- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalமனக்குழப்பத்தை நீக்கும் நட்சத்திர வழிபாடு

மனக்குழப்பத்தை நீக்கும் நட்சத்திர வழிபாடு

- Advertisement -

நாம் ஒவ்வொருவருக்கும் நம்முடைய வாழ்க்கையில் ஏதாவது ஒரு சூழ்நிலையில் ஒரு முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நிலை என்பது ஏற்பட்டு இருக்கும். அந்த முடிவை எடுக்க முடியாமல் பலவிதமான குழப்பத்துடன் இருப்போம். சரியான முடிவை எடுத்து விட்டால் நல்லது நடக்கும். அதுவே தவறான முடிவை எடுத்தோம் என்றால் நம் வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகள் உண்டாகும் அல்லவா? அதனால் பலரும் இப்படிப்பட்டான சூழ்நிலை வரும் பொழுது மனக்குழப்பத்தில் ஆழ்ந்த இருப்பார்கள். அப்படிப்பட்ட நேரத்தில் மனக்குழப்பத்தை நீங்கி தெளிவான முடிவை எடுப்பதற்கு செய்ய வேண்டிய ஒரு வழிப்பாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

மனக்குழப்பம் நீக்க நட்சத்திர வழிபாடு

நாம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு தெய்வம் குலதெய்வம் ஆகவும் இஷ்ட தெய்வமாகவும் இருக்கும். அப்படிப்பட்ட குலதெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் நினைத்துதான் இந்த ஒரு வழிபாட்டை நாம் செய்யப் போகிறோம். இந்த வழிபாட்டை நாம் செய்வதன் மூலம் நம்முடைய மனதில் இருக்கக்கூடிய குழப்பங்கள் அனைத்தும் நீங்கும். மேலும் ஒரு தெளிவான முடிவை எடுத்து சரியாக நடந்து கொள்ளவும் இது நமக்கு வழி நடத்தும். அப்படிப்பட்ட ஒரு நட்சத்திர வழிபாட்டை இப்பொழுது தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை இந்த நாளில் தான் செய்ய வேண்டும் இந்த நாளில் செய்யக்கூடாது என்று எந்த நிபந்தனையும் கிடையாது. அதேபோல் இந்த நேரத்தில் தான் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடும் கிடையாது. எப்பொழுது நம்முடைய மனம் குழப்பத்தில் இருக்கிறதோ? எப்போது நமக்கு தெளிவான முடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலை வருகிறதோ? அப்பொழுது இந்த வழிபாட்டை நாம் செய்யலாம். இந்த வழிபாட்டை நாம் இரண்டு விதங்களில் செய்யலாம். இரண்டிலும் பொதுவாக இருப்பது நட்சத்திரம் மட்டுமே. முருகப்பெருமானுக்கு நாம் நட்சத்திர கோலம் போடுவோம் அல்லவா? இரண்டு முக்கோணங்களை போட்டு அந்த நட்சத்திரத்தை பயன்படுத்தி தான் இந்த வழிபாட்டை செய்ய போகிறோம்.

முதலில் நம் வீட்டு பூஜை அறையில் தரையை சுத்தம் செய்து கொள்ளுங்கள். பச்சரிசி மாவினால் ஆறு நட்சத்திரங்களை ஒன்றுக்கு பக்கத்தில் மற்றொன்று என்ற வீதம் வரிசையாக போட்டுக் கொள்ளுங்கள். இந்த நட்சத்திரத்திற்கு நடுவே ஒவ்வொரு அகல் விளக்காக ஆறு விளக்கையும் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபம் கிழக்கு திசை பார்த்தவாறு இருக்க வேண்டும். பிறகு உங்களுடைய குலதெய்வத்தையோ இஷ்ட தெய்வத்தையோ மனதார நினைத்துக் கொண்டு இந்த தீபச்சுடர்ளியை பார்த்தவாறு உங்களோட பிரச்சனைகள் அனைத்தும் தீர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

வீட்டு பூஜை அறையில் இப்படி நட்சத்திர கோலம் போடுவதற்குரிய வாய்ப்புகள் இல்லை என்பவர்கள் ஒரு வெள்ளை நிற பேப்பரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 54 முறை நட்சத்திரங்களை வரிசையாக வரைய வேண்டும். பிறகு உங்களுடைய இஷ்ட தெய்வ அல்லது குலதெய்வத்தின் பெயரை அந்த நட்சத்திரத்திற்கு நடுப்பகுதியில் எழுதி சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும். பேப்பரில் நட்சத்திரத்தை வரைவதற்கு முன்பாகவே உங்களுடைய மன குழப்பம் முற்றிலும் தீர வேண்டும் என்று வேண்டிக் கொண்டுதான் வரைய ஆரம்பிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நம்முடைய மனதில் ஒருவித தெளிவு உண்டாகும். இதை செய்து முடித்த பிறகு நாம் செய்யக்கூடிய எந்த காரியமாக இருந்தாலும் அந்த காரியத்தில் எந்தவித தடைகளும் வராது வெற்றிகள் மட்டுமே உண்டாக்கும்.

இதையும் படிக்கலாமே: கடன் பிரச்சினையை தீர்க்கும் தோரண கணபதி வழிபாடு By Dhurga SEP 15, 2025, 08:16AM IST

முருகப்பெருமானுக்கு மட்டும் தான் நட்சத்திரம் உகந்தது என்று இல்லை. எந்த தெய்வமாக இருந்தாலும் அந்த தெய்வத்தின் நாமத்தை நட்சத்திரத்தில் எழுதி வழிபாடு செய்யும்பொழுது அந்த நட்சத்திரத்திற்கு என்று தனித்துவமான சக்திகள் ஏற்படும். மிகவும் எளிமையான இந்த வழிபாட்டை மேற்கொண்டு நம்முடைய மனக்குழப்பத்திலிருந்து வெளியே வரலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்