- Advertisement -

கடன் தீர்க்கும் உப்பு

- Advertisement -

கடன் தீருவதற்கு பரிகாரம் செய்தால் மட்டும் போதாது, உழைப்பும் இருக்க வேண்டும் தான், இருப்பினும் அந்த உழைப்பிற்கு உரிய பணம் வந்தால் தானே நீங்கள் கடனை அடைப்பீர்கள்? உழைத்துக் கொண்டே இருந்தாலும், கடவுளின் அனுகிரகம் பெற்று சீக்கிரமே கடன் அடைய வேண்டும் என்கிற பிரார்த்தனையும் உங்களுடைய வேண்டுதலை விரைவில் நிறைவேற்றும். செவ்வாய்க்கிழமையில் கடன் தீர செய்ய வேண்டியது என்ன? என்னும் ஆன்மீகம் சார்ந்த தகவல்களை இந்த பதிவில் தொடர்ந்து பகிர்ந்து கொள்கிறோம்.

குளிகை நேரம் என்பது பொதுவாக கடன் தீருவதற்கு, கடனை அடைப்பதற்கு நல்ல நேரமாக சொல்லப்படுகிறது. குளிகை நேரத்தில் கடன் வாங்கக்கூடாது, ஆனால் கண்டிப்பாக திரும்ப செலுத்தலாம். குளிகையில் கடன் செலுத்த ஆரம்பித்து விட்டால், சீக்கிரமே கொஞ்சம் கொஞ்சமாக கடனை அடைந்து விடலாம் என்பது நம்பிக்கை. வீட்டில் மகாலட்சுமி படத்தை பூஜை அறையில் வைத்து செவ்வாய்க்கிழமையில் அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு பித்தளை அல்லது தாம்பூல தட்டு ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு மஞ்சள் குங்குமம் இட்டு அலங்காரம் செய்து கொள்ளுங்கள். ஒரு சிறிய மண்பானை, பித்தளை அல்லது செம்பு கலசம் ஒன்றை வையுங்கள். அதற்கு முழுவதுமாக உள்ளேயும், வெளியேயும் நன்கு மஞ்சள் தடவி காய வையுங்கள். பிறகு குங்குமம் இட்டு பூவை சுற்றி அலங்கரித்துக் கொள்ளுங்கள். இப்போது தாம்பூல தட்டில் அந்த கலசம் நிறைவதற்கு ஏற்ப கல் உப்பை எடுத்துக் கொட்டுங்கள். கல் உப்பை நன்கு வட்டமாக பரப்பி விடுங்கள்.

செவ்வாய்க்கிழமையில் 12 மணி முதல் ஒன்றரை மணி வரையிலான நேரம் குளிகையாக வருகிறது. இந்த நேரத்தில் இந்த பூஜையை துவங்க வேண்டும். பரப்பிய கல் உப்பின் மீது உங்களுக்கு எவ்வளவு கடன் இருக்கிறதோ, அந்த தொகையை ஒரு விரலி மஞ்சளை கொண்டு எழுத வேண்டும். விரலி மஞ்சளால் உங்களின் கடன் தொகையின் எண்ணிக்கையை அதாவது ஒரு லட்சம் என்றால் 100000 என்றும், பதினைந்து ஆயிரம் என்றால் 15000 என்று எண்ணிக்கையில் எழுதுங்கள். பின்னர் உப்பை எடுத்து கலசத்திற்குள் நிரப்புங்கள்.

- Advertisement -

அந்த விரலி மஞ்சளை உப்பின் மீது சொருகி வையுங்கள். இந்த கலசத்தை மகாலட்சுமியின் முன்பு வைத்து விளக்கேற்றி தூப, தீப, கற்பூர ஆரத்தி காண்பித்து “ஓம் ஸ்ரீம் ஓம்” என்னும் இந்த மகாலட்சுமியின் சக்தி வாய்ந்த பீஜ மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள். 11 நாள் அதை அப்படியே பூஜை அறையில் மகாலட்சுமியின் படத்திற்கு முன்பாக வைத்து விட வேண்டும். முடிந்தால் தினம் தோறும் விளக்கு ஏற்றி வைத்து, மகாலட்சுமியை வழிபட்டு சீக்கிரம் கடன் அடைய வேண்டும் என்று வழிபட்டு வாருங்கள். முடியாதவர்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் நீங்கள் எப்பொழுதும் போல பூஜை செய்யுங்கள்.

இதையும் படிக்கலாமே:
நிறைவேறாத வேண்டுதல் நிறைவேற கூற வேண்டிய பாடல்

அதன் பிறகு 11 வது நாள் வெள்ளிக்கிழமை அன்று அந்த கலசத்தில் இருக்கும் உப்பை மட்டும் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அதில் முழுவதுமாக கரையும் படி கலந்து விட வேண்டும். உப்பு முழுவதுமாக கரைந்து விட்டால் உங்களுடைய கடனும் சீக்கிரமாகவே முழுவதும் அடைந்து விடும் என்பது நம்பிக்கை. மஞ்சளை நீங்கள் பிறகு பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதுபோல 48 நாட்களுக்கு ஒரு முறை செவ்வாய் குளிகை நேரத்தில் 11 நாட்கள் தொடர்ந்து செய்து வர சீக்கிரமே எப்பேர்ப்பட்ட கடன் இருந்தாலும் அடையும்.

சற்று முன்