போராட்டமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்றால், அதற்கு தேவையான சக்தியும் துணிச்சலும் நமக்கு கிடைக்க வேண்டும். முருகர் கையில் இருக்கும் வேல்தான் நமக்கு சக்தியை கொடுக்கக்கூடியது, தைரியத்தை கொடுக்கக் கூடியது. இன்று முருகனுக்கு உகந்த நாள். இன்று 22-6-2025 மாலை 4 மணி அளவில் கிருத்திகை திதி பிறந்திருக்கிறது. ஞாயிற்றுக்கிழமையோடு இந்த கிருத்திகை திதியானது பிறந்திருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது.
ஏனென்றால் ஞாயிறு என்பது சூரியன். வேலை, வியாபாரம் இவைகளை சிறப்பாக நடத்தித் தரக்கூடிய கிரகம் சூரிய பகவான். நம்முடைய வேலையும் வியாபாரமும் சிறப்பாக நடந்து, நிறைய சம்பாத்தியம் செய்தால் போதும். வாழ்க்கையை போராடி எதிர்கொள்ளும் சக்தி நமக்கு கிடைத்துவிடும். அதற்கு இன்று இரவு தூங்கும் போது நாம் செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை தான் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவை மூலம் தெரிந்து கொள்ள போகின்றோம். கார்த்திகை மைந்தன் கந்தனை நினைத்து இந்த பதிவிற்குள் பயணம் செய்வோமா.
இன்று இரவு தூங்க செல்வதற்கு முன்பு இந்த மந்திரத்தை 6 முறை சொன்னாலும் சரிதான். 6 முறை ஒரு பேப்பரில் எழுதலாம். உங்களுக்கு என்ன கஷ்டம் இருக்கிறதோ, அந்த கஷ்டம் சரியாகிவிட்டது. முருகா உன் அருளால் எனக்கு நல்லதே நடந்தது. இனி வரக்கூடிய நாட்களில் முருகனின் அருளால் நல்லதே நடக்கும், என்று மனதார பிரார்த்தனை செய்து, கொண்டு 6 முறை கந்தனின் இந்த மந்திரத்தை சொல்லுங்கள். சக்தி தானாக உங்களுக்குள் வந்துவிடும்.
கண்களை மூடி, மன கண்களுக்குள் முருகனை நிறுத்தி, முருகன் கையில் இருக்கும் வேலை பார்ப்பது போல கற்பனை செய்து, கொள்ளுங்கள். உங்கள் வீட்டு பூஜை அறையில் இப்படி கம்பீரமாக ஒரு வேல் கையில் வைத்துக்கொண்டு முருகப்பெருமான் நின்று கொண்டிருந்தால் அவரைப் பார்த்து, இந்த மந்திரத்தை சொல்லலாம். வீட்டில் வேல் வைத்திருக்கிறீர்கள் என்றால், அந்த வேலை பார்த்து இந்த மந்திரத்தை சொல்லலாம். குறைந்தபட்சம் 6 முறை, அதிகபட்சம் 108 முறை, எத்தனை முறை உச்சரிக்க உங்களுக்கு ஆர்வம் இருந்தாலும், இந்த மந்திரத்தை சொல்லுங்கள் அந்த முருகரின் சக்தி உங்களுக்குள் புகுந்துவிடும்
சக்தி தரும் முருகர் மந்திரம்
ஓம் சக்தி வேலாயுதா நமஹ !
மந்திரத்தைச் சொல்லி முடித்துவிட்டு, முருகரின் நினைப்போடு கண்களை மூடி தூங்குங்கள். நாளை விடியும் பொழுது, உங்களுக்கு நல்லதை மட்டுமே செய்யும். நாளை மட்டும் அல்ல. நாளை முதல் உங்கள் வாழ்க்கையில் நல்லது மட்டுமே நடக்கும். இது முருகர் வாக்கு. நம்பிக்கை இருந்தால் இதை பின்பற்றி பலன் பெறுங்கள்.
இதையும் படிக்கலாமே: யோகங்கள் கிடைக்க சோமவார பிரதோஷ வழிபாடு
நாளைய தினம் 23.6.2025 திங்கட்கிழமை மதியம் 2:18 மணி வரை கிருத்திகை நட்சத்திரம் இருக்கிறது. நாளை காலை எழுந்து கண்விழித்து வெறும் வயிற்றில் இந்த மந்திரத்தைச் சொன்னாலும் நன்மையே நடக்கும். வாய்ப்பு உள்ளவர்கள் வாய்ப்பு உள்ள நேரத்தை பயன்படுத்தி முருகப்பெருமானை வழிபடுங்கள்.