- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval7 நாளில் பிரச்சனைக்கு தீர்வு காண விநாயகர் மந்திரம்

7 நாளில் பிரச்சனைக்கு தீர்வு காண விநாயகர் மந்திரம்

- Advertisement -

பொதுவாகவே நம்முடைய ஆன்மீகத்தில் ஒரு வழிகாட்டுதல் உண்டு. இறைவனின் முகத்தை பார்த்து வழிபாடு செய்வதை விட, அவனுடைய பாத கமலங்களை பார்த்து வழிபாடு செய்தால், நம்முடைய வாழ்வு சிறப்படையும். இறைவனின் பாதத்தை இறுக்கப்பற்றிக் கொண்டால் வாழ்வில் துன்பம் இல்லை. அவனுடைய பாதங்களை எடுத்து நம்முடைய உச்சந் தலையின் மேல் வைத்துக் கொண்டால் நம்முடைய கெட்ட தலை எழுத்தும் கூட, நல்ல தலை யெழுத்தாக மாறிவிடும்.

இத்தனை சிறப்பு மிக்க வழிபாடு இறைவனின் திருப்பாத வழிபாடு. அந்த விநாயகப் பெருமானின் பாதத்தை பார்த்து சொல்ல வேண்டிய ஒரு அதி அற்புதமான மந்திரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். விநாயகர் வழிபாடு ரொம்ப ரொம்ப எளிமையான வழிபாடு. நம்பிக்கையோடு விநாயகரை வழிபாடு செய்து என்ன வரம் கேட்டாலும் அது கூடிய விரைவில் நமக்கு கிடைக்கும். உங்களுடைய வாழ்க்கையில் இப்போது இருக்கக்கூடிய சிக்கல் என்ன. அந்த சிக்கலுக்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்று, பின் சொல்லும் முறையில் விநாயகரை பிரார்த்தனை செய்யுங்கள்.

- Advertisement -

விநாயகர் வழிபாடு

தொடர்ந்து 7 நாள் வீட்டு பக்கத்தில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு செல்ல வேண்டும். அந்த விநாயகருக்கு கொஞ்சம் வெட்டிவேர் வாங்கிக் கொண்டுபோய் கொடுங்க. விநாயகர் வெட்டிவேர் மாலை சாத்துவது சிறப்பு. வெட்டிவேரை மாலையாக வாங்க முடியாது என்பவர்கள், கொஞ்சமாக நாட்டு மருந்து கடைகளில் வெட்டிவேர் கிடைக்கும். அதை கூட வாங்கி கொண்டு போய் அர்ச்சகர் கையில் கொடுத்தால், அதை அவர் விநாயகர் பாதத்தில் வைத்து விடுவார். அவ்வளவுதான் கோவிலிலேயே அந்த விநாயகரது பாதத்தை பார்த்து பின் சொல்லக்கூடிய இந்த மந்திரத்தை 11 முறை சொல்லுங்கள்.

விநாயகர் மந்திரம்

ஓம் விக்ண விநாயகா பாத நமஸ்தே!

- Advertisement -

இதுதான் அந்த விநாயகரின் மந்திரம். விநாயகரது பாதத்தை வணங்குகிறேன் என்பதுதான் இந்த மந்திரத்திற்கு உண்டான அர்த்தம். இந்த மந்திரத்தை சொல்லி விநாயகர்கோவிலில் அமர்ந்து விநாயகர் பாதத்தை பார்த்து உங்களுடைய பிரார்த்தனையை வைத்தால் 7 நாட்களில் உங்களுடைய பிரச்சனைக்கு ஒரு தீர்வை அந்த விநாயகப் பெருமான் காட்டிக் கொடுப்பான். அதில் எந்த சந்தேகமும் கிடையாது.

அதிலும் குறிப்பாக சதுர்த்தி திதி, சங்கடஹர சதுர்த்தி திதி வரும்போது இந்த மந்திரத்தை சொல்லி விநாயகரை வழிபாடு செய்வது அதி சிறப்பு வாய்ந்த பலனை கொடுக்கும். கோவிலுக்கு செல்ல வாய்ப்பு இல்லாதவர்கள் வீட்டிலேயே பூஜை அறையில் விநாயகர் திரு உருவப்படம் முன்பு கொஞ்சம் வெட்டிவேர் வாங்கி வைத்து, விநாயகர் பாத கமலங்களை நமஸ்காரம் செய்து கொண்டு, இந்த மந்திரத்தை சொன்னாலும் நல்ல பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இதையும் படிக்கலாமே: செல்வ செழிப்பை அள்ளித் தரும் ஆடி திங்கள்

எதுவாக இருந்தாலும் சரி வழிபாட்டு முறைகளிலும் நாம் இறைவனுக்கு வாங்கி கொடுக்க கூடிய பொருட்களிலும் நமக்கு ஒரு மனதிருப்தி கிடைக்கும். ஆனால் நம்பிக்கையில் மட்டும் தான் இறைவனின் ஆசிர்வாதத்தை நம்மால் பெற முடியும் என்ற தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்