வாழ்க்கையில் எப்போதுமே காரியத்தடை வந்து முட்டுக்கட்டை போடுகிறது. முயற்சிகளை மேற்கொண்டால் வெற்றி காண முடியவில்லை. தோல்வி தோல்வி தோல்வி என்று வாழ்க்கையே வெறுத்துப் போய்விட்டது. இனியாவது வாழ்க்கையில் வெற்றியை பார்க்க வேண்டும். சந்தோஷத்தை பார்க்க வேண்டும்.
மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றி அடைய வேண்டும் என்றால், நாளைய தினம் வரவிருக்கும் சனிக்கிழமை யாரும் தவற விடாதிங்க. நாளை வரக்கூடிய சனிக்கிழமைக்கு அப்படி என்ன சிறப்பு. நாளைய தினம் எந்தெந்த வழிபாடுகளை மேற்கொண்டால் என்னென்ன பலன்கள் நமக்கு கிடைக்கும். ஆன்மீகம் சார்ந்த சில தகவல்கள் இந்த பதிவில் உங்களுக்காக.
நாளைய தினம் சனிக்கிழமை சுவாதி நட்சத்திரம், தசமி திதி அமிர்த யோகத்தோடு சேர்ந்து வருகிறது. இந்த நாளில் நீங்கள் செய்யக்கூடிய வழிபாடு மிகப்பெரிய அளவில் வெற்றியை சீக்கிரமாக கொடுக்கும். நாளும் கோளும் செய்வது போல நல்லவர்கள் கூட செய்ய மாட்டார்கள் என்று சொல்லுவார்கள். அது போல தான் நேரமும் காலமும் நாளை கைகூடி வந்திருக்கிறது இந்த நாளை நழுவ விடாதீர்கள்.
காரியதடை விலக அனுமன் வழிபாடு
நாளைய தினம் வீட்டு பக்கத்தில் அனுமன் கோவில் இருந்தால் காரியை தடை விலக வேண்டும் வெற்றி கிடைக்க வேண்டும் என்று, வேண்டிக்கொண்டு அனுமனுக்கு 27 வெற்றிலைகளில் மாலை கட்டிப்போட்டுவிட்டு, கொஞ்சம் அவல் பிரசாதமாக வைத்து, உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து அந்த அவலை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உங்கள் கையால் பிரசாதமாக கொடுக்க உங்களுடைய காரிய தடை விலகும். உங்களுக்கு வெற்றி மேல் வெற்றிகள் வந்து குவியும்.
தீராத பிரச்சனைகள் தீர
அடுத்தபடியாக நாளைய தினம் நரசிம்மர் வழிபாடும் கருட பகவான் வழிபாடும் உங்களுக்கு பல வகைகளில் நன்மையை கொடுக்கும். தீராத நோய்வாய் பட்டவர்கள் தீராத துன்பத்தால் குடும்பத்தில் அவதிப்பட்டு வருபவர்கள் நாளைய தினம் நரசிம்மர் வழிபாடும் செய்யலாம். கருட பகவான் வழிபாடும் செய்யலாம். உங்கள் வீட்டின் அருகில் நரசிம்மர் கோவில் இருந்தால் அங்கு சென்று நரசிம்மருக்கு இரண்டு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வைத்து நரசிம்மரை 27 முறை வளம் வர நிச்சயமாக உங்கள் தீரா துன்பங்கள் விலகும். மனதில் இருக்கும் பயம் நீங்கும்.
இதே போல தான் பெருமாள் கோவிலில் கருட பகவான் சந்நிதி இருந்தால், அங்கு சென்று நாளைய தினம் வழிபாட்டை மேற்கொள்ளலாம். கருட பகவானுக்கு இரண்டு நெய் தீபங்கள் ஏற்றி வைத்துவிட்டு கருட பகவானை 27 முறை வளம் வந்து பிரார்த்தனை செய்து கொண்டால் வாழ்வில் இருக்கும் தீராத இன்னல்கள் தீரும் என்பதும் நம்பிக்கை.
இதையும் படிக்கலாமே: இன்று வெள்ளிக்கிழமை ஆஷாட நவராத்திரி 9வது நாள் வழிபாடு
மேலே சொன்ன மூன்று வழிபாட்டையும் கட்டாயம் செய்து ஆக வேண்டும் என்ற அவசியம் கிடையாது. உங்களால் எந்த வழிபாட்டை மேற்கொள்ள முடியுமோ அதிலிருந்து ஒரு வழிபாட்டை தேர்ந்தெடுத்துக் கொண்டு நம்பிக்கையோடு அதை செய்யுங்கள். நிச்சயம் நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.