- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபெரும் பாவத்திற்கு பரிகாரம்

பெரும் பாவத்திற்கு பரிகாரம்

- Advertisement -

ஒரு சிலருடைய வாழ்க்கை மிகவும் அர்த்தமற்றுக் கிடக்கும். எதற்காக வாழ்கிறோம்? என்று எப்போதும் ஒரு கேள்விக்கனையை மனதில் வைத்துக் கொண்டு பயணம் செய்து கொண்டிருப்போம். கர்மா என்பது விசித்திரமானது. கர்ம பயன்கள் கண்களுக்கு புலப்படாதது. முன்வினை பாவங்கள், ஊழ்வினைகள் அனைத்தும் நம்மை எப்போதும் தொடரும். செய்த வினையின் பலனை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு தான், வாழ்க்கை அர்த்தம் இல்லாமல் இருக்கும். இவர்கள் எந்த பரிகாரம் செய்தால், வாழ்க்கையில் நன்மைகள் நடக்கும்? என்னும் பயனுள்ள ஆன்மீகம் சார்ந்த தகவலை தான் இந்த பதிவில் பகிர்ந்து கொள்கிறோம்.

பெரும் பாவம் செய்துவிட்டேன். அதனால் தான் இந்த அளவிற்கு கஷ்டப்படுகிறேன், என்று வாழ்க்கையில் விரத்தியுடன் இருப்பவர்கள் கண்டிப்பாக இந்த பரிகாரத்தை செய்து பார்த்தால், உங்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. முன்பெல்லாம் தகுதி வாய்ந்த ஜோதிட நிபுணர்கள் துல்லியமாக கணித்து கூறி விடுவார்கள். நாம் எதனால் இந்த பிறவியில் மிகுந்த கஷ்டத்தை அனுபவிக்கிறோம்? என்ன பாவம் செய்திருக்கிறோம்? என்பதை எல்லாம் புட்டு புட்டு வைத்துவிடுவார்கள்.

- Advertisement -

ஆனால் இப்பொழுது பலரும் பணத்திற்காக எதையாவது சொல்லி விடுகின்றனர். உண்மையிலே நாம் செய்த பாவம் என்ன? எதற்காக நாம் இப்பொழுது இந்த அளவிற்கு வேதனையும், வலியுடனும் வாழ்க்கையை அர்த்தமில்லாமல் நடத்திக் கொண்டிருக்கிறோம்? என்று புரிந்து கொள்ள முடியாமல் தவிப்போம். பெரும் பாவம் செய்திருந்தாலும், அதிலிருந்து விமோசனம் பெறுவதற்கு நிறையவே ஆன்மீக ரீதியாக வழிகள் உள்ளன.

மனதார ஒருவருக்கு எந்த பாவமும் இப்போது நீங்கள் இழைக்காவிட்டாலும், உங்களுடைய கர்மங்கள் தொடர்ந்து பிரச்சினைகளை தந்து கொண்டு இருந்தால், நீங்கள் இந்த பரிகாரங்களை செய்து பாருங்கள். வறுமையில் இருப்பவர்களுக்கு தானம் செய்வதே பெரும் புண்ணியத்தை தரும். உண்மையிலேயே வறுமையில் வாழ்பவர்களை தேடி சென்று உங்களால் முடிந்த சிறு உதவிகளையாவது செய்து வாருங்கள். வறுமையுடன் போராடிக் கொண்டிருப்பவர்கள் உங்களால் உதவி பெற்றால், மனம் நிறைந்து ஆசீர்வாதம் கொடுப்பார்கள். இவர்களுடைய ஆசிர்வாதம் உங்களுடைய கர்ம வினைகளை தீர்க்கும் அற்புத சக்தி படைத்தது.

- Advertisement -

இரண்டாவதாக முன்பின் தெரியாதவர்களின், அனாதையாக இறந்தவர்களின் பிணத்திற்கு ஈம கிரியை செய்யுங்கள். அவரின் இறுதி சடங்குகளுக்கு உதவி செய்தால், நிச்சயம் அது பெரும் பாவத்திற்கான பெரும் புண்ணியத்தை சேர்க்கும் என்பது ஐதீகம். பித்ரு தோஷம் பொல்லாத தோஷம் ஆகும். இந்த தோஷத்தை நிவர்த்தி செய்யக் கூடியது இந்த பரிகாரமாகும். நம்முடைய முன்னோர்களுக்கு செய்யும் காரியங்கள், நம்முடைய கடமையாகும் ஆனால் அனாதை பிணத்திற்கு செய்யக்கூடிய சடங்கு உதவிகள் அப்படி அல்ல! அது மகத்துவமான செயலாகும். அதற்கு தனி ஒரு மனம் வேண்டும். இந்த மனம் உங்களுக்கு இருந்தால், உங்களுடைய வாழ்க்கையும் மாறும் வாய்ப்பு கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே:
20.7.2025 ஆடி கிருத்திகை வழிபாடு

கேட்பாரற்று பூட்டி வைத்திருக்க கூடிய பழம்பெரும் கோவில்களை தேடி சென்று அதனை சுத்தம் செய்து மீண்டும் வழிபட முயற்சி செய்து வந்தால் அதைவிட சிறந்த புண்ணியம் எதுவுமே இருக்க முடியாது. கோவிலை கட்டிவிட்டு அதை பூட்டி வைத்திருந்தால், அங்கு துஷ்ட சக்திகளின் ஆதிக்கம் அதிகரித்து விடும். இதனால் அந்த ஊரில் இருப்பவர்களுக்கு பெரும் துன்பம் உண்டாகும். இப்படிப்பட்ட கோவிலை நீங்கள் புனரமைத்து, சரி செய்து மீண்டும் வழிபட்டால் பெரும் புண்ணியம் உண்டாகும். இதனாலும் உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் செய்த பெரும் பாவத்திலிருந்து விடுதலை கிடைத்து, கர்மவினை நீங்கி, சுபிட்சம் பெறுவீர்கள். இவையெல்லாம் பல நூறு அசுவமேத யாகம் செய்த பலனை செய்த புண்ணியத்தை கொடுக்கக் கூடியது.

சற்று முன்