- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஎதிரிகள் தொல்லை நீங்கவும், மன பயம் தீரவும்

எதிரிகள் தொல்லை நீங்கவும், மன பயம் தீரவும்

- Advertisement -

நாம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு விஷயத்தில் மனதில் ஒருவித பயம் இருந்து கொண்டே இருக்கும். ஒரு சிலருக்கு எதற்கெடுத்தாலும் பயமிருக்கும். எந்த ஒரு முடிவையும் தெளிவாக எடுக்க முடியாது ஒரு பயத்துடனே இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களும் சரி, நம்முடைய எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற பயத்தில் இருப்பவர்களும் சரி, எதிரிகளால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களும், எதிரிகளால் இன்னும் என்னென்ன பிரச்சனை வருமோ என்று பயந்து கொண்டு இருப்பவர்களும் தேய்பிறை அஷ்டமி நாளில் கால பைரவருக்கு இந்த ஒரு தீபத்தை ஏற்றி இப்படி வழிபாடு செய்தால் போதும். அந்த தீபத்தை எப்படி ஏற்றி எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

எதிரிகள் தொல்லை, மன பயம் நீங்க

மனதில் இருக்கக்கூடிய பயத்தை நீக்கி தைரியத்தை கொடுக்கக் கூடிய அற்புதமான தெய்வமாக திகழக்கூடியவர்தான் காலபைரவர். யார் ஒருவர் தொடர்ச்சியாக காலபைரவரை வழிபாடு செய்கிறார்களோ அவர்கள் எடுக்கக்கூடிய முடிவு சிறந்த முடிவாக இருக்கும். அவர்களின் வாழ்க்கை சிறப்பான வாழ்க்கையாக மாறும். எந்த சூழ்நிலையிலும் மனதை ஒருநிலைப்படுத்தி தெளிவான முடிவை எடுக்கும் ஆற்றலை காலபைரவர் அருள்வார். மேலும் நம்முடைய முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தக்கூடிய எதிரிகளை நம் பக்கமே வரவிடாமல் விரட்டக்கூடிய அற்புதமான தெய்வம் ஆகவும் காலபைரவர் திகழ்கிறார்.

- Advertisement -

அப்படிப்பட்ட காலபைரவரை ஜூன் மாதம் 18ஆம் தேதி காலை 11 மணியிலிருந்து ஜூலை மாதம் 19ஆம் தேதி காலை 9 மணிக்குள் அருகில் இருக்கக்கூடிய காலபைரவர் வீற்றிருக்கக் கூடிய ஆலயத்தில் வழிபாடு செய்ய வேண்டும். அவ்வாறு வழிபாடு செய்யும்பொழுது நாம் அவருக்காக ஒரு தீபத்தை ஏற்ற வேண்டும். அந்த தீபம் தான் தேங்காய் தீபம். நல்ல தேங்காயாக ஒரு தேங்காயை வாங்கி அதை சரிசமமாக உடைத்து அதன் வெளிப்புறத்தில் மஞ்சளை தடவி 8 எண்ணிக்கையில் குங்குமத்தை வைத்து காலபைரவருக்கு முன்பாக ஒரு வாழை இலையை விரித்து அதில் சிறிதளவு பச்சரிசியை பரப்பி அதற்கு மேல் இந்த தேங்காயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

பிறகு நல்ல புள்ளி இல்லாத எலுமிச்சம் பழமாக மூன்று எலுமிச்சம் பழத்தை வாங்கி அதை கால பைரவரின் பாதத்தில் வைத்து நம்முடைய எதிரிகளின் தொல்லை நீங்க வேண்டும், பிரச்சனைகள் விலக வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். அவ்வாறு வேண்டி முடித்த பிறகு மூன்று எலுமிச்சம் பழங்களில் இருந்து இரண்டு எலுமிச்சம் பழங்களை மட்டும் வீட்டிற்கு எடுத்து வந்து ஒரு எலுமிச்சம் பழத்தை பூஜை அறையில் வைத்து விட வேண்டும். மற்றொன்றை அன்று இரவு வீட்டில் இருக்கக்கூடிய அனைத்து நபர்களையும் வைத்து திருஷ்டி சுத்தி போட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் எதிரிகள் மட்டுமல்லாமல் நம்மை முன்னேற விடாமல் தடுக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களும் விலகும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: பைரவர் அருளை பெற தேய்பிறை அஷ்டமி வழிபாடு

எளிமையான வழிப்பாடாக இருந்தாலும் அதிசக்தி வாய்ந்த வழிபாடாக இந்த தேய்பிறை அஷ்டமி காலபைரவர் வழிபாடு திகழ்கிறது. முழு நம்பிக்கையோடு காலபைரவரை தேய்பிறை அஷ்டமியில் இந்த முறையில் வழிபாடு செய்து வாழ்க்கையில் மேலும் மேலும் முன்னேரலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்