- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஆடி அமாவாசை வழிபாடு செய்தவர்கள் செய்ய வேண்டியது

ஆடி அமாவாசை வழிபாடு செய்தவர்கள் செய்ய வேண்டியது

- Advertisement -

ஆடி அமாவாசையை பற்றி பலரும் அறிந்திருப்போம். பலரும் அன்றைய தினத்தில் முன்னோர்களை நினைத்து திதி கொடுப்பது, தர்ப்பணம் கொடுப்பது போன்றவற்றை மேற்கொண்டிருப்போம். இன்னும் சிலரோ வீட்டில் முன்னோர்களுக்காக படையல் இட்டு வழிபாடு செய்து காகத்திற்கு உணவு வைத்து விரதம் இருந்து இருப்போம். இப்படி முன்னோர்களுக்காக நாம் செய்யக்கூடிய வழிபாட்டை ஆடி அமாவாசை தினத்தில் செய்தவர்கள் கண்டிப்பான முறையில் இந்த ஒரு வழிமுறையை பின்பற்ற வேண்டும். அப்படி பின்பற்றுவதன் மூலம் அனைத்து தெய்வங்களின் அருளையும் பெற முடியும். அந்த வழிமுறை என்ன என்பதை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஆடி அமாவாசை வழிபாடு

நமக்கு முன்பாக நம்முடைய வம்சாவளியில் பிறந்து வாழ்ந்து இறந்த முன்னோர்களை நினைத்து தான் அமாவாசை அன்று வழிபாடு செய்கிறோம். அப்படிப்பட்ட முன்னோர்களை வழிபாடு செய்வது என்பது ஒரு சிறப்பு வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. இருப்பினும் இந்த வழிபாடு தெய்வ வழிபாட்டிற்கு ஈடு இணையாக இருக்காது. அதே சமயம் முன்னோர்களின் அருளை பெறுவதற்காக செய்யக்கூடிய இந்த வழிப்பாடானது நாம் வழிபடக்கூடிய தெய்வங்களின் அருளை பெறுவதற்கு உறுதுணையாக இருக்கும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

ஆடி அமாவாசை நாளன்று திதி கொடுத்தவராக இருந்தாலும் சரி தர்ப்பணம் கொடுத்தவராக இருந்தாலும் சரி முன்னோர்களுக்காக படையல் இட்டு வழிபாடு செய்தவர்களாக இருந்தாலும் சரி விரதம் இருந்து வழிபாடு செய்தவர்களாக இருந்தாலும் சரி அவர்கள் கண்டிப்பான முறையில் மறுநாள் தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவதற்கு முன்பாக ஒரு சில காரியங்களை கண்டிப்பான முறையில் செய்ய வேண்டும். அப்படி செய்தால்தான் தெய்வங்களின் அருளை பரிபூரணமாக பெற முடியும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

பொதுவாகவே அமாவாசை நாள் அன்று வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது என்று கூறுவார்கள். கோலம் போடுவது என்பது தெய்வம் வீட்டிற்குள் வருவதற்கு சமமாக கருதப்படுகிறது. கோலம் போடாமல் இருக்கும் பொழுது நம்முடைய இறந்த முன்னோர்கள் நம் வீட்டிற்குள் வருவார்கள் என்பதால் தான் அமாவாசை தினத்தில் கோலம் போடக்கூடாது என்று கூறுவார்கள். அப்படி வந்த முன்னோர்கள் நம்முடைய வழிபாட்டு முறையை ஏற்றுக்கொண்டு திரும்பிய பிறகு வீட்டை நாம் சுத்தம் செய்ய வேண்டும். இதற்காக எப்பொழுதும் வீடு துடைப்பது போல் துடைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

- Advertisement -

நம்முடைய வீட்டு பூஜை அறையை மட்டும் நாம் சுத்தம் செய்தால் போதும். தண்ணீர் வைத்துக்கூட துடைக்க வேண்டாம். சாதாரண துணியை வைத்து பூஜையில் இருக்கக்கூடிய சுவாமி படங்களை துடைத்துவிட்டு சுவாமி படங்களுக்கு போட்ட மலர்களை எடுத்துவிட்டு புதிதாக மலர்களையும் புதிதாக சந்தனம் குங்குமத்தையும் வைத்த பிறகு தீபம் ஏற்றி வழிபாடு செய்தோம் என்றால் கண்டிப்பான முறையில் தெய்வ அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும்.

இதையும் படிக்கலாமே: பண வசியத்தை அதிகரிக்கும் பரிகாரம்

முன்னோர்களின் அருளை பெறுவதற்காக மேற்கொண்ட வழிபாட்டோடு சேர்த்து இந்த வழிமுறையையும் நாம் பின்பற்றிய பிறகு தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டோம் என்றால் அந்த தெய்வத்தின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்