- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஆடி செவ்வாய் மற்றும் கருட பஞ்சமி வழிபாடு

ஆடி செவ்வாய் மற்றும் கருட பஞ்சமி வழிபாடு

- Advertisement -

ஆடி மாதத்தில் வரக்கூடிய செவ்வாய்க்கிழமை என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதனால் தான் பலரும் ஆடி செவ்வாய் என்று சிறப்பாக கூறி வழிபாடுகள் செய்வார்கள். அப்படிப்பட்ட ஆடி செவ்வாயுடன் சேர்ந்து வரக்கூடிய பஞ்சமி திதி சிறப்பு வாய்ந்தது. பொதுவாகவே ஆடி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை பஞ்சமி நாளை தான் நாம் கருட பஞ்சமி என்று அழைக்கிறோம். அந்த நாளில் நாம் கருட பகவானை வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வாழ்வில் அளவில்லாத நன்மைகள் உண்டாகும். அப்படிப்பட்ட கருட பஞ்சமியும் ஆடி செவ்வாயும் ஒரு சேர வருவதால் இன்றைய நாளில் நாம் இரண்டு விதமான வழிபாட்டு முறைகளை ஒரே சமயத்தில் செய்ய அனைத்து நன்மைகளும் நம்மை வந்து சேரும். அந்த வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கருட பஞ்சமி வழிபாடு

கருட பஞ்சமி நாளன்று நாம் கருட பகவானை வழிபாடு செய்வதன் மூலம் நம் குடும்பத்தில் இருக்கக்கூடிய திருஷ்டி தோஷங்கள் நீங்கும். நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டு இருப்பவர்களுடைய நோயின் தாக்கம் படிப்படியாக குறையும். புதிதாக எந்தவித நோய்களும் தாக்காமல் இருக்கும். இதோடு ஒரு சிலருக்கு திடீர் விபத்து ஏற்பட்டு அதனால் பாதிப்புகள் உண்டாகும் என்று ஜாதகரீதியாக கூறப்பட்டிருக்கும், அப்படிப்பட்டவர்கள் கருட பஞ்சமி வழிபாட்டை செய்யும் பொழுது அந்த விபத்து ஏற்படாமல் தடுக்கப்படும். மனதில் ஒருவித தெளிவு உண்டாகும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் எதுவும் இருக்காது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். இவ்வளவு பலன்களை தரக்கூடிய கருட பஞ்சமி நாளில் எளிமையான முறையில் வழிபாடு செய்வதைப் பற்றி பார்ப்போம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை ஜூலை மாதம் 29ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்யலாம் அல்லது காலை 745 இல் இருந்து 8:45க்குள் செய்யலாம் அல்லது காலை 10:45 இல் இருந்து 11 45 க்குள் செய்யலாம் அல்லது மாலை 5:30 மணியிலிருந்து 8:30 மணிக்குள் செய்யலாம். வீட்டில் கருடாழ்வாரின் படம் இருக்கும் பட்சத்தில் அந்த படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். கருடாழ்வாரின் படம் இல்லாதவர்கள் பெருமாளின் படத்தை வைத்து கூட இந்த வழிபாட்டை செய்யலாம். பெருமாளின் படமும் இல்லை என்பவர்கள் அம்மனின் படத்திற்கு முன்பாக இந்த வழிபாட்டை செய்யலாம். பெருமாள் மற்றும் கருடாழ்வாரின் படம் இருக்கும் பட்சத்தில் துளசி மாலையை சாற்ற வேண்டும்.

பிறகு மூன்று நெய் தீபங்களை வடக்கு அல்லது கிழக்கு பார்த்தவாறு ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். நெய்வேத்தியமாக எலுமிச்சை சாதம் காய்ச்சிய பசும்பால் போன்றவை வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு கையில் வாசனை மிகுந்த மலர்களை எடுத்துக்கொண்டு கருடாழ்வாரின் மூல மந்திரத்தை 11 முறை கூற வேண்டும். அவ்வாறு கூறி முடித்த பிறகு அம்பிகையை மனதார நினைத்துக் கொண்டு அம்பிகையின் பின்வரும் மந்திரத்தை 11 முறை கூற வேண்டும். இவ்வாறு கூறி முடித்த பிறகு மலர்களை இறைவனுக்கு சமர்ப்பணம் செய்துவிட்டு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -

கருடாழ்வார் மந்திரம்

“ஓம் தத்புருஷாய வித்மஹே,
சுவர்ண பக்ஷாய தீமஹி,
தன்னோ கருட ப்ரசோதயாத்”

அம்பிகை மந்திரம்

“ஓம் நமோ கௌரி மாதா நமஹ”

இதையும் படிக்கலாமே: விளக்குத்திரியின் நிறங்களும் பலன்களும்

எளிமையான முறையில் ஆடி செவ்வாய்க்கிழமை அம்மனை வழிபாடு செய்வதோடு கருடாழ்வாரையும் சேர்த்து வழிபாடு செய்வதன் மூலம் நம் வாழ்வில் அனைத்து விதமான பிரச்சினைக்கும் ஒரு தீர்வு கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்