- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதிருமணத்தடைக்கு விநாயகர் வழிபாடு

திருமணத்தடைக்கு விநாயகர் வழிபாடு

- Advertisement -

ஆண்கள், பெண்கள் வித்தியாசம் இன்றி உங்களுக்கு திருமணத் தடைகள் விலகி, சுபயோக சுப தினங்கள் அமைய, விநாயகர் பெருமானின் அருள் மிகவும் அவசியம் என்பது நம் மரபில் ஆழமாகப் பதிந்த ஒரு நம்பிக்கை. தடைகளை நீக்கும் ஆதிபகவானாம் விநாயகப் பெருமானை வழிபட்டு, திருமணத் தடைகளை நீக்க ஒரு எளிய, ஆனால் சக்திவாய்ந்த வழிபாட்டு முறையை இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் தொடர்ந்து பார்ப்போம்.

இந்த வழிபாட்டிற்குத் தேவையான பொருட்கள்:
தேங்காய் – 1
தாம்பூலத் தட்டு – 1
பச்சரிசி – 2 கைப்பிடி
மஞ்சள் துணி – சிறியது
கோதுமை – சிறிதளவு
தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு

- Advertisement -

வழிபாட்டு முறை:
இந்த பரிகாரத்தை புதன்கிழமைகளில் செய்வது சிறப்பானதாக இருக்கும். விநாயகருக்கு புதன்கிழமை உகந்ததாக இருக்கிறது. திருமண தடைகளை அகற்றும் பொன் போன்ற இந்த புதன்கிழமையும் யாருக்கு திருமணம் ஆகவில்லையோ அவர்கள் அதிகாலையிலேயே பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து கொள்ளுங்கள். நீராடி சுத்தமான மஞ்சள் நிற அல்லது வெள்ளை நிற உடை உடுத்திக் கொள்ளுங்கள். உங்களுடைய பூஜை அறையில் விரதமிருந்து இந்த வழிபாட்டை செய்யுங்கள். திருமண தடைகள் திருமண தோஷங்களை நீக்கக்கூடிய அதி சக்தி வாய்ந்த இந்த பரிகாரம் செய்வதற்கு முன், விநாயகருக்கு நைவேத்தியம் படைக்க போதகங்கள் சர்க்கரை பொங்கல் சுண்டல் போன்றவற்றை தயார் செய்து கொள்ளுங்கள். வீட்டில் ஏதேனும் ஒன்றை படைத்தாலும் போதுமானது.

பூஜைக்கு முதலில், ஒரு மஞ்சள் தடவிய மனையை அலங்கரித்துக் கொள்ளுங்கள். இது விநாயகப் பெருமானின் ஆசனமாகக் கருதப்படுகிறது. மனையில் விநாயகரை அமர வைத்து பிரதிஷ்டை செய்யுங்கள். பின் ஒரு தாம்பூலத் தட்டில் பச்சரிசியைப் பரப்பிக் கொள்ளவும். ஒரு முழுத் தேங்காயை இரண்டாக உடைத்து, அத்தட்டின் மேல், பச்சரிசி பரப்பப்பட்ட பகுதியில் வைக்கவும். தேங்காய் முழுமையின் சின்னம், அதை உடைப்பது தடைகளை உடைப்பதைக் குறிக்கும். தேங்காய் என்னுள் தேவையான அளவிற்கு சுத்தமான தேங்காய் எண்ணெயை ஊற்ற வேண்டும். தேங்காய் எண்ணெய் தீபம் திருமண தடைகளை அகற்றக் கூடிய அற்புதமான எளிய பரிகாரமாகும். ஒரு சிறிய மஞ்சள் துணியில் சிறிதளவு கோதுமையைப் போட்டு, மஞ்சள் நூலால் முடிச்சாக கட்டவும். இந்தக் கோதுமை முடிச்சு, செல்வத்தையும் செழிப்பையும் ஈர்க்கும் சக்தி கொண்டது.

- Advertisement -

மஞ்சள் துணி இல்லை என்றால் சுத்தமான வெள்ளை துணியை மஞ்சள் தூள் மற்றும் நீர் சேர்த்து குழைத்து, அதில் தோய்த்து காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த கோதுமை முடிச்சை ஒரு திரியாகப் பயன்படுத்தி, தேங்காய் எண்ணெயில் வைத்து தீபம் ஏற்றவும். தூபம் காண்பித்து விநாயகருடைய சக்தி வாய்ந்த மூல மந்திரம் மந்திரங்கள் மற்ற ஸ்தோத்திரங்கள் பாடல்கள் புராண கதைகள் நீங்கள் படிக்கலாம். அந்த நாளில் அந்தி சாயும் வரை விரதம் இருக்க வேண்டும். விநாயகருடைய துதி பாடல்களை மனதில் நிறுத்தி பாட வேண்டும். விளக்கேற்றி வைத்த பின்பு ஸ்தோத்திரங்களை சொல்லி கற்பூர ஆரத்தி காண்பிக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
செல்வத்தடை நீக்கும் கருட வழிபாடு

பின்னர் இதேபோல மாலை வேளையிலும் இதே தேங்காய் தீபம் ஏற்றி வைத்து விநாயகரை வழிபட்ட பின்பு விரதத்தை முடித்துக் கொள்ளலாம். விரதம் முடிந்த உடன் நைவேத்தியம் படைத்த பொருட்களை திருமணத்தடை இருப்பவர்கள் எடுத்துக் கொள்ளுங்கள். இருக்கும் மற்றவர்களுக்கும் கொடுங்கள். இந்தத் தீபம் விநாயகரின் அருளை வேண்டி, உங்கள் பிரார்த்தனைகளை மேலே கொண்டு செல்லும். இந்த வழிபாட்டைத் தொடர்ந்து செய்து வர, விநாயகப் பெருமானின் திருவருளால் திருமணத் தடைகள் நீங்கி, விரைவில் நல்ல வரன் அமைந்து, மங்களகரமான வாழ்க்கை அமையும் என்பது ஐதீகம். நம்பிக்கையோடும், பக்தியோடும் செய்யப்படும் ஒவ்வொரு வழிபாடும் நிச்சயம் பலன் தரும்.

சற்று முன்