நாம் ஒவ்வொருவரும் தெய்வ வழிபாட்டில் ஈடுபடும்பொழுது ஏதாவது ஒரு வேண்டுதலை முன்வைத்துதான் ஈடுபடுவோம். அந்த வேண்டுதல் நிறைவேறிவிட்டால் மகிழ்ச்சி அடைவோம். நிறைவேறவில்லை என்னும் பட்சத்தில் ஒரு சில நேரங்களில் சலிப்பும், கோபமும், விரக்தியும் உண்டாகும். அந்த நிலையில் தெய்வத்தை வழிபடுவதை நிறுத்துபவர்கள் பலர் இருக்கிறார்கள். தெய்வமே இல்லை என்று நாத்திகவாதியாக கூறுபவர்களும் இருக்கிறார்கள். அனைத்தும் வீண் பொய் என்று புலம்பும் நபர்களும் இருக்கிறார்கள். இப்படி எதுவாக இருந்தாலும் எந்த ஒரு வேண்டுதல் நிறைவேறாத பட்சத்தில் பெருமாளை வழிபாடு செய்யும் முறையைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
வேண்டுதல் நிறைவேற பாடல் வழிபாடு
எந்த ஒரு தெய்வத்தையுமே முழுமனதோடு பரிபூரணமாக சரணாகதி அடைந்து நாம் என்ன வழிபாடு செய்தாலும் அந்த தெய்வத்தின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும். நம்மை அறியாமலேயே அந்த தெய்வத்தின் அருளால் நமக்கு பலவிதமான நன்மைகள் நடந்திருந்தாலும் நாம் வேண்டிய வேண்டுதல் நிறைவேறவில்லை என்னும் பட்சத்தில் நம்மை அறியாமலேயே ஒரு விதமான சோகமும் வருத்தமும் நமக்கு ஏற்பட்டுவிடும். அந்த வேண்டுதல் நிறைவேறாததற்கு வேறு ஏதாவது காரணங்கள் கூட இருக்கலாம். பொதுவாகவே நாம் வேண்டிய வேண்டுதல் நிறைவேறவில்லை என்னும் பட்சத்தில் அதற்குரிய கர்ம வினைகளை நம் அனுபவிக்க வேண்டும் என்ற விதி எழுதி இருக்கும். அந்த விதியையும் மாற்றி நாம் வேண்டிய வேண்டுதலை பெறச் செய்யக்கூடிய ஒரு அற்புதமான ஒரு பாடலைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
பெருமாளை நினைத்து நம்மாழ்வார் பாடிய பாடலாக இந்த பாடல் திகழ்கிறது. இந்த பாடலை நாம் தினமும் காலையிலும், மாலையிலும் முழு மனதோடு பெருமாளை நினைத்து பாடிக்கொண்டே வரும்பொழுது விரைவிலேயே நாம் வைத்த வேண்டுதல் நிறைவேறும் என்று கூறப்படுகிறது. பெருமாளே கண் திறந்து என்னை பார்த்து எனக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகளை தீர்த்து என்னுடைய வேண்டுதலை நிறைவேற்று என்ற கூறும் வகையில் தான் இந்தப் பாடல் அமைந்திருக்கிறது.
இந்தப் பாடல் திருவாய்மொழி என்னும் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்ட பாடல் ஆகும். நம்மாழ்வார் திருவண்வண்டூர் என்னும் ஊரில் இருக்கக்கூடிய பெருமாளை நினைத்து பாடிய பாடலாக இந்த பாடல் திகழ்கிறது. அருகில் இருக்கக்கூடிய பெருமாள் ஆலயத்திற்கு சென்று அங்கு இருக்கும் பெருமாளை பார்த்து இந்த பாடலை பாட ஆரம்பிக்க வேண்டும். பிறகு தினமும் நம்முடைய வீட்டில் நாம் தீபம் ஏற்றும் பொழுது இந்த பாடலை பாடலாம். காலையிலும் பாடலாம், மாலையிலும் பாடலாம். இரண்டு வேளைகளிலும் பாடலாம். முழுமனதோடு பெருமாளை நினைத்து பாட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் தொடங்கும் பொழுது பெருமாள் ஆலயத்தில் இந்த பாடலை பாடி தொடங்க வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பாடல்
“திறங்கள் ஆகி எங்கும் செய்கள் ஊடு உழல் புள்ளினங்காள்
சிறந்த செல்வம் மல்கு திருவண்வண்டூர் உறையும்
கறங்கு சக்கரக் கனிவாய்ப் பெருமானைக் கண்டு
இறங்கி நீர் தொழுது பணியீர் அடியேன் இடரே”
இதையும் படிக்கலாமே: கேட்டதை தரும் முருகர் வழிபாடு
இந்த ஒரு பாடலை முழுமனதோடு பெருமாளை நினைத்து பாடுபவர்களுக்கு பெருமாளின் அருளால் வேண்டிய வேண்டுதல் விரைவில் நிறைவேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.