ஆடி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை பஞ்சமியை தான் கருட பஞ்சமி என்று நாம் கூறுகிறோம். கருட பஞ்சமி நாளில் கருட பகவானை நாம் வழிபாடு செய்வதன் மூலம் நம் வாழ்வில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளும் கஷ்டங்களும் தீரும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட கருட பஞ்சமி என்பது இந்த வருடம் ஆடி மாதத்தின் செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வருகிறது. பொதுவாகவே கடன் பிரச்சினை தீர்வதற்கு செவ்வாய் பகவானை வழிபாடு செய்ய வேண்டும் என்றும் செவ்வாய் பகவானுக்குரிய கிழமையான செவ்வாய்க்கிழமையில் செவ்வாய் பகவானின் அதிதேவதியான முருகப்பெருமானை வழிபாடு செய்பவர்களுக்கு கடன் பிரச்சினை தீர்வதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும் என்றும் கூறி கூறப்படுகிறது.
அதனால் தான் பலரும் செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஹோரையில் முருகப்பெருமானை வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்திருப்பார்கள். அப்படிப்பட்ட கடன் தீர்க்கும் செவ்வாய்க்கிழமை கருட பஞ்சமியும் சேர்ந்து வருவதால் அன்றைய தினத்தில் கருட பகவானை நாம் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய கடன் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் தீரும் என்று கூறப்படுகிறது. அப்படி கடன் பிரச்சினையை தீர்ப்பதற்குரிய வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கடன் தீர்க்கும் கருட பஞ்சமி வழிபாடு
இந்த வழிபாட்டை ஜூலை மாதம் 29ஆம் தேதி அதிகாலையில் இருந்து இரவுக்குள் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். ராகு காலம், எமகண்ட நேரத்தை மட்டும் தவிர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. இந்த வழிபாட்டை செய்வதற்கு முன்பாக ஒரு சிறிய பரிகாரத்தை நாம் செய்ய வேண்டும். இந்த எளிமையான வழிபாட்டோடு ஒரு சிறிய பரிகாரத்தையும் நாம் செய்யும் பொழுது விரைவிலேயே கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும். வீட்டில் கருடரின் படம் இருக்கும் பட்சத்தில் அந்த படத்திற்கு முன்பாகவோ அல்லது பெருமாளின் படத்திற்கு முன்பாகவோ அல்லது செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப்பெருமானுக்கு முன்பாகவோ அல்லது பஞ்சமி திதி என்பதால் வாராகி அம்மனுக்கு முன்பாகவோ இந்த ஒரு எளிமையான பரிகாரத்தை நாம் செய்ய வேண்டும்.
ஒரு பித்தளை தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த பித்தளை தட்டில் ஒரு கைப்பிடி அளவு பெருமாளுக்கும் கருடாழ்வாருக்கும் உகந்த இலையான துளசி இலையை பரப்பிக் கொள்ளுங்கள். அடுத்ததாக ஒரு மஞ்சள் நிற துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து மூட்டையாக கட்டி அந்த மூட்டைக்கு சந்தனம் குங்குமம் வைத்து அந்த துளசி இலையின் மேல் வைத்துக்கொள்ள வேண்டும். வீட்டில் எப்பொழுதும் தீபம் ஏற்றுவது போல் தீபம் ஏற்றி வைத்துக் கொள்ளலாம். இப்பொழுது கையில் வாசனை மிகுந்த மலர்களை வைத்துக் கொண்டு செவ்வாய்க்கிழமைக்குரிய முருகப்பெருமானையும் பஞ்சமி திதிக்குரிய வாராகி அம்மனையும் வழிபாடு செய்து கொள்ளுங்கள். பிறகு பெருமாளையும், கருடாழ்வாரையும் மனதார நினைத்துக் கொண்டு கருடாழ்வாரின் பின்வரும் கடன் தீர்க்கும் மந்திரத்தை 11 முறை கூற வேண்டும்.
பிறகு பெருமாளிடம் உங்களுடைய கடன் தொடர்பான பிரச்சனைகள் தீர வேண்டும் என்று முழுமனதோடு வேண்டிக்கொண்டு கையில் இருக்கக்கூடிய வாசனை மலர்களை அந்த ஒரு ரூபாய் நாணயத்திற்கு சமர்ப்பணம் செய்து விட வேண்டும். இந்த துளசி இலையும் ஒரு ரூபாய் நாணயமும் அன்று முழுவதும் பூஜை அறையில் இருக்கட்டும். மறுநாள் நாணயத்தை மட்டும் எடுத்து பூஜை அறையில் வைத்துவிட்டு துளசி இலைகளை எடுத்து நாம் எங்கெல்லாம் பணம் வைத்திருக்கிறோமோ அங்கெல்லாம் வைத்துக்கொள்ள வேண்டும். அடுத்த மாதம் வரக்கூடிய பஞ்சமி திதி அன்று இந்த ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து வாராகி அம்மனின் கோவிலிலோ அல்லது பெருமானின் கோவிலிலோ சமர்ப்பணம் செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் விரைவிலேயே கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும்.
கடன் தீர்க்கும் கருட மந்திரம்
“ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஐம் கருடாய நமஹ”
இதையும் படிக்கலாமே: ஆடி செவ்வாய் மற்றும் கருட பஞ்சமி வழிபாடு
கடன் தொடர்பான பிரச்சனைகள் தீர்வதற்கு பலவிதமான வழிபாடுகளையும் பரிகாரங்களையும் செய்பவர்கள் மறவாமல் கருட பஞ்சமி நாளன்று கருட பகவானின் இந்த மந்திரத்தை முழுமனதோடு கூறி பாருங்கள். விரைவிலேயே கடன் பிரச்சினை தீரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.