- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபணம் சேர வளர்பிறை அஷ்டமி வழிபாடு

பணம் சேர வளர்பிறை அஷ்டமி வழிபாடு

- Advertisement -

உக்கிர தெய்வங்களில் மிகவும் முக்கியமான தெய்வமாக திகழக்கூடியவர் பைரவர் என்று நம் அனைவருக்கும் தெரியும். இவர் எட்டு வடிவங்களில் இருக்கக்கூடியவர் என்றும் அதில் செல்வத்தையும் பணத்தையும் நமக்கு கொடுக்கக்கூடிய ஒரு அற்புதமான பைரவராக ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் திகழ்கிறார் என்றும் நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட சொர்ண ஆகர்சன பைரவரை வளர்பிறை அஷ்டமியில் நாம் முழுமனதோடு வழிபாடு செய்ய பைரவரின் அருளால் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பணத்தையும் தங்கத்தையும் நம்மால் சேர்க்க முடியும். அப்படிப்பட்ட ஒரு வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

வளர்பிறை அஷ்டமி வழிபாடு

எட்டுத்திக்குகளுக்கும் அதிபதியாக திகழ்பவர் பைரவர். பைரவரை வழிபட்டு தான் அஷ்டலஷ்மிகளும் தங்களின் செல்வங்களை பெறுகிறார்கள் என்று கூறப்படுகிறது. அதனால் பைரவருக்குரிய அஷ்டமி தினத்தில் பைரவரை வழிபாடு செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக வளர்பிறை அஷ்டமி சமயத்தில் பைரவரை வழிபாடு செய்யும்பொழுது அஷ்டலட்சுமிகளின் அருளையும் நம்மால் பெற முடியும். அதன் மூலம் பணமும் தங்கமும் அதிக அளவில் சேர ஆரம்பிக்கும்.

- Advertisement -

ஆனி மாதத்தின் வளர்பிறை அஷ்டமி என்பது ஜூலை மாதம் இரண்டாம் தேதி பகல் 3 மணியில் இருந்து ஜூலை மாதம் மூன்றாம் தேதி மாலை 4:30 மணிவரை இருக்கிறது. அதனால் சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபாடு செய்பவர்கள் அஷ்டமி திதி இருக்கக்கூடிய எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வழிபாடு செய்யலாம். வீட்டு பூஜை அறையில் பைரவரை நினைத்து இந்த எளிமையான வழிபாட்டு முறையை செய்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்க்காத அளவிற்கு பணமும் தங்கமும் சேர ஆரம்பிக்கும்.

பலரது வீட்டில் பைரவரின் படம் இருக்காது. ஒரு சிலர் சொர்ண ஆகர்ஷண பைரவரின் படத்தை வைத்திருப்பார்கள். படம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சிவபெருமானின் படம் கண்டிப்பான முறையில் இருக்கும். சிவபெருமானின் ஒரு அவதாரமாக தான் வைரவ திகழ்கிறார் என்பதால் சிவபெருமானின் படத்திற்கு முன்பாக இந்த வழிபாட்டை நாம் செய்யலாம். சிவபெருமானின் படத்திற்கு முன்பாக ஒரு தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஐந்து அகல் விளக்குகளை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சுத் திரி போட்டு தீபம் ஏற்றிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பைரவருக்கு வாசனை பொருட்கள் என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால் வாசனை மிகுந்த மலர்களை வைத்து சொர்ண ஆகர்ஷன வைரவரை மனதார நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த சமயத்தில் ஏதாவது ஒரு இனிப்பு பொருளை நெய்வேத்தியமாக வைக்கலாம் அல்லது தயிர் சாதத்தை கூட நெய்வேத்தியமாக வைக்கலாம். பிறகு சொர்ண ஆகர்ஷண பைரவரின் பின்வரும் இந்த ஒரு மந்திரத்தை 11 முறை கூற வேண்டும். 11 முறை கூறி முடித்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம்.

மந்திரம்

“ஓம் ஸ்ரீம் க்லீம் சொர்ண ஆகர்ஷண பைரவாய நமோ நமஹ…”

இதையும் படிக்கலாமே: வீட்டை கட்டி முடிக்க பரிகாரம்

மிகவும் எளிமையான இந்த ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாட்டை வீட்டிலேயும் செய்யலாம். அதே சமயம் பைரவர் சன்னதி இருக்கக்கூடிய ஆலயத்திலும் செய்யலாம். முழுமனதோடு பைரவரை நினைத்து இந்த முறையில் வழிபாடு செய்பவர்களுக்கு அவரின் அருளால் பணமும் தங்கமும் சேர ஆரம்பிக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்