- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஉடல் ஆரோக்கியமாக இருக்க முருகர் வழிபாடு

உடல் ஆரோக்கியமாக இருக்க முருகர் வழிபாடு

- Advertisement -

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். எந்த அளவிற்கு நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு நம்மால் எப்பேர்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் அந்தப் பிரச்சினையில் இருந்து வெளியே வர முடியும். இதுவே நமக்கு கோடிக்கணக்கில் பணம் இருந்தாலும் வசதி வாய்ப்புகள் இருந்தாலும் உடல் ஆரோக்கியம் இல்லை என்றால் அவை எதையுமே நம்மால் அனுபவிக்க முடியாது. அதனால் எது இருக்கிறதோ இல்லையோ உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அப்படி உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு முருகப்பெருமானை நினைத்து செய்ய வேண்டிய ஒரு வழிப்பாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

ஆரோக்கியமாக இருக்க வழிபாடு

முருகப் பெருமானை நினைத்து பலரும் பலவிதங்களில் வழிபாடு செய்வார்கள். பலவிதமான வேண்டுதலுக்காகவும் வழிபாடு செய்வார்கள். ஒரு சிலர் வீட்டிலேயே வழிபாடு செய்வார்கள் இன்னும் சிலர் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வார்கள். அந்த வகையில் முருகப்பெருமானை முழுமனதோடு நினைத்து முருகப்பெருமானுக்குரிய விபூதியை வைத்து எந்த முறையில் வழிபாடு செய்தால் நம் உடலில் இருக்கக்கூடிய அனைத்து விதமான நோய்களும் நீங்கும் என்று தான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை ஒவ்வொரு வாரமும் வரக்கூடிய செவ்வாய்க்கிழமை அன்று பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்ய வேண்டும். பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய முருகப் பெருமானின் சிலைக்கு பால், தயிர், விபூதி போன்றவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும். வீட்டில் சிலை இல்லை என்பவர்கள் முருகப்பெருமானின் படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளலாம். பிறகு முருகப்பெருமானுக்கு முன்பாக ஒன்று அல்லது ஆறு என்ற எண்ணிக்கையில் தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு சிறிய கிண்ணத்தில் விபூதியை எடுத்து வைத்து அதில் பன்னீரை ஊற்றி கலந்து கொள்ளுங்கள். அதை உங்களுடைய மோதிர விரலால் தொட்டு ஒரு தட்டில் முருகப்பெருமானின் ஒரு மந்திரத்தை எழுத வேண்டும். இந்த மந்திரத்தை எழுதி முடித்த பிறகு அந்த தட்டை முருகப்பெருமானுக்கு முன்பாக வைத்து விடுங்கள். முருகப்பெருமானுக்கு ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைத்துவிட்டு தட்டில் எழுதிய அந்த மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். அவ்வாறு உச்சரிக்கும் பொழுது மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து அந்த மந்திரத்தை உச்சரித்துவிட்டு பிறகு வெளியே விட வேண்டும்.

- Advertisement -

இப்படி ஒவ்வொரு மூச்சுக்காற்றாக இழுத்து உள்ளடக்கி அந்த மந்திரத்தை கூறிவிட்டு பிறகு வெளியே விடுவது போல் 108 முறை செய்ய வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்துவிடலாம். மந்திரம் எழுதிய அந்த விபூதி காய்ந்ததும் அதை சேகரித்து ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ளுங்கள். இப்படி தொடர்ச்சியாக ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் முருகப்பெருமானுக்குரிய மந்திரத்தை கூறி வழிபாடு செய்யும் பொழுது உடலில் இருக்கக்கூடிய அனைத்து விதமான நோய்களும் நீங்குவதோடு என்றென்றும் ஆரோக்கியமாக இருக்க முடியும். சேகரித்து வைத்த விபூதியை தினமும் காலையிலும் மாலையிலும் நெற்றியில் வைத்துக் கொள்வது மிகுந்த பலனை தரும்.

மந்திரம்

“ஓம் நமோ குமாராய நமஹ”

இதையும் படிக்கலாமே: தோஷங்களை நீக்கி வெற்றிகளை தரும் கருட வழிபாடு

மிகவும் எளிமையான இந்த முருக வழிபாட்டை முழுமனதோடு யார் ஒருவர் செய்கிறார்களோ அவர்களுடைய உடலில் இருக்கக்கூடிய அனைத்து பிணிகளும் நீங்கி ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வார்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்