- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஆடி கன்னி தெய்வ வழிபாடு

ஆடி கன்னி தெய்வ வழிபாடு

- Advertisement -

ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கு உகந்த மாதமாகப் போற்றப்படுகிறது. குறிப்பாக ஆடி ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மன் வழிபாடு மிகவும் சிறப்பாக இருக்கும். ஆடி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை, கன்னி தெய்வ வழிபாட்டிற்கு மிகவும் விசேஷமானது. இந்தக் கன்னி தெய்வ வழிபாடு குடும்பத்திற்கு சுபிட்சத்தையும், எல்லாவிதமான நன்மைகளையும் தரும் என்பது ஐதீகம். கன்னி தெய்வ வழிபாடு செய்யும் முறை என்ன? என்பதைத்தான் இந்த ஆன்மிகம் சார்ந்த பதிவில் பகிர்ந்து கொள்கிறோம்.

கன்னி தெய்வம் என்றால் என்ன?
கன்னி தெய்வம் என்பது நம் குடும்பத்தில் திருமணம் ஆகாமல் சிறு வயதிலேயே அல்லது இளம் வயதிலேயே இறந்து போன பெண்களைக் குறிக்கும். இவர்கள் தெய்வமாகி, நம் குடும்பத்தை பாதுகாத்து வருகிறார்கள் என்பது நம்பிக்கை. இந்த கன்னி தெய்வங்களை வழிபட்டால் குடும்பத்தில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சனைகளும் தீரும், சுப காரியங்கள் நடக்கும் என்று நம்பப்படுகிறது.

- Advertisement -

ஆடி ஞாயிறு கன்னி தெய்வ வழிபாடு முறை:
கன்னி தெய்வ வழிபாட்டிற்கு முன் வீட்டை சுத்தப்படுத்தி, கோலமிட வேண்டும். பூஜை விளக்கு ஏற்றி வழிபாட்டைத் தொடங்க வேண்டும். கன்னி தெய்வத்திற்கு பிடித்தமான உணவுப் பொருட்கள் மற்றும் அவர்கள் விரும்பி பயன்படுத்திய பொருட்களை வாங்கிப் படைக்க வேண்டும். இதில் இனிப்பு பண்டங்களான சர்க்கரை பொங்கல், அதிரசம் அல்லது பணியாரம், வடை, பாயாசம், தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் ஆகியவை அடங்கும். இறந்த கன்னியின் வயதுக்கு ஏற்ற புதிய உடைகளை (பாவாடை, சட்டை, தாவணி, சேலை) வாங்கிப் படைக்கலாம்.

இவற்றுடன் மஞ்சள் கிழங்கு, கண்ணாடி, சீப்பு, வளையல், பொட்டு, வாசனை மிகுந்த பூக்கள் ஆகியவற்றையும் வைக்க வேண்டும். கன்னி தெய்வத்தின் படத்தை வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களை மனதில் நினைத்து வழிபடலாம். சாம்பிராணி தூபம் வீட்டில் முழுவதும் பரப்பப்பட வேண்டும். இது கன்னி தெய்வத்தை பூஜையில் அழைக்க உதவும். உங்கள் கோரிக்கைகளை மனதார கன்னி தெய்வத்திடம் தெரிவிக்க வேண்டும். கூட்டாக குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து வழிபட்டால் பலன் இரட்டிப்பாகும்.

- Advertisement -

பூஜை முடிந்த பின், பூஜையில் படைத்த உணவை அனைவரும் பக்தியுடன் உண்ண வேண்டும். படைத்த புதிய உடை மற்றும் மங்கலப் பொருட்களை ஒரு பனையோலைப் பெட்டியிலோ அல்லது மூங்கில் கூடையிலோ வைத்து, வீட்டின் தென்மேற்கு பகுதியான கன்னி மூலையில் உயரமான இடத்தில் வைக்க வேண்டும். இந்தப் பெட்டியை அடுத்த ஆண்டு கன்னி வழிபாடு செய்யும் வரை எடுக்காமல் வைத்திருக்க வேண்டும். கன்னி பெட்டி உள்ள அறைக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சாம்பிராணி தூபம் இடலாம். அடுத்த வருடம் கன்னி வழிபாடு செய்யும் போது, பெட்டியை திறந்து, அதிலிருந்த துணியை குடும்பத்தில் நிறைவேறாத பிரார்த்தனை உள்ள பெண்களுக்கு கொடுக்கலாம். அதிலிருந்து பூ வாசம் வீசினால் கன்னி தெய்வம் துடிப்பாக இருப்பதாக நம்பப்படுகிறது.

இதையும் படிக்கலாமே:
நெய் விளக்கு பிரார்த்தனை

வீட்டில் சுமங்கலிகள் கன்னி தெய்வங்களை வழிபட்டால், மாங்கல்ய பலம் கூடும். திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். குடும்பம் வாழையடி வாழையாக தழைத்தோங்கும். குடும்பத்தில் இருக்கும் தீராத கஷ்டங்கள் தீரும். சகல தோஷங்களும் விலகும். நோய்கள் தீர்ந்து ஆரோக்கியம் பெருகும். செய்வினை கோளாறுகள் நீங்கும், பேய், பிசாசு அண்டாது. குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். இந்த வழிபாடு குடும்ப ஒற்றுமைக்கும் மிகவும் முக்கியமானது. குடும்பத்தினர் அனைவரும் ஒன்று கூடி வணங்கினால் கன்னி தெய்வம் மனம் குளிர்ந்து நல்லாசி வழங்குவார்.

சற்று முன்