செய்த பாவங்களில் இருந்து விடுபட வேண்டும், சந்தோஷமான வாழ்க்கையை கிடைக்க வேண்டும் என்றால், செய்ய வேண்டிய ஒரே வழிபாடு, சிவ வழிபாடு. சிவனின் பாதங்களை இறுக்கப் பற்றிக் கொண்டால் பாவங்கள் நீங்கும். கர்மவினை குறையும். அந்த சிவபெருமானுக்கு உரிய பிரதோஷ நாள், நாளை 23.6.2025 திங்கட்கிழமையோடு சேர்ந்து வரவிருக்கிறது. அது மட்டுமல்லாமல் இந்த நாளில் மாத சிவராத்திரியும் வந்திருக்கிறது.
சிவபெருமானுக்கு உரிய சோமவாரக் கிழமையில், இந்த அதி அற்புதம் வாய்ந்த பிரதோஷமும், சிவராத்திரியும் சேர்ந்து வந்திருப்பது நமக்கு கிடைத்த வரம். இந்த நாளில் நாம் சொல்ல வேண்டிய அதி சக்தி வாய்ந்த 5 சிவ நாமங்களை பற்றி தான் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
நாளை சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து கொள்ளுங்கள். குளிக்கும் தண்ணீரில் கொஞ்சமாக விபூதி போட்டு, சிவ சிவ நாமத்தை சொல்லி, முதலில் குளித்து விடுங்கள். இன்றைய சிவ வழிபாட்டில் எந்த தடையும் வரக்கூடாது. இந்த தீர்த்தம் கங்கா தீர்த்தமாக மாறட்டும். நான் செய்த பாவங்களுக்கெல்லாம் விமோசனம் கிடைக்கட்டும், என்று சொல்லி கிழக்கு பார்த்து நின்று குளியலை முடித்துவிட்டு, பூஜை அறையில் வந்து நெற்றி நிறைய திருநீறு பூசிக்கொண்டு, சிவனை வணங்கிக் கொண்டு பிறகு இந்த சிவன் நாமங்களை உச்சரிக்க வேண்டும்.
சிவ நாமங்கள்
பொன்னம்பலம், திருச்சிற்றம்பலம், அருணாச்சலம், மஹாதேவ, மஹாலிங்க மத்யார்சுனாசே.
இவ்வளவுதாங்க. இந்த திரு நாமங்கள் சிவபெருமானுக்கு சொந்தமானது. பிரதோஷ நேரத்தில், பிரதோஷ நாளில் இந்த திருநாமங்களை 6 முறை உச்சரித்தால் 2000 முறை சிவ நாமங்களை உச்சரித்த புண்ணியமும் உங்களுக்கு கிடைக்கும். நாளை காலை எழுந்து சிவனிடம் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்டு, ஒருமுறை இந்த நாமங்களை சொல்லி விடுங்கள். வாய்ப்பு உள்ளவர்கள் சிவன் கோவிலுக்கு செல்ல முடியும் பிரதோஷ நேரத்தில் ஈசனை வழிபாடு செய்ய முடியும் என்பவர்கள், சிவன் ஆலயங்களுக்கு சென்று 6 முறை இந்த நாமங்களை சொல்லலாம்.
இதையும் படிக்கலாமே: 11 நாளில் எதிரி தொல்லை விலக மஹா பத்ரகாளி பரிகாரம்
நாளைய தினம் சிவபெருமானை வழிபாடு செய்தால், மனம் சம்பந்தப்பட்ட குழப்பங்கள் நீங்கும். ஜாதக கட்டத்தில் சந்திர பகவானால் ஏதேனும் பிரச்சனை இருந்தால், அந்த தோஷங்கள் விலகும். திருமண தடை விலகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். நாளைய தினம் சிவன் வழிபாடை தவற விட வேண்டாம் என்ற ஆன்மீகம் சார்ந்த இந்த அரிய தகவலுடன் இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.