- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபுரட்டாசி மாதம் புதன்கிழமை பரிகாரம்

புரட்டாசி மாதம் புதன்கிழமை பரிகாரம்

- Advertisement -

புரட்டாசி மாதம் சனிக்கிழமைக்கு எவ்வளவு பவர் இருக்கிறதோ, அதே அளவுக்கு புரட்டாசி மாதம் புதன்கிழமைக்கும் பவர் இருக்கு. புரட்டாசி மாதம் சனிக்கிழமை, பெருமாளை எப்படி வழிபாடு செய்வீர்களோ, அதே போல் தான் புரட்டாசி மாதம் வரும் புதன்கிழமையிலும் பெருமாள் வழிபாடு செய்வது சிறப்பு என்று சொல்கிறது நம்முடைய சாஸ்திரம். எப்படி தெரியுமா?

புரட்டாசி மாதம் சூரிய பகவான், கன்னி ராசியில் இருக்கிறார். கன்னி ராசி என்பது புதன் பகவானுக்கு உரிய ராசி. புதனுக்கு உரிய அதிதேவதை பெருமாள். அதனால் தான் இந்த புரட்டாசி மாதத்தில் பெருமாள் வழிபாடு சிறந்தது என்று சொல்கிறார்கள். பெருமாளின் இதயத்தில் குடியிருப்பது அம்பாள்.

- Advertisement -

இந்த புரட்டாசி மாத புதன்கிழமையில் தாயாரையும் சேர்த்து வழிபாடு செய்வது நம்முடைய குடும்ப கஷ்டத்தை தீர்க்கும். தாயாரை வழிபட பெருமாள் ஓடோடி வருவார். பெருமாளை வழிபட, தாயார் நம்மை நோக்கி ஓடோடி வந்துருவாங்க. ஆகவே இந்த இரண்டு வழிபாடுகளையுமே புரட்டாசி மாதத்தில் முக்கியம் தான்.

புரட்டாசி புதன்கிழமை வழிபாடு

உங்கள் வீட்டு பக்கத்தில் பெருமாள் கோவில் கட்டாயம் இருக்கும். பெருமாள் கோவிலில் தாயார் கட்டாயம் இருப்பார்கள். பெருமாள் கோவிலில் இருக்கும் தாயாருக்கு புதன்கிழமை பின் சொல்லக்கூடிய முறையில் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

- Advertisement -

ஒரு தாம்பூல தட்டில் பச்சை நிற புடவை, பச்சை நிற வளையல், பச்சை நிறத்தில் இருக்கும் பழங்கள், பச்சை நிறத்தில் இருக்கும் மரிக்கொழுந்து, இதுபோல பச்சை நிறத்தில் என்ன மங்களப் பொருட்கள் எல்லாம் உங்களால் சேகரிக்க முடியுமோ, அவைகளை எல்லாம் வாங்கி வைத்து, தாயாருக்கு தானமாக கொடுக்க வேண்டும். உங்கள் வாழ்க்கை பசுமையாக மாற இந்த வழிபாடு உங்களுக்கு வழிவகுக்கும்.

போராட்டம் தான் என்னுடைய வாழ்க்கை. போராடி போராடி வாழ்க்கையே வெறுத்துப் போய்விட்டது. இனிமேல் என்னுடைய வாழ்க்கையில் சந்தோஷம் என்பதே வராது என்று கஷ்டப்படுபவர்கள் கூட புரட்டாசி மாதத்தில் வரும் புதன்கிழமை, தாயாருக்கு பச்சை நிறத்தில் இருக்கும் பொருட்களை வாங்கி தானம் கொடுத்தீர்கள் என்றால், எவ்வளவு பெரிய துன்பமும், எவ்வளவு பெரிய பூகம்பமும், மலைபோல் கஷ்டமும் பணி போல் விளங்கும் இது நிதர்சனமான உண்மை. புரட்டாசி புதன்கிழமையில் பெருமாளுக்கு ஒரு பட்டு அங்க வஸ்திரம் வேட்டி வாங்கி கொடுப்பதும் சிறப்பு வாய்ந்த பலனை கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே: 21 வாரத்தில் திருமண தடை விலக முருகன் பரிகாரம்

இதனுடன் தாயாருக்கு பச்சை நிற பிரசாதம் செய்வது சிறப்பு. புதினா சாதம், கொத்தமல்லி சாதம், கருவேப்பிலை சாதம் எதுவுமே முடியல பச்சை பயிறு சுண்டல் செய்து கொண்டு போய் நெய்வேதியம் வைத்து, நான்கு ஏழைகளுக்கு தானமாக கொடுத்து விடுங்கள். இவ்வளவுதாங்க வழிபாடு. புரட்டாசியில் வரும் புதன்கிழமையில் இதை செய்துதான் பாருங்களேன் உங்கள் தலையெழுத்து நிச்சயம் மாறும் இந்த தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்