இன்று 26-09-2025 புரட்டாசி மாதத்தில் வந்திருக்கும் நிறைந்த வெள்ளிக்கிழமை. இந்த நாளில் ஒவ்வொரு வீட்டிலும் மகாலட்சுமி வழிபாடு செய்வது மிக மிக அவசியம். புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாள் வழிபாடு செய்தால் குடும்ப கஷ்டம் நீங்கும் என்று சொல்லுவார்கள். புரட்டாசி மாதத்தில் வரவிருக்கும் வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி வழிபாடு செய்தால் குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் பெருகும் என்பதும் நம்பிக்கை. அதுவும் இல்லாமல் இது நவராத்திரியில் வந்திருக்கும் வெள்ளிக்கிழமை.
இந்த நாளில் உங்கள் வீட்டில் பூஜை அறையில் செய்ய வேண்டிய ஒரு எளிமையான வழிபாட்டு முறையை பற்றி தான் இன்றைய பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த நாளில், இந்த எளிய வழிபாடு உங்களுக்கு நவராத்திரி கொலு வைத்த பலனையும் கொடுக்கும். அதே சமயம் வீட்டில் ஒரு அஸ்வமேத யாகம் நடத்திய பலனையும் கொடுக்கும்.
புரட்டாசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமி வழிபாடு
பூஜை அறையை சுத்தம் செய்து அரிசி மாவால் கோலம் போட்டுக் கொள்ளுங்கள். அதன் மேலே கொஞ்சம் பெரிய மண் அகல் விளக்கை வைத்து, அதன் மேலே ஒரு பஞ்சகவிய விளக்கை வைக்க வேண்டும். நாம் அனைவருக்கும் தெரியும் மகாலட்சுமியின் ஸ்ரூபமான பசுவிலிருந்து எடுக்கப்பட்ட பொருட்களில் இருந்து செய்யப்பட்ட விளக்கு தான் பஞ்சகவ்ய விளக்கு.
இந்த ஒரு விளக்கை வீட்டில் ஏற்றுவதன் மூலம் வீட்டில் இருக்கும் துர் சக்திகள் வெளியேறும். வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும். உங்களுடைய பிரார்த்தனை கூடிய விரைவில் நிறைவேறும். இந்த ஒரு விளக்கிலிருந்து வெளிவரக்கூடிய புகை உங்களுடைய வீட்டில் ஒரு பெரிய யாகம் நடத்திய பலனை கொண்டு வந்து சேர்க்கும் என்று சொன்னால் அது மிகையாகாது.
அரிசிமா கோலத்திற்கு மேலே பஞ்சகவ்விய விளக்கை வைத்து, கொஞ்சமாக நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபத்தை எறிய விடுங்கள். தீபம் எரிந்து முடிந்தவுடன் இந்த விளக்கை அணைத்து விடக்கூடாது. அந்த பஞ்ச கவ்ய விளக்கானது முழுவதுமாக நெருப்பு பிடித்து எரிந்து அனையும் வரை காத்திருக்க வேண்டும். இதில் மீதமாக இருக்கும் சாம்பல் புனிதமான திருநீற்றுக்கு சமம்.
தினமும் இந்த சாம்பலை அப்படியே நெற்றியில் வைத்து வர நீங்கள் எப்போதும் லக்ஷ்மி கடாட்சத்துடன் இருப்பீர்கள். தரித்திரம் பீடை உங்கள் உடம்பை பிடிக்காது. இத்தனை சக்தி வாய்ந்த இந்த பஞ்சகவ்விய விளக்கை எந்த நாளில் வீட்டில் ஏற்றினாலும் தவறு கிடையாது.
இதையும் படிக்கலாமே: பணவசிய தாந்த்ரீக பஞ்சமி பரிகாரம்
குறிப்பாக புரட்டாசி மாதம் வெள்ளிக்கிழமை, நவராத்திரி நடந்து கொண்டிருக்க கூடிய இந்த சமயத்தில், இந்த விளக்கை உங்கள் வீட்டில் ஏற்றுவது சுபிட்சத்தை கொண்டு வந்து சேர்க்கும் என்ற இந்த தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.