- Advertisement -

ஆடி அம்மன் மாலை

- Advertisement -

ஆடி மாதம் அம்மன் வழிபாடு வெகு விமரிசையாக ஊரெங்கும் நடைபெற்ற வருகிறது. ஆடி மாதத்தில் ஞாயிறு மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ரொம்பவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. இந்த நாட்களில் நீங்கள் அம்மனுக்கு எந்த மாலை சாற்றி வழிபட்டால்? உங்களுடைய என்ன வேண்டுதல் நிறைவேறும்? என்னும் ஆன்மீகம் சார்ந்த ரகசியத்தை தான் இந்த பதிவில் பகிர்ந்து கொள்கிறோம்.

ஆடி மாதத்தில் அம்மனுக்கு பொதுவாக வேப்பிலை மாலை சாற்றி வழிபடுவது மிகுந்த விசேஷமாக இருந்து வருகிறது. வேப்பிலையில் மாலை போட்டு அம்மனை தரிசனம் செய்து வழிபட்டால், தீராத நோய்களும் குணமடையும் என்பது நம்பிக்கை. வீட்டில் எப்பேர்பட்ட தடைகள் இருந்தாலும், அவைகள் உடைபட்டு சுபகாரியங்கள் நடைபெற வேப்பிலைகளை அடர்த்தியாக கட்டி மாலை ஆக கோர்த்து அம்மனுக்கு சாற்றி வழிபட்டு வாருங்கள்.

- Advertisement -

அடுத்ததாக அம்மனுக்கு எலுமிச்சை மாலையை சாற்றி வழிபட்டால் நீண்ட கால வியாதிகள் குணமடையும். நீங்களே நீங்காது என்று நினைத்துக் கொண்டிருந்த நீண்ட கால பிரச்சனைகள், துன்பங்கள், நோய்கள் அனைத்தும் குணமடைவதற்கு கிருமி நாசினியாக செயல்படும் இந்த எலுமிச்சைகளை மாலையாக கோர்த்து அம்மனுக்கு சாற்றி தரிசனம் செய்து வழிபட்டு வாருங்கள்.

அம்மனுக்கு ரொம்பவும் இஷ்டமான ஒரு மலர்மாலை மல்லிகை பூ மாலை ஆகும். மல்லிகையில் இருந்து வீசக்கூடிய மணம் ஒரு வகையான பாசிட்டிவ் எனர்ஜியை கொடுக்கக்கூடியது. உங்கள் மனதில் எப்பேர்பட்ட நெகட்டிவ் எண்ணங்கள் இருந்தாலும், அவற்றை நீக்கி நல்ல நேர்மறையான சிந்தனைகளை கொடுக்கக்கூடிய இந்த மல்லிகை பூக்களை மாலையாக தொடுக்க வேண்டும். மாலையாக தொடுக்கும் பொழுது நூலை பயன்படுத்தாமல், வாழைத்தண்டு நாரை பயன்படுத்துங்கள். முந்தைய காலங்களில் எல்லாம் வாழைத்தண்டு நார் கொண்டு தான் பூக்களை தொடுப்பார்கள்.

- Advertisement -

வாழைமரம் ஆன்மீக ரீதியாக புனிதம் மிக்க மரமாக கருதப்படுகிறது. வாழை மரத்தில் இருக்கும் ஒவ்வொரு பகுதியும் ஆன்மீக பயன்பாட்டிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இதிலிருந்து பெறப்படும் தூய்மையான வாழை நாரிலிருந்து மல்லிகை பூக்களை மாலையாக தொடுத்து, அம்பாளுக்கு சாற்றி நீங்கள் வழிபட்டு வந்தால் இந்த ஆடி மாதத்தில் நீங்கள் எது ஆசைப்பட்டு கேட்டாலும், அது உடனடியாக நிறைவேறும். குறிப்பாக மல்லிகை மாலையை சாற்றி வழிபடும் பொழுது அம்மனின் மனம் குளிர்ந்து உங்கள் வயிறையும் குளிர செய்வாள். புத்திர பாக்கியம் வேண்டுபவர்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

இதையும் படிக்கலாமே:
திருமணத்தடைக்கு விநாயகர் வழிபாடு

செல்வ வளம் பெருகவும், தொழில் வளம் சிறப்பாக இருக்கவும் தாமரையை வாழைத்தண்டு திரி கொண்டு மாலையாக தொடுத்து அம்மனுக்கு சாற்றி மனதார வழிபட்டு வரலாம். பண பிரச்சனைகள், சொத்து பிரச்சினைகள் அனைத்தும் இந்த மாலையை போடுவதன் மூலம் தீரும். மஞ்சள் சாமந்திப் பூக்களும் அம்மனுக்கு மிகவும் பிடித்தமானவை. மஞ்சள் சாமந்தி மாலையை அம்மனுக்கு போட்டு வழிபட்டு வந்தால், மங்களகரமான நிகழ்வுகள் எல்லாம் நடைபெறும். திருமண தடை உள்ளவர்கள் இந்த மாலையை கோர்த்து வழிபடலாம். ரோஜாப்பூ என்றாலும் அம்மனுக்கு மிகுந்த விருப்பமுடைய மலராக இருக்கிறது. பன்னீர் ரோஜாக்கள், சிவப்பு நிற ரோஜாக்கள் கொண்டு மாலையாக அடர்த்தியாக கொடுத்து அம்பாளுக்கு சாற்றி தரிசனம் செய்த வழிபட்டு வந்தால், முடியாது என்று நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் முடியும். உங்களுடைய மனதில் இருக்கக்கூடிய வேண்டுதல்கள் அப்படியே பலிக்கும் என்பது நம்பிக்கை.

சற்று முன்