- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநாளை 21-09-2025 மகாளய அமாவாசை வழிபாடு செய்ய வேண்டிய நல்ல நேரம்

நாளை 21-09-2025 மகாளய அமாவாசை வழிபாடு செய்ய வேண்டிய நல்ல நேரம்

- Advertisement -

நாளைய தினம் மகாளய அமாவாசை. நாம் எல்லோருக்கும் புரியும்படி சொல்லப் போனால் இது பெரிய அமாவாசை. மற்ற அமாவாசை தினங்களில் முன்னோர்களுக்கு வழிபாடு செய்கின்றோமோ இல்லையோ, இந்த புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளயா அமாவாசை அன்று முன்னோர்களை நினைத்து திதி தர்ப்பண, வழிபாடுகளையும் அவர்களுக்கு படையல் போடும் வழிபாடுகளையும், மனநிறைவோடு செய்து விட வேண்டும். இதில் யாரும் குறை வைக்கக்கூடாது.

இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம். நாளைய தினம் வரக்கூடிய மகாளய அமாவாசைக்கு இரட்டிப்பு சிறப்பு. காரணம் பித்ரு காரகனான சூரிய பகவானுக்கு உரிய ஞாயிற்றுக்கிழமையே இந்த அமாவாசை திதி வந்திருக்கிறது. சூரியனை முன்னிலையில் வைத்து தான் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யப்படும். அப்பேற்பட்ட சூரிய பகவானுக்கு உரிய ஞாயிற்றுக்கிழமையில் வந்திருக்கும் இந்த அமாவாசையை நாம் தவறவிட்டால் அது மிகப்பெரிய பாவம்.

- Advertisement -

இந்த சக்தி வாய்ந்த அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டிய நல்ல நேரம் என்ன. படையல் போட வேண்டிய நல்ல நேரம் என்ன, இதை பற்றிய ஆன்மிகம் சார்ந்த சில தகவல்களைத் தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

மகாளய அமாவாசை தர்ப்பணம் கொடுக்கும் நேரம்

ஞாயிற்றுக்கிழமை காலை 6:00 மணியிலிருந்து 12:00 மணி வரை தர்ப்பணம் கொடுப்பதற்கு உகந்த நேரம் தான். அதிலும் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை காலை 6 டு 7 சூரிய ஹோரை இருக்கிறது. கூடுமானவரை இந்த 1 மணி நேரத்தில் தர்ப்பணம் கொடுக்க பாருங்கள். நாளைய தினம் ஆற்றங்கரை ஓரம், கடற்கரை, பிரபல்யமான கோவில் குலத்தங்கரையில் எல்லாம் இந்த தர்ப்பணம் கொடுக்கக்கூடிய சாங்கியம் நடைபெறும்.

- Advertisement -

அதாவது இதற்காக பிரத்தியேகமாக, பிராமினர்கள் அந்த இடத்தில் இருப்பார்கள். அவர்களை முன்னிலையில் வைத்து திதி தர்ப்பணம் கொடுப்பது நம்முடைய குடும்பத்திற்கு ரொம்ப ரொம்ப நல்லது. வாய்ப்பு உள்ளவர்கள் இதை செய்ய தவற விட வேண்டாம். பிராமினரை வைத்து இந்த தர்ப்பணம் கொடுக்க முடியவில்லை என்றாலும், ஒரு தாம்பூல தட்டில் எள்ளும் தண்ணீரும் இறைத்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம் தவறு ஒன்றும் கிடையாது.

மகாளய அமாவாசை படையல் போடும் நேரம்

ஞாயிற்றுக்கிழமை காலை 11:00 டு 11:45 மணி வரை நல்ல நேரம் இருக்கிறது. முடிந்தவர்கள் அந்த நேரத்தில் இறந்தவர்களுக்கு படையல் போடலாம். இதை தவிர விட்டால் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1:30 மணியிலிருந்து 2:00 மணி வரை படையல் போடலாம். (ஞாயிற்றுக்கிழமை மதியம் 1:30 டு 2:00 சூரிய ஹோரை அடங்கும். இந்த நேரத்தில் படையல் போட்டால் அதிசிறப்பு). ஞாயிற்றுக்கிழமை 12:00 டு 1:30 எமகண்ட நேரம் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே அந்த நேரத்தில் முன்னோர்கள் படையல் வழிபாட்டை தவிர்ப்பது நல்லது.

- Advertisement -

மஹாளய அமாவாசை திதி தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் என்ன செய்வது

மற்ற நாட்களில் எல்லாம் மறைந்த முன்னோர்கள் எமலோகத்தில் இருப்பார்கள். இந்த மகாளய பட்ச 15 நாட்களும், முன்னோர்கள் இந்த பூமியில் இருப்பார்கள். உங்கள் வீட்டில் தான் இருப்பார்கள். அவர்களை நீங்கள் அழைக்கவே வேண்டாம். உங்கள் வீடு தேடி வந்திருக்கும் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து அவர்கள் பசியை ஆற்றி மீண்டும் அவர்களை பித்ருலோகத்திற்கு அனுப்புவது தான் சரி.

இதையும் படிக்கலாமே: ஒரு ரூபாய் கூட கடன் இல்லாமல் வாழ ஒரு ரூபாய் பரிகாரம்

எங்களால் முடியாது என்பவர்கள், திதி தர்ப்பணம் வழிபாட்டை நாளை செய்ய முடியவில்லை என்றால், உங்கள் கைகளால் 10 பேருக்கு அன்னதானம் வாங்கிக் கொடுங்கள். உண்மையாக பசியோடு இருக்கும் ஏழை எளியவர்களுக்கு, இதனால் வரை நல்ல சாப்பாடே சாப்பிடாத ஒரு பத்து ஏழைகளுக்கு உங்கள் கையால் நாளை தினம் சாப்பாடு வாங்கி கொடுத்து விட்டால் போதும். அந்த முன்னோர்களின் ஆசி உங்களுக்கு நிச்சயம் பரிபூரணமாக கிடைக்கும் என்ற தகவலுடன் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்