- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதிருஷ்டி கழிய தேங்காய் பரிகாரம்

திருஷ்டி கழிய தேங்காய் பரிகாரம்

- Advertisement -

நம் வீட்டிற்கும் சரி, வீட்டில் இருப்பவர்களுக்கும் சரி, கண் திருஷ்டி என்பது இருக்கக்கூடாது. கண் திருஷ்டி தான் வாழ்வில் தீர்க்க முடியாத பிரச்சினைகளை கொண்டு வந்து சேர்க்கும். ஆக கண் திருஷ்டியை அவ்வளவு சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். உடல் ஆரோக்கியம் பெற வேண்டும், நோய்நொடி பிரச்சனைகள் தீர வேண்டும், வீட்டில் செல்வ கடாட்சம் உயர வேண்டும், வீட்டில் சுபிட்சம் உண்டாக வேண்டும் என்றால், வாரத்தில் ஒரு நாள் வீட்டிற்கும், வீட்டில் இருப்பவர்களுக்கு திருஷ்டி சுற்றி போட வேண்டும்.

அப்படி முடியாது என்பவர்கள் மாதத்தில் ஒரு நாளாவது திருஷ்டி கழிக்கும் பழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். அந்த வகையில் மாதம் தோறும் வரக்கூடிய அமாவாசை திதியன்று திருஷ்டி சுற்றி போடலாம். அப்படி இல்லை என்றால் உங்களுக்கு விடுமுறை நாள் இருக்கும் அல்லவா, ஞாயிற்றுக்கிழமை இரவு கூட திருஷ்டி சுற்றி போடக்கூடிய பரிகாரத்தை உங்களுக்கு நீங்களே செய்து கொள்ளலாம்.

- Advertisement -

அந்த வகையில் இன்று ஒரு சக்தி வாய்ந்த திருஷ்டி கழிக்கும் பரிகாரத்தை தான் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஞாயிற்றுக்கிழமை இரவு ஊர் அடங்கிய பிறகு, எல்லோரும் தூங்கிய பிறகு கூட இந்த பரிகாரத்தை நீங்கள் செய்து கொள்ளலாம்.

திருஷ்டி கழிக்க தேங்காய் பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு நமக்குத் தேவை ஒரு தேங்காய். சின்னதாக ஒரு தேங்காய் எடுத்து அந்த தேங்காய் கண் பகுதியில் ஒரு ஓட்டை போட்டுக் கொள்ளுங்கள். மூன்று கண் பகுதிகள் இருக்கும். ஒரு கண் பகுதியில் ஓட்டை போட்டு, அதில் இருக்கும் தண்ணீரை வெளியே எடுத்துவிட்டு, குங்குமத்தை கொஞ்சம் தண்ணீரில் கரைத்து அந்த தேங்காய்க்குள் ஊற்றி, மெழுகு போட்டு அந்த தேங்காய் கண் ஓட்டையை மூடி விட வேண்டும். இந்த தேங்காயை உங்கள் வீட்டை சுற்றி உடைக்க வேண்டும். சிதறு தேங்காய் சுற்றுவோம் அல்லவா.

- Advertisement -

அதேபோலத்தான் நிலை வாசலுக்கு வெளிப்பக்கத்தில் போய் நின்று கொண்டு, உங்கள் நிலை வாசலை 3 முறை, இந்த தேங்காயை கொண்டு சுற்றி, வாராஹி அம்மனையை மனதார நினைத்து வீட்டிற்குள் துர்சக்திகள் நுழையக்கூடாது, கண் திருஷ்டி நுழையக்கூடாது, வீட்டிற்குள் சுபிட்சம் நிலவ வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, இந்த தேங்காயை கொண்டு போய் வீட்டிற்கு வெளிப்பக்கத்தில் முடிந்தால், முச்சந்தியில் உடைத்து விட்டு வரலாம்.

இதையும் படிக்கலாமே: புண்ணியம் சேர்க்கும் ஆடி ஞாயிற்றுக்கிழமை வழிபாடு

தேங்காய் உள்ளே இருக்கும் சிவப்பு நிற குங்குமம் வெளியில் சிதறினால், பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் சங்கடமாக இருக்கும். ஆள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடம் என்றால், ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு இடத்தில் கொண்டு போய் இந்த தேங்காயை உடைத்து விட்டு வந்து விடுங்கள். இவ்வளவுதான் பரிகாரம். இந்த பரிகாரத்தை மாதத்தில் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை செய்தாலே போதும் உங்கள் வீட்டில் கண் திருஷ்டியால் பிரச்சனை வராது. நோய்நொடி பிரச்சனைகள் இருக்காது. குடும்பம் சுபிட்சம் பெரும் என்ற தகவலுடன் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்