- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஆடிப்பெருக்கு மைத்ரேய முகூர்த்த பரிகாரம்

ஆடிப்பெருக்கு மைத்ரேய முகூர்த்த பரிகாரம்

- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் பலவிதமான கடன்களை நாம் அனுபவித்து வருகிறோம். பிறவிக்கடன், நன்றி கடன் போன்ற கடன் வரிசையில் பணக்கடனும் நகைக்கடனும் சேரும். மற்ற கடன்களை விட இந்த கடன்களை அடைப்பது தான் மிகவும் சிரமமான ஒன்றாகவே பலரும் அனுபவித்து வருகிறார்கள். அப்படிப்பட்ட பணம், நகை தொடர்பான கடன்கள் முற்றிலும் தீர்வதற்கு உதவக்கூடிய நேரமாக தான் மைத்ரேய முகூர்த்த நேரம் திகழ்கிறது. இந்த மைத்ரேய முகூர்த்த நேரத்தில் நாம் செய்யக்கூடிய சில பரிகாரங்கள் விரைவிலேயே நம்முடைய பணம் தொடர்பான அனைத்து கடன் பிரச்சினைகளையும் தீர்க்கும் . அப்படிப்பட்ட ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

மைத்ரேய முகூர்த்த பரிகாரம்

கடன் தொடர்பான பிரச்சினைக்கு முக்கியமான காரணமாக இருக்கக்கூடியவர் செவ்வாய் பகவான். அதனால்தான் கடனை அடைக்க வேண்டும் என்பதற்காக பலரும் முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமையில் செவ்வாய் ஹோரையில் சிறப்பாக வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். அப்படி செய்யும்பொழுது செவ்வாய் பகவானின் அருள் பார்வை நம் மீது பட்டு நமக்கு இருக்கக்கூடிய கடன் பிரச்சினை தீரும் என்றும் புதிதாக எந்த கடன்களையும் வாங்காமல் இருப்போம் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட செவ்வாய் பகவானோடு தொடர்புடைய ஒரு முகூர்த்த நேரமாக தான் மைத்ரேய முகூர்த்த நேரம் திகழ்கிறது. இந்த நேரத்தை சரியாக பயன்படுத்துபவர்களுக்கு கடன் பிரச்சினை படிப்படியாக தீரும்.

- Advertisement -

ஒவ்வொரு மாதத்திலும் மைத்ரேய முகூர்த்தம் என்பது வரும். அப்படி வரக்கூடிய நாளில் எளிமையான பரிகாரங்களை செய்யும் பொழுது நம்முடைய கடன் பிரச்சனை தீர்வதற்குரிய வழி உண்டாகும். அந்த வகையில் இன்று ஆகஸ்ட் மாதம் மூன்றாம் தேதி ஆடிப்பெருக்குடன் மைத்ரேய முகூர்த்தம் சேர்ந்து வருகிறது. மைத்திரேய முகூர்த்த நேரமாக மதியம் 1:43 மணியிலிருந்து மாலை 4 மணி வரை இருக்கிறது என்பதால் இந்த நேரத்தை நாம் சரியாக பயன்படுத்தி நாம் கடன் வாங்கிய தொகையில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை திருப்பி செலுத்தினோம் என்றால் விரைவிலேயே கடன் பிரச்சினை தீரும். அப்படி திருப்பி செலுத்துவதற்குரிய அளவிற்கு கூட பணம் கையில் இல்லை என்பவர்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

இதற்கு நமக்கு உண்டியல் வேண்டும். எத்தனை நபர்களிடமிருந்து கடன் வாங்கி இருக்கிறோமோ அத்தனை உண்டியலை நாம் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். அத்தனை உண்டியல் வாங்க முடியாது என்பவர்கள் சில்வர் டப்பா, டிபன் பாக்ஸ் போன்றவற்றை பயன்படுத்தலாம். பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்வது நல்லது. மைத்ரேய முகூர்த்த நேரத்தில் இதில் ஒரு பத்து ரூபாயை போட வேண்டும். பத்து ரூபாயை போட்டுவிட்டு அதனுடன் ஆறு ஏலக்காய், ஆறு கிராம்பு, ஒரு துண்டு பச்சை கற்பூரத்தை போட வேண்டும். இவற்றை ஒவ்வொன்றாக நம் பணத்தில் போடும் பொழுது விரைவிலேயே இன்னாரிடமிருந்து வாங்கிய கடனை திருப்பி செலுத்த வேண்டும் என்று வேண்டிக் கொண்டே போட வேண்டும்.

- Advertisement -

இப்படி எத்தனை நபர்கள் இடம் இருந்து நாம் பணம் வாங்கி இருக்கிறோமோ அத்தனை நபர்களுக்கும் தனித்தனியாக ஒரு உண்டியலை வைத்து அதில் பத்து ரூபாயை போட்டு 6 ஏலக்காய், 6 கிராம்பு மற்றும் பச்சை கற்பூரத்தை போட வேண்டும். இப்படி போட்ட இந்த உண்டியலை பூஜை அறையில் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து வரக்கூடிய மைத்ரேய முகூர்த்த நேரத்தில் திரும்பவும் இதே போல் உண்டியலில் ஒரு பத்து ரூபாயை போட்டு ஒரு ஏலக்காய் ஒரு கிராம்பு ஒரு துண்டு பச்சை கற்பூரத்தை மட்டும் போட்டால் போதும். முதல் முறை போடும்போது தான் ஆறு என்ற எண்ணிக்கையில் போட வேண்டும் பிறகு ஒன்று மட்டும் போட்டால் போதும்.

இப்படி தொடர்ச்சியாக வரக்கூடிய ஆறு மைத்ரேய முகூர்த்த நாளில் பத்து ரூபாயை உண்டியலில் சேர்த்து அதனுடன் இந்த பண வசிய தாந்திரீக பொருட்களையும் சேர்ப்பதன் மூலம் விரைவிலேயே அந்த கடன் பிரச்சினையை தீர்ப்பதற்குரிய பண வரவு உண்டாகும். கடனை முழுமையாக அடைக்கும் பொழுது கடனை அடைப்பதற்காக கொடுக்கக்கூடிய அசல் பணத்துடன் இந்த பணத்தையும் சேர்த்து வைத்து தரலாம் அல்லது முருகனின் ஆலயத்தில் இருக்கக்கூடிய உண்டியலிலும் சேர்க்கலாம்.

இதையும் படிக்கலாமே: தங்கம் அதிகளவில் சேர ஆடிப்பெருக்கு பரிகாரம்

முழு நம்பிக்கையோடு மைத்ரேய முகூர்த்த நேரத்தில் இந்த பரிகாரத்தை செய்துவிட்டு கடன் பிரச்சனையை தீர்ப்பதற்குரிய முயற்சிகளை மேற்கொள்பவர்களுக்கு கண்டிப்பான முறையில் அவர்களின் கடன் பிரச்சினை தீரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்