒரு கோலத்தை போட வேண்டும். இந்த கோலத்தின் மீது நான்கு திசைகளையும் பார்த்தவாறு நான்கு அகல் விளக்குகளை வைத்து நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். பிறகு சிவபெருமானுக்கு ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைத்துவிட்டு உங்களுக்கு வாஸ்து பகவானிடம் என்ன வேண்டுதலை வைக்க வேண்டுமோ அந்த வேண்டுதலை முழுமனதோடு கூற வேண்டும்.

சொந்த வீடு கட்ட வேண்டும் அல்லது சொந்த வீட்டில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் தீர வேண்டும் இப்படி ஏதாவது ஒரு வேண்டுதலை முன்வைத்து முழு மனதோடு வேண்ட வேண்டும். பிறகு சிவபெருமானின் இந்த ஒரு மந்திரத்தை 58 முறை கூறி கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்துவிட வேண்டும். இந்த முறையில் நாம் செய்வதன் மூலம் வாஸ்து பகவானின் அருளை பரிபூரணமாக பெறுவதோடு நம்முடைய வேண்டுதலையும் நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

- Advertisement -

மந்திரம்

“ஓம் சிவ சிவ சங்கரா நம:

இதையும் படிக்கலாமே: வாஸ்து நாள் மந்திரம்

வீடு, நிலம் தொடர்பான நீண்ட நாள் ஆசை நிறைவேறுவதற்குரிய ஒரு எளிமையான வழிபாட்டு முறையை முழுமனதோடு வாஸ்து நாளில் வாஸ்து நேரத்தில் செய்வதன் மூலம் வாஸ்து பகவானின் அருளால் நம்முடைய ஆசை நிறைவேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்